புத்தக கண்காட்சியில் வித்தியாசமான அரங்குகள்!| Dinamalar

புத்தக கண்காட்சியில் வித்தியாசமான அரங்குகள்!

Added : ஜன 18, 2015
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

சென்னை ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் நடந்து வரும் புத்தக கண்காட்சியில், வித்தியாசமான அரங்குகளும், அரங்குகளில் இருந்த வித்தியாசங்களும், அனைவரையும் கவர்கின்றன.இயல் வாகை: வித்தியாசங்களில் கூட இயல்பானதாய் இருக்கிறது, 'இயல்வாகை' பதிப்பகத்தின், '௧௪௨ பி' எண் அரங்கு. அது, இயற்கை பொருட்களால் அழகூட்டப்பட்டிருக்கிறது. அங்கு, இருபதுக்கும் மேற்பட்ட தலைப்புகளில், இயற்கை விவசாயம், காடு, தமிழர் வாழ்வு சார்ந்த புத்தகங்கள் இருக்கின்றன. 'கிரீன், நவீன வேளாண்மை' உள்ளிட்ட அரங்குகளிலும், 50க்கும் மேற்பட்ட இயற்கை விவசாயம், சிறுதானிய பயன்பாடு, உடல்நலம் சார்ந்த புத்தகங்கள் இருக்கின்றன. ஆனந்தம்: பிளஸ் 2க்கு பின், படிக்க இயலாத, தகுதியான மாணவர்களின், கல்வி வழிகாட்டியாக வாசகர்களை இணைக்கிறது, ௬௧௪ம் எண் 'ஆனந்தம்' அரங்கு. கர்ணவித்யா: விழி இழந்தோருக்கு, வழிகாட்டுகிறது, 'கர்ண வித்யா தொழில்நுட்ப மையம்'. 'உங்களுக்கு தெரிந்த, பார்வை மாற்றுத்திறனாளிகளை எங்களிடம் அனுப்புங்கள். அவர்களுக்கு, கணினி உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்பங்களையும் கற்பித்து, வாழ்வில் உயர்த்துகிறோம்' என்கின்றனர், அந்த மையத்தினர். சென்னை பல்கலை: தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளின், அகராதிகள், ஆய்வுகள் உள்ளிட்ட அனைத்து புத்தகங்களும், வரலாறு, தொல்லியல், மானிடவியல், குற்றவியல் என, பல்வேறு துறைகள் சார்ந்த விரிவான புத்தகங்களும், சென்னை பல்கலையின், ௫௬௯ம் எண் அரங்கில் கிடைக்கின்றன. மக்கள் தொகை துறை: இந்திய அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்பு நிறுவனத்தின், நிலவியல், அரசியல் வரைபடங்களும், மாநில வாரியான வரலாற்று பதிவுகளும், மக்கள் தொகை பற்றிய புள்ளி விவரங்களும், 223ம் எண், இந்திய மக்கள் தொகை அரங்கில் கிடைக்கின்றன.ஆதார் அட்டை குறித்த இலவச விளக்கத்தையும், இங்கு பெறலாம். செம்மொழி நிறுவனம்: செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் ௧98ம் எண் அரங்கில், பழந்தமிழ் பாக்களின் குறுந்தகடுகளும், புத்தகங்களும் சலுகை விலையில் கிடைக்கின்றன. மேலும், சிந்துவெளியும் சங்க தமிழும் குறித்த அரிய ஆய்வு நுால்களும் கிடைக்கின்றன. உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்: அகராதி துவங்கி, சமீப கால படைப்புகள் வரை, இந்த நிறுவனத்தால் பதிப்பிக்கப்பட்ட 400க்கும் மேற்பட்ட நுால்கள், ௨௪௨ம் எண் அரங்கில் இடம்பெற்றுள்ளன. கீழ்த்திசை சுவடிகள் நுாலகம்: காலத்தால் முந்திய ஓலை சுவடிகளையும், பிந்திய தாள் சுவடிகளையும் கொண்டுள்ள கீழ்த்திசை சுவடிகள் நுாலகத்தால் பதிப்பிக்கப்பட்டுள்ள, இலக்கிய, அகழாய்வு, வரலாற்று ஆவணங்கள் புத்தக வடிவில், ௧௮௧ம் எண் அரங்கில் கிடைக்கின்றன.மற்றவை: இணைய வழியில், மென்பொருள் கல்வி கற்று தரும், 'விங்க்ஸ்லைவ்.காம்'; தமிழ் வழியில், மென்பொருள் கல்வி கற்பிக்கும், 'விர்ச்சுவல் டீச்சர்'; அலைபேசி வழியாக கல்வி கற்பிக்கும், செயலிகளை கொண்டுள்ள, 'ஜனா அகாடமி'; கையால் எழுதி, கணினியில் எழுத்துருவை மாற்றும் வசதி தரும் 'பொன்மொழி'; குழந்தை பாடல்கள் முதல், சமச்சீர் கல்வி வரை அனைத்து பாடங்களையும் அனிமேஷன் முறையில் கற்பிக்கும், 'பெபிள்ஸ்' உள்ளிட்ட பல்வேறு அரங்குகளில் கல்வியின் அடுத்த பரிமாணங்கள் உள்ளன.
-நடுவூர் சிவா -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X