சோனியாவை விமர்சிக்கும் புத்தகம் ; காங்., பயங்கர எதிர்ப்பு "யுத்தம்": எழுத்தாளர் வேதனை

Updated : ஜன 19, 2015 | Added : ஜன 19, 2015 | கருத்துகள் (60)
Advertisement
சோனியாவை விமர்சிக்கும் புத்தகம் ; காங்., பயங்கர "யுத்தம்": எழுத்தாளர் வேதனை

புதுடில்லி: " தி ரெட் சாரி " என்ற தலைப்பில் ஸ்பெயின் நாட்டு எழுத்தாளர் ஜாவியர் மாரோ எழுதியுள்ள சோனியாவின் வரலாற்று நூலுக்கு எதிராக காங்கிரஸ் பயங்கர பிரசார யுத்தத்தை துவக்கி இருப்பதாக நூலாசிரியர் மாரோ குற்றம் சாட்டியுள்ளார். டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:


சோனியா தொடர்பான இந்த புத்தகம் தற்போது இந்தியாவில் வெளியாகி உள்ளது. இந்த புத்தகம் இந்தியாவிற்குள் வராமல் தடுக்க காங்கிரசார் பெரும் பகீரத பிரயத்தனம் செய்தனர். ஆங்கில புத்தக வெளியீட்டாளர்களை, ஒரு காங்கிரஸ் தலைவர் பகிரங்கமாகவே மிரட்டினார்.


இ-மெயில் மூலம் மிரட்டல் : அந்த புத்தகத்தை அனைத்து கடைக்காரர்களிடமிருந்தும் உடனடியாக திரும்ப பெறுமாறு, ஸ்பெயின் நாட்டு வெளியீட்டாளர்களுக்கு இ-மெயில் மூலம் காங்கிரசார் மிரட்டல் கடிதம் அனுப்பினர். இவ்வளவுக்கும் அப்போது இந்த புத்தகம் ஆங்கிலத்தில் வெளியாகவில்லை; ஸ்பேனிஷ், இத்தாலி மற்றும் இதர மொழிகளில்தான் வெளியிடப்படடிருந்தது. இத்தகைய மிரட்டல் இ-மெயில்களால், 6 மாத காலத்திற்கு நான் இ-மெயில் பார்ப்பதையே நிறுத்தியிருந்தேன். சோனியாவின் இமேஜைப் பாதுகாக்க காங்கிரசார் இத்தகைய பயங்கர நடவடிக்யையில் இறங்கினர்.

பிஸ்ஸாவையே சாப்பிடுவீர்கள் : அவர்கள் சோனியாவை ஒரு ரோபோவாக மாற்றியிருந்தனர். சோனியாவை ஒரு இந்தியர் என்று நிரூபிப்பதில் மிகுந்த அக்கறை காட்டினர். உண்மைக்கு மாறான ஒரு தோற்றத்தை உருவாக்க முயற்சி செய்தனர். உண்மையில் சோனியா இந்தியராக மாற முயற்சி செய்திருக்கக்கூடும். ஆனால் ஒருமுறை நீங்கள் பிஸ்ஸா சாப்பிட ஆரம்பித்தால், எப்போதும் பிஸ்ஸாவையே சாப்பிடுவீர்கள். நான் ஒருமுறை டில்லியில் உள்ள லா பிஸ்ஸா என்ற உணவகத்திற்குச் சென்றபோது, அங்கு சோனியாவும் அவருடைய குடும்பத்தினரும் இத்தாலிய உணவை விரும்பி உண்டு கொண்டிருந்ததைப் பார்த்தேன். இது இயற்கையான ஒன்று.இதில் என்ன தவறு இருக்கிறது? அவர் இந்தியாவை ஆண்டு கொண்டிருக்கலாம்; ஆனால் அவர் அப்போதும் இத்தாலியர்தான்.


ஆனால் காங்கிரஸ்தான் அவருடைய இத்தாலிய தன்மைகளை மாற்ற முயற்சி செய்தது. அவரை கடவுளாக சித்தரிக்கும் முட்டாள்தனமான முயற்சியில், அவரைச் சுற்றியிருந்த காங்கிரஸ் தலைவர்கள் ஈடுபட்டிருந்தனர். அது சரி இந்த புத்தகத்தில் காங்கிரசாருக்கு பிடிக்காத விஷயங்கள் என்னதான் இருக்கிறது?


இத்தாலிய நகரான டோரினோ அருகே ஒரு விவசாயியாக இருந்து பின்னர் ரியல் எஸ்டேட் தொழில் அதிபராக மாறிய ஒருவரின் மகளாக பிறந்த சோனியா, அலிடாலியா விமான நிறுவனத்தில் பணிப்பெண்ணாக பணியாற்ற விரும்பினார். இத்தகைய ஒருசாதாரண இத்தாலிய பெண்ணான அவர் எப்படி இந்தியாவின் ஆட்சியாளராக, உலகின் சக்தி வாய்ந்த பெண்களில் ஒருவராக மாறினார் என்பதையே " தி ரெட் சாரி " என்ற இந்த புத்தகம் விவரிக்கிறது. சோனியாவை ராஜிவ் திருமணம் செய்து கொண்டபோது, சோனியாவை இந்தியர்கள் புலிகளுக்கு இரையாக்கி விடுவார்களோ என்று சோனியாவின் தந்தையான ஸ்டெபனோ மெய்னோ அஞ்சினார்.


உங்களுடன் உறங்கிக் கொண்டிருக்கிறேன் " சோனியா உயர்குடியில் பிறந்தவரல்ல; ஆனால் அவரை அரச குடும்பத்தைச் சேர்ந்தவராக காட்ட காங்கிரசார் முயற்சி செய்தனர். என்னுடைய உறவினரான டொமினிக் லேப்பியர் ( " இரவில் கிடைத்த சுதந்திரம் " என்ற நூலை எழுதியவர்) பத்ம பூஷன் விருது பெற்றபோது, காங்கிரஸ் தலைவரை ( சோனியா) சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது, " நான் உங்களுடன் 4 ஆண்டுகளாக உறங்கிக் கொண்டிருக்கிறேன் " என்று அவரிடம் கூறினேன். அதாவது அவர் தொடர்பான இந்த புத்தகத்தை எழுதுவதில் ஆழ்ந்து போயிருக்கிறேன் என்ற கருத்தில் அவ்வாறு கூறினேன். அதைக் கேட்டதும் சோனியா அதிர்ந்து போனார்; பின்னர் சமாளித்துக் கொண்டு சிரித்தார். என்னிடம் அவர் கூறிய ஒரே தகவல்: " நான் எப்போதுமே என்னைப் பற்றி எழுதப்படும் எதையுமே படிப்பதில்லை ". சோனியா எப்போதுமே ஊடகங்களிலிருந்து ஒதுங்கியே இருக்க விரும்பினார்; தன்னைப் பற்றி மற்றவர்கள் பேசுவதை வெறுத்தார்; அவரைச் சந்திக்க நான் முயன்றபோதெல்லாம், அவருடைய அலுவலக, வீட்டுக் கதவுகள் மூடியே இருந்தன.

" இந்தியாவில் நெருக்கடி நிலை பிறப்பிக்கப்பட்டபோது, சோனியா தனது குழந்தைகளுடன் இத்தாலிக்கு திரும்ப விரும்பினார் " என்று நான் இந்த புத்தகத்தில் குறிப்பிட்டிருப்பதைத்தான், காங்கிரசார் கடுமையாக எதிர்த்தனர். கோடிக்கணக்கான இந்தியர்களை ஆட்சி செய்யும் தான் ஒரு இத்தாலியர் என்பதுதான் அவருடைய மிகப்பெரிய பிரச்னையாக இருந்தது. இதைத்தான் காங்கிரஸ் மறைக்க முயற்சி செய்தது.

சோனியாவை சாதாரண ஒரு பெண்ணாக பார்த்து எனக்கு தெரிந்த விவரத்தை அனைத்தும் உண்மை மற்றும் ஆதாரத்தின் அடிப்படையில் தான் எனது புத்தகத்தில் எழுதியுள்ளேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (60)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Amjath - Dammam,சவுதி அரேபியா
19-ஜன-201520:41:04 IST Report Abuse
Amjath மேற்கத்தியர்கள் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் தனி நபர் விமர்சனம் என்ற ஒரு கீழ்த்தரமான நிலைக்கும் கீழே சென்று கொண்டிருகிறார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம்.. இதனால் சோனியாவிற்கு இந்தியர்கள் மத்தியில் மதிப்பு கூடுமே தவிர குறைய போவதில்லை..
Rate this:
Share this comment
Venkat Iyer - Mumbai,இந்தியா
20-ஜன-201501:27:47 IST Report Abuse
Venkat Iyerஇந்தியர்கள் புத்தகம் படித்து மதிப்பளிப்பதில்லை.அவர் சிங் மூலம் ஆட்சி செய்த விதத்தை பார்த்து அதல பாதாளத்தில் இருக்கிறது மதிப்பு....
Rate this:
Share this comment
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
19-ஜன-201519:07:04 IST Report Abuse
Kasimani Baskaran மொத்தத்தில் மணிமேகலையை வெள்ளையடிக்க செய்யப்பட கதை... தரக்குறைவான ஆங்கிலம்...
Rate this:
Share this comment
Cancel
Vinod K - London,யுனைடெட் கிங்டம்
19-ஜன-201515:57:37 IST Report Abuse
Vinod K அவர் அனைவரையும் கிண்டல் செய்வார். மணிமேகலையை கிண்டல் செய்தால் கேட்பவர் யார் என்ற மமதையால் தான்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X