நேரு குடும்பத்தில் இருந்து ஒரு குரல்| Dinamalar

நேரு குடும்பத்தில் இருந்து ஒரு குரல்

Updated : ஜன 22, 2015 | Added : ஜன 22, 2015 | கருத்துகள் (3)
Advertisement
நேரு குடும்பத்தில் இருந்து ஒரு குரல்

நேரு தன் வாழ்வின் பெரும் பகுதியை ஏகாதிபத்தியங்களின் யுகத்தில் கழித்தார். தங்களுக்கென சொந்த பெயர்களையும், பழமையான நாகரிகங்களையும் கொண்டிருந்த நாடுகள் அப்போது ஐரோப்பாவின் 'உடைமைகளாக', ஐரோப்பாவுக்குச் சொந்தமானவை என்பதைக் குறிக்கும் வகையில் பிரிட்டிஷ் இந்தியா, டச்சு கிழக்கிந்தியா, பிரெஞ்சு இந்தோ-சீனா, ஜெர்மானிய கிழக்கு ஆப்பிரிக்கா என்று பட்டப் பெயர்களைத் தொங்கவிட்டுக் கொண்டிருந்தன. நேருவின் வாழ்க்கை இந்தியா சுதந்தரம் பெறும் வரை, பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சியிலேயே கழிந்தது. பிரதமர் என்ற முறையில் அவர் பணியாற்றிய ஆண்டுகள், பயங்கரமான ஆயுத பலம் கொண்ட இரண்டு புதிய வல்லரசுகள், ஏற்கெனவே ஏகாதிபத்தியங்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த இடத்தைக் கைப்பற்றுவதற்காகப் போட்டி போட்டுக் கொண்டிருந்த வேளையில், கறைபடிந்த ஏகாதிபத்தியங்களினால் ஏற்பட்ட சிக்கல்களின் விளைவுகளை அவிழ்க்கும் பணியில் கழிந்தன. இரண்டாம் உலகப் போரினால் விளைந்த இந்த அச்சுறுத்தும் நிலவரத்தில் அவரது அயலுறவுக் கொள்கை இரு வல்லரசுகளில் எதனுடனும் கூட்டு சேர்வதை நிராகரித்தது. போருக்கான மாபெரும் ஆயத்தங்களின் பின்னணியில், அதை கந்தலாகிப் போன மெல்லிய துணியைக் கொண்டு மூடுவது போலத்தான் 'அமைதி' என்பது நேருவுக்கு ஒரு மாயத் தோற்றமாகத் தெரிந்தது. இந்த மாயத் தோற்றத்தில் இருந்து வெளியே வந்த அணி சேராமை என்பது பதற்றங்களைத் தணிப்பதற்கும், அமைதிக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கும், உலக நிகழ்வுகள் பிரச்னைகள் குறித்து ஒரு சுதந்தரமான, மேற்பார்வை செய்யப்படாத மதிப்பீட்டுக்கு வருவதற்கும் வழி வகுத்தது. உருவெடுத்த இந்த இயக்கம் ஆசியர்களுக்கும், ஆப்பிரிக்கர்களுக்கும் உலக விவகாரங்களில் உரிய இடத்தைப் பெறுவதற்கு வழி கோலியது. ஆசியாவில், பனிப் போரினால் தூண்டப்பட்ட கொள்கைத் திட்டத்துக்கு காஷ்மீர் ஓர் ஆரம்பகால உதாரணம். உடன்பாட்டுக்கும் தீர்வுக்கும் அது தடையாக இருந்து வருகிறது. இந்த நூலில் காஷ்மீரை நான் விட்டுவிட்டேன். ஏனெனில், அதற்கெனவே தனியாக ஒரு நூல் அவசியம்.அடிப்படையான மனிதத் தேவை என்ற முறையில், காலனியாதிக்கக் கால தேக்க நிலையில் இருந்து இந்தியாவை மேலே கொண்டு வருவதற்கும், ஒரு நவீன இந்தியாவைக் கட்டி அமைப்பதற்கான ஒரு முன்நிபந்தனை என்ற வகையிலும் அமைதி என்பது நேருவுக்கு முதன்மையான குறிக்கோளாக இருந்தது. அதற்கு நிகராக, ஆசியா, ஆப்பிரிக்காவின் சுதந்தரத்துக்கும், எல்லா விதமான காலனியாதிக்கத்தை அகற்றுவதற்கும் அவர் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். பிரதானமாக, இந்தக் குறிக்கோள்களை அடையும் முயற்சியாகவே சர்வதேச விவகாரங்களில் அவர் செயலூக்கத்துடன் பங்கேற்றார். இந்தியாவின் குரலுக்கு வலிமை இருந்ததும், உலக மன்றங்களில் அந்தக் குரல் மதிப்புடன் காது கொடுத்து கேட்கப்பட்டது என்பதும் பொருளாதார வலிமையோ, படை வலிமையோ இல்லாத ஒரு நாட்டுக்குக் கிடைத்த தனிச்சிறப்பான பாராட்டாகும். உள்நாட்டில், எல்லோருக்கும் வாக்குரிமை என்ற அடித்தளத்தின்மீது அமைந்த ஜனநாயக அமைப்புக்குள் சோஷலிசத்தைக் கட்டி அமைக்க வேண்டும் என்ற அவரது உறுதிப்பாடு முன் உதாரணம் ஏதும் இல்லாத முயற்சியாகும். உள்நாட்டு, வெளிநாட்டு விவகாரங்களில் அவர் அளித்த வழிகாட்டுதல் என்பது எந்த வகையான உலகத்தை அவர் காண விரும்பினாரோ அந்தக் கண்ணோட்டத்தில் இருந்து நேரடியாகத் தோன்றியதாகும். இதை அவர், திட்டமிட்ட பொருளாதாரத்துக்கு உந்துதல் அளித்தல் போன்ற முயற்சிகளில் உள்நாட்டு அரசாங்கத்திடம் இருந்தும், ஐக்கிய நாடுகள் மன்றத்தில் உறுப்பினர் ஆவதற்கு கம்யூனிஸ்ட் சீனாவுக்கு உள்ள உரிமையை நிலைநாட்டுதல் போன்ற முயற்சிகளில் வெளிநாட்டு அரசுகளிடம் இருந்தும் போதிய ஆதரவு இருந்தும் இல்லாமலும் இருந்தபோதிலும் பின்பற்றினார். தேவைப்படும்போது தனியாக நடைபோடுவது என்பது அவரது அசையாத கொள்கைப் பிடிப்பு சார்ந்த விஷயமாகவும், அவரது செயல்பாட்டின் தனிப்பண்பாகவும் விளங்கியது.0என்னுடைய இந்த விரிவான விவரிப்பில் காணப்படும் அரசியல் வாழ்க்கையும் தனிப்பட்ட வாழ்க்கையும் கலந்த கலவையானது, என்னுடைய தாய் விஜயலட்சுமி பண்டிட்டின் கட்டுரைகளில் காணப்படும் பண்பாகும். இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை பிறக்கும்போது அவர் இருந்தார். விடுதலைக்குப் பிந்தைய முதல் பதினான்கு ஆண்டுகளின்போது, உலகின் மூன்று முக்கிய தலைநகரங்களான மாஸ்கோ, வாஷிங்டன், லண்டன் ஆகியவற்றில் அவர் இந்தியாவின் தூதராகப் பணியாற்றினார். அவரின் சகோதரரும் பிரதமருமான நேரு 1957 பிப்ரவரி 17ல் அவருக்கு பின்வருமாறு கடிதம் எழுதினார்: உன்னைப் பொறுத்தவரையில், உன்பால் எனக்கிருக்கும் ஆழமான அன்புக்கும் அப்பாற்பட்டு உன்னுடைய ஆற்றல், திறமை குறித்து நான் மிக உயர்ந்த மதிப்பு வைத்திருக்கிறேன் என்பதை நீ தெரிந்து கொள்ள வேண்டும்... இதனுடன் உன்னுடைய தனித்தன்மையான பண்புகளின் பெரும் மதிப்பையும் நாம் சேர்க்க வேண்டும். நேரடியான, உறுதியான மொழியில் பேசுவது என்பது பலரிடமும் இல்லாத பண்பாகும். உன்னிடமும் என்னிடமும் மட்டுமே இது இருப்பதாக நான் கருதுகிறேன்.என்னுடைய குடும்பம் பிரிட்டிஷ் ஆட்சியால் உருவாக்கப்பட்ட பூர்ஷ்வா வர்க்கத்தைச் சேர்ந்தது. போராட்டக் களத்தில் இருக்கும்போது செல்வமும் ஸ்திரத்தன்மையும் மட்டுமே வாழ்க்கையின் போக்கை நிர்ணயிக்காது. எனவே, எதிர்பாராத நிகழ்வுகளைச் சந்திக்க வேண்டியதே விதி ஆயிற்று. அது என் தாத்தா மோதிலால் நேருவுடன் தொடங்கியது. அலகாபாத்தில் ஒரு வழக்கறிஞர் என்ற முறையில் வெகுவிரைவிலேயே அவருக்குக் கிடைத்த வெற்றியானது, 1900-ஆம் ஆண்டில் பரந்த நிலப் பகுதியில் ஒரு மாளிகையை வாங்குவதற்கான வாய்ப்பைத் தந்தது. அதற்கு அவர் ஆனந்த பவன் என்று பெயர் சூட்டினார். தனது மகன் ஜவஹர்லாலை லண்டன் ஹாரோ பள்ளியில் சேர்ப்பதற்குத் தயார் செய்வதற்காக, அன்னி பெசன்ட் அம்மையாரால் பரிந்துரைக்கப்பட்ட ஆங்கிலேயே-ஐரிஷ் ஆசிரியர் ஒருவரை அவர் அமர்த்தினார். பின்னர் தனது மகள்களுக்காக ஆங்கிலேய ஆசிரியை ஒருவரை நியமித்தார். வதந்தியாகப் பரவியிருந்த செய்தியைப் போல, அவர் தனது உடைகளை சலவை செய்வதற்குப் பாரீஸ் நகருக்கு அனுப்பியது இல்லை. ஆனால், 1905-இல் ஒருமுறை ஐரோப்பாவுக்குச் சென்றிருந்தபோது, தனது மகள் சரூப்பின் ஐந்தாவது பிறந்த நாள் விருந்தில் கலந்து கொள்வதற்கு , ஜெர்மனியின் பேடன்-பேடன் நகரில் தான் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்த எல்லாக் குழந்தைகளையும் அவர் அழைத்தது உண்டு. அவரின் விருந்தோம்பல் புகழ்பெற்றது. குடும்பத்தின் தன்னிகரற்ற தலைவர் என்ற முறையில் அவர் கொண்டிருந்த பெருமையும், விரிவடைந்த குடும்பத்தினருக்காக அவர் அள்ளி வழங்கிய செல்வமும், இந்தியாவின் இந்தப் புகழ்மிக்க குடும்பத்தின் தரத்தை வைத்துப் பார்க்கும்போதுகூட அது ஓர் அரசரின் கொடைத்தன்மைக்கு நிகரானது.1931-இல் மோதிலால் காலமானார். 1936-இல் காசநோயின் காரணமாக என்னுடைய அத்தை கமலா நேரு இறந்தார். அதற்குப் பிறகு, வீட்டில் பெரியவர்கள் என்று எடுத்துக் கொண்டால், என்னுடைய பாட்டி (அவரும்கூட ஆர்ப்பாட்டத்தின்போது தாக்குதலுக்கு உள்ளானவர்), என்னுடைய பெரிய அத்தை (எனக்குத் தெரிந்த ஒரே துறவி), என்னுடைய பெற்றோர் - ரஞ்சித், விஜயலட்சுமி பண்டிட் - என்னுடைய மூன்றாவது பெற்றோரைப் போல நான் கருதிய என்னுடைய மாமா ஜவஹர்லால் ஆகியோர்தான். என்னுடைய சித்தி கிருஷ்ணா நேரு 1933-இல் ஜி.பி.ஹதீசிங்கை திருமணம் செய்து கொண்டு, பம்பாய்க்குச் சென்று வாழ்ந்தார். வீட்டில் இருந்த குழந்தைகள் என்றால், என்னுடைய சகோதரிகள் சந்திரலேகா, ரீட்டா, நயன்தாரா ஆகிய நான் ஆகியோர்தான். மாமா மகளான இந்திரா நேரு அவரது தாயாரின் மறைவுக்குப் பிறகு படிப்பதற்கு இங்கிலாந்து சென்றுவிட்டதால், 1942-இல் பெரோஸ் காந்தியைத் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு வரை, வீட்டிலிருப்பவர்களைப் பார்த்துவிட்டுச் செல்வதற்காகத்தான் அவ்வப்போது இந்தியா வருவார். மூன்று பெற்றோர்களுமே மகிழ்ச்சியும் மலர்ச்சியுமாகத்தான் இருந்தனர். கவலையும் சலிப்பும் கடுமையும் நிறைந்த சிறைச்சாலை நிலைமைகள், மூச்சுத் திணற வைக்கும் கிராமப்புறத்துப் புழுதி ஆகியவை ஒருபோதும் அவர்களின் உயர்ந்த உணர்வுகளை ஒடுக்கிவிடவில்லை. தங்களைத் தாங்களே நினைத்து வருத்தப்படும் தன்னிரக்க நிலையை, நரம்புத் தளர்ச்சியை அல்லது வெளியில் தெரியாத வேறு ஏதேனும் நிலையை அவர்கள் மறைத்து வைத்திருக்கக் கூடும் என்பதற்கான ஏதேனும் சிறிய அறிகுறியாவது தென்படுகிறதா என்று என்னுடைய மனதை நான் ஆராய்ந்து பார்த்துவிட்டேன். மாறாக நம்பிக்கை ஒளி வீசும் நல்லறிவுடன் தான் அவர்கள் எப்போதும் விளங்கினார்கள். அவர்களது கடும் முயற்சிகள், துன்பங்கள் எதுவாக இருந்தபோதிலும், நம்பிக்கை, ஆற்றல், துணிச்சல் ஆகியவைதான் அவர்களிடம் இருந்து ஒளிவீசிக் கொண்டிருந்தன. அவர்கள் தங்களைத் தங்கள் காலத்தின் மனிதர்களாகக் கண்டனர்.
=========நேரு : உள்ளும் புறமும் நயன்தாரா சகல்தமிழில்: ஜெயநடராஜன்கிழக்கு பதிப்பகம்பக்கம் 320 விலை ரூ 200இணையத்தில் புத்தகத்தை வாங்க : https://www.nhm.in/shop/978-93-5135-152-8.htmlஃபோன் மூலம் புத்தகத்தை வாங்க : 09445901234 / 09445979797வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - Boston,யூ.எஸ்.ஏ
30-ஜன-201520:47:35 IST Report Abuse
Raj நேருவை பற்றி தவறான கருத்துக்கள் பரப்பபட்டுள்ளன. எல்லா மனிதர்களுக்கும் உள்ள சில நம்பிக்கை போல, நேரு ஐ.நா வை நம்பி காஷ்மீர் பிரட்சினையை அவர்களிடம் கொண்டு சென்றார். காஷ்மீரில் பிரச்சினை இல்லை என்றாலும் நமது அண்டை நாட்டவரால் (இருவர்) எப்போதும் நமக்கு பிரட்சினைதான். நாம் சுதந்திரம் பெறும்போது உள்ள நிலைமையை நினைத்து பாருங்கள். தொடர்ந்த அடிமைத்தனத்தால் படித்தவர்களும் சிந்தனையை இழந்து நின்ற நேரம் அது. அந்நிலையில் நேரு நமக்கு அரசியல் ஸ்திரத்தன்மையை அம்பேத்கர் மூலமாக தந்தார். மக்களாட்சியை நாம் இன்றும் அனுபவிப்பது இதனால்தான். இன்று பார்க்கும் அணைத்து பொது நிறுவனங்களும் அவர் காலத்தில் தொடங்கப்பட்டது அல்லது தொடங்க ஆரம்பிக்கப்பட்டது. அதனால் வந்த முன்னேற்றத்தை நமது சந்ததி அனுபவித்து கொண்டிருக்கிறோம். நேஹ்ருவிற்கு அடுத்து லால் பகதூர் சாஸ்திரி தான் பிரதமராக வந்தார். இதில் என்கிருக்குது குடும்ப அரசியல்.
Rate this:
Share this comment
Cancel
Narayan - Zurich,சுவிட்சர்லாந்து
23-ஜன-201518:55:26 IST Report Abuse
Narayan இந்தியாவிற்கு எப்படி சுதந்திரம் கிடைத்தது என்பதை அறிய இந்திய சரித்திரம் படிப்பதை விட பிரிட்டிஷ் வரலாறு படித்தால் நன்கு புரியும். உலக யுத்தம் முடிந்த சூழ்நிலையில், ஹிட்லர் செய்த கொடுமைகளால் காலனி ஆதிக்கம் அனைத்தையும் எதிர்க்கும் சூழ்நிலை மனநிலை உருவான சமயத்தில் பிரிட்டிஷ் பார்லிமெண்டில் பிரிட்டிஷ் ராஜ் ஆக்ட்( இந்தியாவை விட்டு வெளியேறும் கடைசி முடிவு ) பற்றி விரிவாக படித்தால் புரியும். பிரிட்டிஷ் அரசின் பொருளாதாரம், இந்தியாவின் வளங்கள் அனைத்தும் சுரண்டி முடிந்தது, இந்தியாவில் உள்நாட்டு கலவரங்கள் பெருமளவில் வரும் என்ற சூழ்நிலை, இவை அனைத்துமே உண்மையான காரணங்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X