விதைபோல் எழுவோம்!| Dinamalar

விதைபோல் எழுவோம்!

Updated : ஜன 26, 2015 | Added : ஜன 26, 2015 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
விதைபோல் எழுவோம்!

ஒரு காகம் தன் எச்சத்தின் மூலம் எத்தனை விதைகளை விதைத்திருக்குமென்று கணக்கிட்டுப் பார்த்தால், அது ஒரு மனிதன் சாப்பிட்டுவிட்டு வீணாகத் தூக்கி எறிந்த விதைகளைவிட அதிகமாகவே இருக்கும். பறவைகள் தன் எச்சத்தின் மூலம் ஒருபுறம் விதைக்க, விலங்குகள் இடம் பெயர்தல் மூலம் தன் உடலில் ஒட்டிக் கொண்டிருக்கும் விதைகளை நிலங்களில் தூவுகின்றன. காற்றும் நீரும் விதைகளைக் கொண்டு சென்று, உலகின் பல்வேறு இடங்களில் சேர்க்கின்றன். வண்டுகளும் தேனீக்களும் பட்டாம்பூச்சிகளும் மகரந்தச்சேர்க்கைக்கு வித்திடுகின்றன.
இப்படி, இயற்கையில் அனைத்து ஜீவராசிகளும் மரங்களையும் தாவரங்களையும் பெருகச்செய்வதில் தங்களுக்கான பங்கை ஆற்றி வருகின்றன. மனிதர்களாகிய நாம் நம் பங்கிற்கு என்ன செய்கிறோம்?! காய்களையும் பழங்களையும் சாப்பிடுகிறோம்; மரங்களை வெட்டுகிறோம்; பெருகி வரும் மக்கள்தொகையால், பல அரிய தாவர மற்றும் விலங்கினங்களை அழிக்கிறோம்.

விதைகளுக்குள் உள்ள வாழ்க்கை!
"என் தலையை அடமானம் வச்சாவது உன்ன நான் படிக்க வைப்பேன்" என்று கிராமங்களில் விவசாயம் செய்யும் அப்பாக்கள் உணர்ச்சி வசப்பட்டு தங்கள் பிள்ளைகளிடம் சொல்துண்டு. விவசாயிகள், எப்படிப்பட்ட சூழ்நிலையிலும், தன் தலையைக் கொடுப்பேன் என்று சொல்வார்களே தவிர, விதையைக் கொடுப்பேன் என்று சொல்வதில்லை. எப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையிலும் விதைநெல்லை விற்கக்கூடாது என்பது அவர்களுக்குத் தெரியும்! ஏனென்றால், அது வெறும் விதைகள் மட்டுமல்ல; அவர்களின் வாழ்க்கையே அந்த விதைகள்தான். மரத்திலிருந்து விழும் ஒவ்வொரு விதையும் அந்த மரத்தின் ஒருதுளியாகவே உள்ளது. அந்த ஒருதுளிக்குள் ஒருமுழுமரமும் இருப்பதுதான் இயற்கையின் விந்தை.

ஈஷா பசுமைக்கரங்களுக்கு விதைகள் கொடுங்கள்!
ஈஷா அறக்கட்டளையின் பசுமைக்கரங்கள் திட்டம்மூலம், தமிழகத்தின் பசுமைப்பரப்பை அதிகரிக்கும் நோக்கில் பல்வேறு செயல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகமெங்கும் 50கி.மீ. சுற்றளவிற்கு ஒன்றென, மொத்தம் 85 நாற்றுப் பண்ணைகளை உருவாக்கியுள்ளது.
நீங்கள் கொய்யாவை ருசித்துச் சாப்பிடுங்கள்; மாங்கனியை உண்டு மகிழுங்கள்; நெல்லிக்கனியை நாவினிக்க சுவையுங்கள். ஆனால் அதன் விதைகளை மட்டும் ஈஷா பசுமைக்கரங்களிடம் சேர்த்திடுங்கள்! ஒரு எலுமிச்சம் பழத்திலுள்ள விதைகளிலிருந்து சுமார் 12 எலுமிச்சை செடிகளை உருவாக்க முடியும். நாவல் பழத்தின் ஒரு விதையிலிருந்து மட்டும் 8 நாவல் மரங்கள் வளரும் என்றால் நீங்கள் நம்புவீர்களா? ஆம்! விதைகளுக்குள் விருட்சங்கள் ஒளிந்து கிடக்கின்றன.

விதைகளின் தன்மை...
எலுமிச்சை விதைகள் பழத்திலிருந்து எடுத்த 1 வாரத்திற்குள் நடப்படவேண்டும். அதில் சாம்பலைச் சேர்த்து பாதுகாத்தால் இன்னும் சிறிது காலம் தாக்குப் பிடிக்கும். வேப்ப விதைகளை மூன்றிலிருந்து 6 மாதங்களுக்குள் நடப்படவேண்டும். நாவல் பழவிதைகள் பழத்திலிருந்து எடுக்கப்பட்ட 2 நாட்களுக்குள் நடப்பட வேண்டும். மாவிதைகள் 15 நாட்களிலும் கொய்யா விதைகள் 16 நாள் வரையிலும் தாக்குப்பிடிக்கும். எனவே இது போன்ற பழவிதைகள் உங்கள் கையில் கிடைக்கும்போது, குறிப்பிட்ட நாட்களுக்கு நாற்றுப்பண்ணைகளில் சேர்த்திடுங்கள். வசதி வாய்ப்புகள் இருப்பின், நீங்களே நட்டுவளருங்கள்.

என்ன பயன்...?!
சரி..! இதனால் நமக்கு என்ன லாபம்; என்ன பயன்? இந்தக் கேள்வி எப்போதும் நம்மிடையே கேட்கப்படும் முதன்மையான கேள்வியாகி விட்டது. கல்வி கற்றாலும், கல்யாணம் செய்தாலும், குழந்தை பெறுவதென்றாலும்... அதனால் எனக்கு என்ன கிடைக்கும் என்பதே மனிதமனோபாவமாக மாறிவிட்ட இந்தக்காலத்தில், விதைகளைச் சேகரியுங்கள் என்று சொல்லும்போது அதேகேள்வி வருவதில் ஒன்றும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
நிச்சயம் நமக்கு பசுமையான தமிழகம் கிடைக்கும் என்பதை மட்டும் உறுதியாகச் சொல்லமுடியும். உலக வெப்பமயமாதல் என ஒருபுறம் மிகப்பெரிய அச்சுறுத்தல்; தண்ணீர்ப் பற்றாக்குறை என இன்னொருபுறம் அபயக்குரல்; இப்படி நம் செவிகளை வந்தடையும் எச்சரிக்கை மணிகளை இப்போதாவது நாம்காது கொடுத்தே ஆகவேண்டும். அதற்கு, மரம் நடுவதும் மரக்கன்றுகளை உருவாக்குவதுமே சிறந்த தீர்வாக இருக்கும். ஈஷா பசுமைக்கரங்களுடன் உங்கள் கரங்களையும் இணைத்திடுங்கள். உங்கள் ஊரின் அருகிலுள்ள ஈஷா நாற்றுப்பண்ணைகளின் விதைகளைக் கொண்டு சேர்ப்பதற்கும், குறைந்த விலையில் பல அரியவகை மரக்கன்றுகளைப் பெறுவதற்கும் 94425 90062 என்ற அலைபேசி எண்ணைத் தொடர்புகொள்ளவும். இதுவரை வீணே வீழ்ந்திருந்த நாம் இனி, விதைபோல் முளைத்தெழுவோம்! விருட்சங்களாவோம்!

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
P.Subramanian - Chennai,இந்தியா
26-ஜன-201522:55:51 IST Report Abuse
P.Subramanian விதைக்குள் வீரியம் உள்ளது.அனைவருக்கும் தெரியும். ஆனாலும் அதனை அலட்சியப்படுத்தி விதைகளை தூர எறிந்து விடுகிறோம். இனிமேல் வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் என்பதை போல், வீட்டுக்கு வீட்டுக்கு விதையின் வீரியத்தையும் அவசியத்தையும் உணர்த்த வேண்டும் .
Rate this:
Share this comment
Cancel
val - Coimbatore,இந்தியா
26-ஜன-201514:25:16 IST Report Abuse
val Sadhguru plant a seed of awareness about seed gathering and pasumai puratchi. We will try out best by gathering seeds and take part in this mission.Squirrels helped Rama Like that we help for this mission to save our Mother Earth.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X