மறக்கமுடியாத மாவீரர் மேஜர் முகுந்த் வரதராஜன்...

Updated : ஜன 28, 2015 | Added : ஜன 28, 2015 | கருத்துகள் (29) | |
Advertisement
அப்படி ஒரு நிசப்தம்டில்லி குடியரசு தினவிழாவின் போது அமெரிக்க அதிபர் ஒபாமா, இந்திய பிரதமர் மோடி அமர்ந்திருக்க ஜனாதிபதி பிரணாப்முகர்ஜியின் முன் முன் ஒரு இளம் விதவை நின்று கொண்டு இருக்கிறார்.பெருமையோடு அவர் நெஞ்சை நிமிர்த்தி நின்றிருந்தாலும் கண்களில் அளவிடமுடியாத சோகம் நிரம்பிக்கிடக்கிறது.யார் இவர் என தெரிந்து கொள்ளும் முன் இவரது கணவரைப்பற்றி முதலில் தெரிந்து
மறக்கமுடியாத மாவீரர் மேஜர் முகுந்த் வரதராஜன்...

அப்படி ஒரு நிசப்தம்
டில்லி குடியரசு தினவிழாவின் போது அமெரிக்க அதிபர் ஒபாமா, இந்திய பிரதமர் மோடி அமர்ந்திருக்க ஜனாதிபதி பிரணாப்முகர்ஜியின் முன் முன் ஒரு இளம் விதவை நின்று கொண்டு இருக்கிறார்.
பெருமையோடு அவர் நெஞ்சை நிமிர்த்தி நின்றிருந்தாலும் கண்களில் அளவிடமுடியாத சோகம் நிரம்பிக்கிடக்கிறது.
யார் இவர் என தெரிந்து கொள்ளும் முன் இவரது கணவரைப்பற்றி முதலில் தெரிந்து கொள்வோம்.
சென்னை தாம்பரத்தை சேர்ந்தவர் முகுந்த் வரதராஜன். பி.காம் எம்ஏ ஜர்னலிசம் படித்தாலும் அவரது உறவினர்கள் சிலர் ராணுவத்தில் இருப்பதால் இவருக்கும் ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்காக பணியாற்ற வேண்டும் என்று ஆவல் ஏற்பட்டது.
சென்னையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி பள்ளிக்கு நண்பர்கள் சிலருடன் விண்ணப்பித்தார். இவருக்கு மட்டும் அதில் சேரவாய்ப்பு கிடைத்தது.கடுமையான பயிற்சிக்கு பிறகு நாட்டின் பல்வேறு இடங்களில் பணியாற்றினார்.
ஜம்மு-காஷ்மீரில் பதட்டமான சோபைனா என்ற இடத்திற்கு மேஜராக அனுப்பப்பட்டார். மிகச்சிறப்பாக செயல்பட்டு அங்குள்ள தீவிரவாதிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார்.
இதற்கு இடையில் தாயகத்திற்கு வந்த போது இந்து ரெபேக்கா வர்கீஸ் என்பவருடன் ஏற்பட்ட காதல் திருமணத்தில் முடிந்தது.இவர்களுக்கு அன்பின் அடையாளமாக அர்ஷியா என்ற 5 வயது மகள் உண்டு.
தேசத்தின் மீது மட்டுமல்ல தனது தந்தை வரதராஜன் தாய் கீதா மற்றும் நண்பர்கள் மீதும் மிகுந்த பாசமும் மரியாதையும் கொண்டவர்.தாயிடம் பேசாமல் ஒரு நாளும் இருக்கமாட்டார்.
2012 ஏப்ரல் 12ம்தேதி முகுந்த வரதராஜனுக்கு பிறந்த நாள் அன்றைய தினம் முழுவதும் அவர் யாருடனும் பேசவில்லை அவரது அப்பா அனுப்பிய குறுஞ்செய்தி பார்த்துவிட்டு ஒரு பெரிய வேலை இருக்கு முடிச்சுட்டு பேசுகிறேன் என்றவர் அதற்கு பிறகு பேசுவதற்கு நேரமே இருக்கவில்லை.
தீவிரவாதிகள் ஒரு இடத்தில் முக்கியமான திட்டத்தோடு முகாமிட்டு இருப்பதை அறிந்த மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களை அவர்களது கோட்டைக்குள்ளேயே போய் கூண்டோடு அழித்து விட திட்டமிட்டு முன்னேறியவர் ஏப்ரல் 25ம்தேதி நெருங்கியும்விட்டார்.
அவர் நெருங்கிவிட்டதை அறிந்த தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கி பிரயோகம் செய்தனர் அவர்கள் நடத்திய குண்டு மழைக்கு பயப்படாமல் முன்னேறிய முகுந்த் வரதராஜன் ஒரு கட்டத்தில் ஒரு கட்டிடத்தினுள் பதுங்கியிருந்த மூன்று தீவிரவாதிகளையும் சுற்றி வளைத்துவிட்டார்.
நேருக்கு நேரான துப்பாக்கி சண்டையில் மூன்று பேரையும் சுட்டுக்கொன்ற முகுந்த் வரதராஜனுக்கு இந்த வெற்றி செய்தியை உரத்த குரலெடுத்து தேசத்திற்கு சொல்லவேண்டும் என்று நினைத்த போதுதான் குரலுக்கு பதிலாக மயக்கம் வந்ததை உணர்ந்தார், கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது அப்போதுதான் கவனித்திருக்கிறார் எதிரிகளின் குண்டுகள் தன்னை துளைத்திருப்பதை...மெல்லிய புன்னகையோடு ஜெய்ஹிந்த் சொல்லியபடி சரிந்தவர் அடுத்த நிமிடம் இறந்தவராகிவிட்டார்.
கண்ணிவெடியில் சிக்கிய போதும், முதுகில் தோட்டா துளைத்த போதும் உயிர்தப்பியவர் இவர். இதை எல்லாம் தனது குடும்பத்தினரிடம் சொல்லி எனது உயிர் கெட்டி அவ்வளவு சீக்கிரம் சாகமாட்டேன் அப்படியே இறந்தாலும் யாருமே அழக்கூடாது ஏன் என்றால் எங்களைப் போன்ற ராணுவ வீரனின் மரணம் நாட்டுக்கான கடமையாகும் என்றெல்லாம் குடும்பத்தில் சொல்லி வைத்திருந்தார் .
முகுந்த வரதராஜனின் மரணம் சாதாரணமானது இல்லை அது ஒரு வீரமரணம் என்பதையும் அவரது சாகசமும் வீரமும் ஈடுஇணையில்லாதது எனவும் அவரது அதிகாரிகள் சொல்ல சொல்ல தமிழகமே அவரது நினைவை போற்றியது மின் மயானத்தில் பெருந்திரளாக திரண்டு சென்று அஞ்சலி செலுத்தியது.
31 வயதில் நாட்டை எதிரிகளிடம் இருந்து காப்பதற்காக இன்னுயிர் எனும் தன்னுயிர் கொடுத்த மேஜர் முகுந்த வரதராஜனுக்கு நாட்டின் மிக உயர்ந்த விருதான அசோக் சக்ரா விருது அறிவிக்கப்பட்டு அந்த விருதினை குடியரசு தினவிழாவில் ஜனாதிபதி கையில் வாங்குவதற்காகத்தான் இந்து முகுந்த் வரதராஜன் நின்று கொண்டிருந்தார்.
அசோக் சக்ரா விருது பெற்ற மேஜர் முகுந்த வரதராஜன் மறக்கமுடியாத மறக்ககூடாத மாவீரர் என விருது வழங்கப்பட்ட போது அவரைப்பற்றி ஆங்கிலத்திலும் இந்தியிலும் சொன்னபோது அங்கே கூடியிருந்தவர்கள் அனைவரது கண்களும் கலங்கியிருந்தது.
- எல்.முருகராஜ்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meyyalagan - vellakovil,இந்தியா
20-பிப்-201514:56:10 IST Report Abuse
meyyalagan எங்கள் பாதுகாப்பிற்காக உங்கள் உயிரை தந்தீர்கள்... சுயநலமிக்க அரசியல் தலைவர்களும்... மனிதர்களும் இதை உணர்ந்து தங்கள் உயிர் காப்பாற்ற தகுதி உடையதுதானா என்று நினைத்து தங்களை மாற்றிக்கொண்டால் மட்டுமே நீங்கள் வீர மரணம் அடைந்ததற்கு உண்மையான அஞ்சலி செலுத்தியதாக அர்த்தம் கிடைக்கும்...
Rate this:
Cancel
Sudesh Kumar - Tiruchirappalli,இந்தியா
04-பிப்-201511:34:03 IST Report Abuse
Sudesh Kumar ஜெய் ஹிந்த்
Rate this:
Cancel
bala - Singapore  ( Posted via: Dinamalar Android App )
04-பிப்-201509:39:31 IST Report Abuse
bala தமிழன் என்று சொல்லுடா தலை நிமிர்ந்து நில்லுடா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X