தொழில் முனைவோராக மாறும் மனநல நோயாளிகள்: மதுரையில் புதுமை திட்டம் துவக்கம்

Added : ஜன 30, 2015 | கருத்துகள் (3) | |
Advertisement
மதுரை: மனநலம் குன்றியவர்களை தொழில் முனைவோராக்கும் வகையில், தமிழகத்தில் முதன்முறையாக மதுரையில், கால்நடை வளர்ப்புக்கான சான்றிதழ் பயிற்சி, பிப்ரவரியில் துவங்கப்படுகிறது.மனநலம், மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு, தபால் உறைகள் தயாரித்தல், பைண்டிங் செய்தல் போன்ற பயிற்சிகள் தரப்படுகின்றன. நீண்ட காலம் சிகிச்சையில் இத்தகைய பயிற்சி பெறுபவர்கள், சிகிச்சை முடிந்து
தொழில் முனைவோராக மாறும் மனநல நோயாளிகள்: மதுரையில் புதுமை திட்டம் துவக்கம்

மதுரை: மனநலம் குன்றியவர்களை தொழில் முனைவோராக்கும் வகையில், தமிழகத்தில் முதன்முறையாக மதுரையில், கால்நடை வளர்ப்புக்கான சான்றிதழ் பயிற்சி, பிப்ரவரியில் துவங்கப்படுகிறது.மனநலம், மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு, தபால் உறைகள் தயாரித்தல், பைண்டிங் செய்தல் போன்ற பயிற்சிகள் தரப்படுகின்றன. நீண்ட காலம் சிகிச்சையில் இத்தகைய பயிற்சி பெறுபவர்கள், சிகிச்சை முடிந்து வெளியேறும்போது, அதற்குரிய வேலை கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். வருமானமின்றி, மீண்டும் மனநலம் பாதிக்கப்படும் அபாயத்திற்கு ஆளாகின்றனர். இவர்களுக்கு விவசாயம் சார்ந்த கால்நடை வளர்ப்பு பயிற்சியின் மூலம், தொழில் முனைவோராக்கும் திட்டத்திற்கு, தமிழ்நாடு கால்நடை பல்கலைக் கழகம் பாடத்திட்டம் வகுத்துள்ளது.

இதுகுறித்து, மாநில மனநல திட்ட அலுவலர் டாக்டர் ராமசுப்ரமணியன் கூறியதாவது: கிராமப்புறங்களில் உள்ளவர்கள் தான், அதிகம் சிகிச்சை பெற வருகின்றனர். இவர்களுக்கு சிகிச்சை அளிப்பது மட்டுமின்றி, வாழ்க்கை முழுதும் தொடரும் வகையில், தொழில் வாய்ப்பு அளிக்க திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. மதுரை எம்.எஸ்.செல்லமுத்து அறக்கட்டளையும், தமிழ்நாடு கால்நடை பல்கலைக் கழகமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன. ஆடு, மாடு, கோழி, முயல் வளர்ப்பு, கையாளும் முறைகள் குறித்து, பல்கலைக் கழகம் மூன்று மாத கால பயிற்சிக்கு தேவையான பாடத் திட்டத்தை உருவாக்கியுள்ளது. மதுரை அழகர் கோவில் பகுதியில் உள்ள அறக்கட்டளை பயிற்சி மையத்தில், மூன்று மாத கால உணவு, இருப்பிடத்துடன் கூடிய இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்காக மாதிரிப் பண்ணையும் அமைக்கப்பட்டுள்ளது. பயிற்சிக்கு பின் தொழில் துவங்க, வங்கிக் கடனுக்கு ஏற்பாடு செய்யப்படும். மனநல நோயாளிகள் கால்நடைகளை கையாளும்போது, மன அமைதி பெறுகின்றனர்; பொருளாதார வளர்ச்சி பெறுகின்றனர். தொடர் சிகிச்சைக்கும் சாத்தியமாகிறது. தமிழகத்தில் மாதிரி திட்டமாக பல்கலை சார்பில், பிப்ரவரியில், மதுரையில், 15 பேருக்கு இப்பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
31-ஜன-201500:16:40 IST Report Abuse
சத்தியநாராயணன் (சத்தி) ரொம்ப நல்ல திட்டம்
Rate this:
Cancel
Sundar Rajan - chennai,இந்தியா
30-ஜன-201516:11:49 IST Report Abuse
Sundar Rajan என்ன ஒரு சமுதாய மாற்றம். முன்பெல்லாம் தொழில் முனைவோராக இருந்து பின் மன நோயாளியானவர்கள் கேள்விபட்டிருக்கிறேன். இப்போ அப்படியே தலைகீழா மாறிவிட்டதே ???????
Rate this:
Cancel
P. SIV GOWRI - Chennai,இந்தியா
30-ஜன-201515:19:20 IST Report Abuse
P. SIV GOWRI நல்ல முயற்சி. ஆனால் மனநல நோயாளிகள் இந்த வேலையை செய்ய முடியுமா ?செய்ய முடியும் என்றால் நல்லது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X