வேலையில்லா பட்டதாரிகளுக்கு ஒரு விண்ணப்பம்

Added : பிப் 01, 2015 | கருத்துகள் (5) | |
Advertisement
"ஏதோ ஒரு பட்டம் வாங்கிட்டா போதும் அவன் எப்படியும் பொழச்சுக்குவான்!" என்பது சில காலத்திற்கு முன் பெற்றோர்களின் தாரகமந்திரமாக இருந்தது. அதற்கடுத்த காலகட்டத்தில், "ஏதோ ஒரு பட்டம் போதாது, என் மகன் இஞ்சினியராக வேண்டும். அப்போதுதான் அவன் கைநிறைய சம்பாதிப்பான்!" என அப்ளிகேஷன் வாங்க முண்டியடித்தனர். இப்போது பார்த்தால், எங்கெங்கும் இஞ்சினியரிங் மாணவர்கள்
வேலையில்லா பட்டதாரிகளுக்கு ஒரு விண்ணப்பம்

"ஏதோ ஒரு பட்டம் வாங்கிட்டா போதும் அவன் எப்படியும் பொழச்சுக்குவான்!" என்பது சில காலத்திற்கு முன் பெற்றோர்களின் தாரகமந்திரமாக இருந்தது. அதற்கடுத்த காலகட்டத்தில், "ஏதோ ஒரு பட்டம் போதாது, என் மகன் இஞ்சினியராக வேண்டும். அப்போதுதான் அவன் கைநிறைய சம்பாதிப்பான்!" என அப்ளிகேஷன் வாங்க முண்டியடித்தனர். இப்போது பார்த்தால், எங்கெங்கும் இஞ்சினியரிங் மாணவர்கள் நிறைந்திருக்கிறார்கள்... ஆனால் சரியான வேலைதான் இல்லை. "ஓ..! நீயும் இஞ்சியனியர்தானா?! என்ன கொடுமை இது!" என்று ஒருவரையொருவர் நையாண்டி செய்து கொள்கிறார்கள்.
ஏன் இந்த நிலை?! எங்கே செல்கிறது இளைய தலைமுறை? பிள்ளையின் விருப்பத்தை ஏற்காமல், தான் நினைப்பதையே தன் பிள்ளை படிக்க வேண்டும் என்ற பெற்றோர்களின் சர்வாதிகாரப் போக்காலும், மாணவர்களுக்கே தங்கள் உண்மையான திறன் என்ன என்று அறிவதில் குழப்பம் இருப்பதாலும் தங்கள் கல்வியை கடனேயென்று முடித்து வைக்கிறார்கள். ஈடுபாடு இல்லாத கல்வியால் அவர்கள் பெறும் சொற்ப மதிப்பெண்களும், அறவே பெறாத தொழில் அறிவும், அனுபவப் பாடம் தரும் பட்டறிவும் இன்றி, அவர்கள் போட்டிகள் நிறைந்த துறைகளில் நிலைத்து நிற்க முடியாமல் திண்டாடுகிறார்கள். பந்தய மைதானமாய் ஆகிவிட்ட சமூகத்தில், அந்தப் பந்தயத்தில் பங்கேற்கவே திராணியற்று, விலகி நிற்கிறார்கள்.
இந்தச் சூழல் மாறுவதற்குஅரசியல் மற்றும் சமூகநிலைகளில் பல்வேறு மாற்றங்களும் சீர்திருத்தங்களும் தேவைப்படுகின்றன. உடனே அனைவருக்கும் வேலைவாய்ப்போ சரியான கல்வி முறையோ அமைந்துவிடுமென்று எதிர்பார்ப்பது புத்திசாலித்தனமாக இருக்காது. ஆனால், இன்று வேலையில்லா பட்டதாரிகளின் எண்ணிக்கை ஏன் அதிகமாக இருக்கிறது என்றுஆராய்ந்தால்அதற்கு பல காரணங்கள் நம்முன் நிற்கும். அவற்றுள் முக்கியமான ஒன்று மக்கள்தொகைப் பெருக்கம்.
காரணங்களை ஆராய்வது ஒருபுறம் இருந்தாலும், இப்போது வேலையில்லாமல் சுற்றித்திரியும் இளைஞர்களை என்ன செய்வது? நிறைய இளைஞர்கள் தங்கள் தகுதி என்னவென்று புரிந்துகொள்ளாமலேயே தங்கள் நேரத்தையும் திறமையையும் வீணடிப்பவர்களாய் கொரியர் பீட்ஸா டெலிவரி பாயாகவும், கால் டேக்ஸி டிரைவர்களாகவும், ஷாப்பிங் மால் பில் கவுன்ட்டர்களிலும் தங்கள் காலத்தை கழிக்கிறார்கள். எந்த வேலையும் கீழானது இல்லை என்றாலும், நமக்கு தகுதியற்ற வேலையில் நம் காலத்தை செலவிடுவதும்கூட ஒருவகையில் குற்றம்தான்.
சரி...! இந்நிலைக்கு தீர்வுதான் என்ன? இன்றைய வேலையில்லா பட்டதாரிகள் வேலையை பிறரிடம் வேண்டுபவராக இல்லாமல், தங்களுக்கான வேலையை உருவாக்குபவராக மாறினால் நிச்சயம் தீர்வு கிடைக்கும். அத்தகைய ஒருவழியாக விவசாயம் நிச்சயம் இருக்கும். படித்தவர்கள் விவசாயத்தில் ஈடுபட்டால், இத்தனை வருடம் படித்ததெல்லாம் வீணாகிடும் என்ற எண்ணத்தைக் கைவிடுங்கள். ஷாப்பிங்மால் பில்கவுண்டரில் இருந்தால் மட்டும், நீங்கள் படித்ததற்கு பிரயோஜனம் இருக்கிறது என்றா சொல்வீர்கள்? ஆனால், படித்தவர்கள் விவசாயத்திற்கு வரும்போது, அதை இன்னும் திறம்படக் கையாளமுடியும். இணையதளங்கள் மூலமகாவும், விவசாயம் மற்றும் இயற்கை சார்ந்த அமைப்புகள் மூலமாகவும் இளைஞர்கள் தங்களுக்கான வழிகாட்டுதல்களை இலகுவாகப் பெறமுடியும். இன்று பல பட்டதாரிகள் விவசாயத்தில் சாதித்து வருகின்றனர்.

இளைஞர்களுக்கு வழிகாட்டும் ஈஷா பசுமைக்கரங்கள்!
ஈஷா அறக்கட்டளை, ஈஷா பசுமைக்கரங்கள் திட்டத்தின் மூலம் தமிழகத்தின் பசுமைப்பரப்பை அதிகரிக்கும் நோக்கில் பவ்வேறு செயல்களை தமிழகமெங்கும் செய்து கொண்டிருக்கிறது. அதில் ஒன்று விவசாயிகளுக்கு உறுதுணையாய் இருக்கும் வேளாண்காடுகள். இன்று பல்வேறு காரணங்களால், விவசாயத்தைக் கைவிட நினைக்கும் விவசாயிகளுக்கு இது ஒரு அற்புத வாய்ப்பாக இருக்கிறது. மரங்கள் நட்டு, வேளாண் காடுகள் அமைக்க விரும்புபவர்களுக்கு விலை மதிப்புள்ள தேக்கு, குமிழ், மகிழம், செஞ்சந்தனம், வேங்கை, கருமருது போன்ற தரமான மரக்கன்றுகள் மிகக்குறைந்த விலையில் வழங்கப்படுகிறது. இது, பசுமைப் பரப்பை அதிகரிக்கும் அதேநேரம், விவசாயிகளுக்கும் நீடித்த, நிலைத்த வருவாய் கிடைக்க வழி செய்கிறது.
ஈஷாவின் வேளாண் வல்லுனர்கள் மரம் வளர்பதற்குத் தேவையான வழிமுறைகளையும் நுட்பங்களையும் நேரில் வந்து பரிந்துரை செய்வார்கள். உங்கள் ஊருக்கு அருகிலுள்ள ஈஷா நாற்றுப் பண்ணைகளில் மரக்கன்றுகளைப் பெறுவதற்கும், மரம் நடுதல் தொடர்பான வழிகாட்டுதல்களைப் பெறுவதற்கும் கீழ்க்கண்ட எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.
பசுமைக் கரங்கள் தொ.பே.94425 90062

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J R MIRANDA - Chennai,இந்தியா
02-பிப்-201504:48:21 IST Report Abuse
J R MIRANDA கட்டுரை பெற்றோர்களை குற்றம் கூறுவது போல் இருக்கிறது தவறு. அரசாங்கம் இளைஞகர்கள் கல்விக்கு மதிப்பு கொடுப்பதில்லை. ஹிந்தி படிக்கச் கூடாது சரி படிக்கல தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு ஏற்படுத்துங்க. இஞ்சினியரிங் காலேஜ் கட்ட அனுமதி கொடுத்த அளவில் பாதியாவது, வேலைவாய்ப்பு வரக்கூடிய தொழிற்சாலைகளை தமிழக அரசாங்கம் திறக்க முயற்சிக்கலாம் இல்லையா. தொலைகாட்சியில் வேலை கிடைக்கிற அள்ளவுக்கு கூட தொழிற்கூடம் தமிழ்நாட்டில் இல்லை. சினிமாவில் முதல் போடுகிற தனியார் துறை தான் இங்கு அதிகமாக இருக்கு. ஊழல் அரசியல்வாதிகலாவது தான் கொள்ளைஅடித்த பணத்தை போட்டு தொழில் கூடம் தொடங்கினலாவது நமது இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும். எதுவம் கிடையாது சும்மா அறிவுரை மட்டும் கூறினால் போதுமா?....???
Rate this:
Cancel
SanSar - chennai,இந்தியா
01-பிப்-201515:18:46 IST Report Abuse
SanSar இந்தியாவின் வளர்ச்சி இளைஞர்கள் கையில் இருக்கிறது என்கிறார் டாக்டர்.ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்கள். நாட்டின் மக்கள் தொகையில் பாதிக்கு மேல் ஈடுபட்டுவரும் விவசாயத்துறை நாட்டின் வளர்சிக்கு பங்கிடவில்லையா? பின்னே விவசாயத்துறையை வளர்ச்சியடைய செய்ய கற்றவர்களும், இளைஞர்களும் வேண்டாமா?. இந்தியா விவசாய நாடு. ஒவ்வொரு இந்தியனும்-இளைஞனும் விவசாயம் பற்றிய அடிப்படைகளை அறிந்திருக்கவேண்டும். அவர் எந்த துறையில் வல்லுனராக இருந்தாலும் விவசாயம் தான் உணவளிக்கிறது. விவசாயம் வெறும் பொருளாதாரம் சார்ந்த பிரச்சனையல்ல. அது இந்தியர்களின் உடல்நலம் சார்ந்த பிரச்சனையும் கூட, எனவே ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டும். பள்ளிகூடங்களில் விவசாயத்திற்கென்றே தனியொரு பாடம் வைத்தால் சிறப்பாக இருக்கும். எல்லா இளைஞர்களையும் விவசாயம் செய்ய வருமாறு அழைக்கவில்லை. ஆர்வமுள்ளவர்கள் ஈடுபடட்டும், மற்றவர்கள் அறியாத விவசாயிக்கு கற்றுகொடுப்போம். வழிகாடடுவோம், நமது ஓய்வு நேரங்களை இதற்காக செலவழிப்போம். விவசாய குடும்பத்தில் பிறந்தவர்கள் தயவு செய்து அதைவிட்டு வெளியேற நினைக்க வேண்டாம், அதை வளப்படுத்த முயற்சியுங்கள். இன்றைய நிலையில் விவசாயம் செய்வதே நாட்டிற்கு செய்யும் மிகப்பெரிய சேவை என்பதை உணர்ந்துகொள்வோம். தேவை ஓர் புரட்சி. தோல்வியடைந்த தொழிலாய் விவசாயிகளாலேயே கருதப்படும் விவசாயத்தை செழிப்படைய செய்யவும் மாசுபட்டுபோன விவசாயத்தை துய்மை செய்யவும் கண்டறியப்பட்டுள்ள ஒரு தீர்வு இயற்கை விவசாயம். அந்த இயற்கை வேளாண்முறைக்கு விவசாயிகளை திருப்ப நமக்கு தேவை ஓர் புரட்சி. இப்பெரும் முயற்சியை ஒரு தனிமனிதாக செய்ய இயலாது, வெற்றிகரமான விவசாய முறைறை ஒரு இளைஞனால் வகுக்க முடியாது. ஒருங்கினைந்த முயற்சி வேண்டும். சமூகத்தின் மீது அக்கறை கொண்ட ஊடகங்கள் உதவ முன்வரவேண்டும். அறிஞர்களும், ஆய்வாளர்களும் ஒன்றுகூடி நல்ல திட்டத்தை வடிவமைக்க வேண்டும். எல்லோரும் ஒன்றுபட்டால் நிச்சயம் நல்ல மாற்றத்தை கொண்டுவர முடியும். விவசாயத்தில் நிலைத்த நீடித்த வளர்ச்சியை அடைய முடியும். என் மகன் இன்ஜினியர் ஆக வேண்டும், என் மகன் டாக்டர் ஆக வேண்டும் என்று மட்டும் இருக்காமல் என் மகன் விவசாயி ஆக வேண்டும் என்று பெற்றோர்கள் விரும்பும் நாள் வரவேண்டும். ஒன்றுபடுவோம்... திட்டமிடுவோம்.. செயல்படுவோம்..
Rate this:
Cancel
gbs - Tiruchchirappalli,இந்தியா
01-பிப்-201514:04:43 IST Report Abuse
gbs good idea but when there is no rain ,no ground water ,power cut how can we go ahead of green revolution,need huge money to invest for making deep well ,power supply u have to wait many years finaly the tree yield will be after 15 years, since this kind of short falls are there and noo transperancy on govt schems very dificult to do green revolution.
Rate this:
அரிமா - திருநெல்வேலி,இந்தியா
02-பிப்-201501:33:01 IST Report Abuse
அரிமாநண்பரே இப்படியே பேசிக்கொண்டிருந்தால் 15 வருடத்திற்கு அப்புறமும் நம்மிடம் சூன்யமே மிஞ்சும். முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X