பொது செய்தி

தமிழ்நாடு

வடமாநில தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக பணிபுரியும் அவலம்: வேலூர் மாவட்டத்தில் அதிரடி ஆய்வு நடக்குமா?

Updated : பிப் 03, 2015 | Added : பிப் 03, 2015 | கருத்துகள் (12)
Share
Advertisement
வேலூர் : வேலூர் மாவட்டத்தில், போதிய பாதுகாப்பு வசதி இல்லாத தொழிற்சாலைகளில், வடமாநில தொழிலாளர்கள் பலர், கொத்தடிமைகளாக வேலை செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து, அதிகாரிகள் ஆய்வு செய்தால், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம்.கழிவுநீர் தொட்டி உடைந்தது:வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டை சிப்காட் பகுதியில், கடந்த 31ம் தேதி அதிகாலை, தோல் கழிவுநீர்
வடமாநில தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக பணிபுரியும் அவலம்: வேலூர் மாவட்டத்தில் அதிரடி ஆய்வு நடக்குமா?

வேலூர் : வேலூர் மாவட்டத்தில், போதிய பாதுகாப்பு வசதி இல்லாத தொழிற்சாலைகளில், வடமாநில தொழிலாளர்கள் பலர், கொத்தடிமைகளாக வேலை செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து, அதிகாரிகள் ஆய்வு செய்தால், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம்.


கழிவுநீர் தொட்டி உடைந்தது:


வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டை சிப்காட் பகுதியில், கடந்த 31ம் தேதி அதிகாலை, தோல் கழிவுநீர் தொட்டி உடைந்ததில், 10 பேர் பரிதாபமாக இறந்தனர்; அவர்களில், ஒன்பது தொழிலாளர்கள், மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.

இதுகுறித்து, விசாரித்த போது கிடைத்த தகவல்கள் வருமாறு:
ராணிப்பேட்டை சிப்காட் பகுதியில், 86 தோல் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன; இவற்றில், 3,500 தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். அவர்களில், 1,000க்கும் குறைவானவர்கள் மட்டுமே, நிரந்தர தொழிலாளர்களாக உள்ளனர்; மற்றவர்கள் தினக்கூலி மற்றும் ஒப்பந்த முறையில் வேலை செய்கின்றனர்.மேற்குவங்கம், ஒடிசா, பீகார் போன்ற வடமாநிலங்களில் இருந்து மட்டும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், இம்மாவட்டத்தில் ஒப்பந்த தொழிலாளர்களாக பணிபுரிகின்றனர். ஆண்டுக்கு ஓரிருமுறை மட்டுமே, சொந்த ஊருக்கு சென்று வருவதாக, அந்த தொழிலாளர்கள் கூறுகின்றனர்.மாநிலம் விட்டு மாநிலம் வருபவர்கள், பணிபுரியும் தொழிற்சாலைகளிலேயே தங்க வைக்கப்படுகின்றனர். இதனால், அங்கு எதிர்பாராத விதமாக விபத்து ஏற்படும் சமயங்களில், அதில் சிக்கி உயிரிழப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தொழிற்சாலைகளுக்கு அப்பால், தொழிலாளர்களுக்கு என, தனியாக இடம் ஒதுக்கீடு செய்திருந்தாலோ அல்லது வாடகை வீடுகளில் தங்க வைத்திருந்தாலோ, 10 பேர் உயிரிழந்ததை தவிர்த்து இருக்கலாம் என, சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.


காரணம் இதுதான்:

கொடுக்கும் கூலியை பெற்று, சொல்கிற வேலையை செய்வர் என்பதாலும், நிர்வாகத்துக்கு எதிராக கொடி பிடிக்கவோ, கோஷம் போடவோ மாட்டார்கள் என்ற காரணத்துக்காகவும், வெளிமாநில தொழிலாளர்களை தேடிப்பிடித்து, தொழிற்சாலைகளில் வேலை கொடுப்பதாக, தொழிற்சங்க பிரதிநிதிகள் குற்றம்சாட்டுகின்றனர். நாளொன்றுக்கு கூலியாக, 186 ரூபாயை பெற்று, இங்குள்ள தொழிற்சாலைகளில், கொத்தடிமைகள் போல் வேலை செய்வதாக கூறப்படுகின்றன. இதற்காகவே, வடமாநிலங்களில் இருந்து தொழிலாளர்களை அழைத்துவர, ஏஜென்டுகள் பலர் சுற்றித் திரிவதாகவும், தகவல் வெளியாகி உள்ளது.தமிழக அரசு, சிறப்பு குழுவை அமைத்து, மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளிலும் ஆய்வு நடத்தினால், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம்.

Advertisement


வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
BHARAT - Coimbatore,இந்தியா
03-பிப்-201522:08:59 IST Report Abuse
BHARAT இந்த தமிழ் நாட்டில் தமிழனுக்கு பாதுகாப்பு இல்லை. பின்ன எப்படி வட மக்களுக்கு பாதுகாப்பு தர முடியும். வடமாநில தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக பணிபுரியும் அவலம். சற்று தமிழ் நாட்டை பார்த்தால் தமிழ் நாட்டின் தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக பணிபுரியும் அவலம் உள்ளது விளங்கும். படித்த படிக்காத மக்களுக்கு வேலை இல்லாமை. நாம் சூப்பர் ஸ்டார் சொன்ன மாதரி "The Rich get Richer and the Poor get Poorer"
Rate this:
Cancel
Raja - Bangalore,இந்தியா
03-பிப்-201508:30:16 IST Report Abuse
Raja இது போல பிழைப்பு தேடி நம் மாநிலத்திற்கு வருபவர்களுக்கு உரிய தொழிலாளர்கள் பாதுகாப்பு சட்டங்களை சரியான முறையில் கடைபிடிக்க படுகின்றனவா என்று கண்காணிப்பது அரசின் கடமை. அவர்களை மனிதநேயத்தோடு நடத்துவது மக்களாகிய நமது கடமை. இவர்களைப் போல உடல் வருத்தி பலர் உழைப்பதால் தான் நாம் நன்றாக இருக்க முடிகிறது என்ற எண்ணம் வர வேண்டும்.
Rate this:
Cancel
ரத்தினம் - Muscat,ஓமன்
03-பிப்-201508:21:15 IST Report Abuse
ரத்தினம் கட்டுமான பணியில், இந்தியாவை ஒப்பிட்டு பார்த்தால் வளைகுடா நாடுகளில் கடுமையான சட்டங்கள் உள்ளன. அதனால் விபத்துக்கள் குறைவு, பாதுகாப்பு அதிகம். கட்டுமான பணி நடக்கும் இடங்களில் பாதுகாப்பு மற்றும் பணியாளர்களின் நலன்களை பின்பற்ற அரசு தனிக்கவனம் செலுத்த வேண்டும், கட்டுப்பாடுகளை அதிகப்படுத்தி தொழிலாளர் நலனை பாது காக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X