நச்சு நீர் குடிநீராச்சு: மே.வங்க மக்களின் சாதனை| Dinamalar

பொது செய்தி

இந்தியா

நச்சு நீர் குடிநீராச்சு: மே.வங்க மக்களின் சாதனை

Added : பிப் 03, 2015 | கருத்துகள் (8)
Share
கோல்கட்டா: மேற்கு வங்கத்தில், நச்சுத் தன்மை உடைய நிலத்தடி நீரைக் கொண்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள், தற்போது, தண்ணீரை சுத்திகரித்து, பாதுகாப்பான குடிநீரை பயன்படுத்துவதுடன், மற்றவர்களுக்கும் விற்பனை செய்வது, ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.நிலத்தடி நீர் :மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, வடக்கு 24 பர்கானா
நச்சு நீர் குடிநீராச்சு: மே.வங்க மக்களின் சாதனை

கோல்கட்டா: மேற்கு வங்கத்தில், நச்சுத் தன்மை உடைய நிலத்தடி நீரைக் கொண்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள், தற்போது, தண்ணீரை சுத்திகரித்து, பாதுகாப்பான குடிநீரை பயன்படுத்துவதுடன், மற்றவர்களுக்கும் விற்பனை செய்வது, ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


நிலத்தடி நீர் :

மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, வடக்கு 24 பர்கானா உட்பட, ஒன்பது மாவட்டங்களில் நிலத்தடி நீர், பல ஆண்டுகளாகவே நச்சுத் தன்மை உடையதாக உள்ளது. இதனால், இந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் தோல் நோய், புற்றுநோய், சிறுநீரகம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டனர். குடிப்பதற்கும், உணவு சமைப்பதற்கும் இந்த நீரை பயன்படுத்த முடியாததால், மாநிலத்தின் வேறு பகுதிகளில் இருந்து, இவர்களுக்கு குடிநீர் சப்ளை செய்யப்பட்டது. ஆனாலும், இந்த குடிநீர் அவர்களுக்கு போதுமானதாக இல்லை. அங்கு நிலவிய பெரும் குடிநீர் தட்டுப்பாடு காரணமாக, ஏராளமான மக்கள் அங்கிருந்து வெளியேறத் துவங்கினர்.இந்நிலையில், இந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள், தங்களுக்குள் ஒரு கூட்டுறவு சங்கத்தை ஏற்படுத்தி, 'சுலப் இன்டர்நேஷனல்' என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் உதவியுடன், தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை வாங்கியுள்ளனர்.


சுத்திகரித்து :

இவற்றின் மூலம், தங்கள் பகுதிகளில் உள்ள குட்டைகளில் தேங்கியுள்ள நீரை, குடிநீராக சுத்திகரித்து, தாங்கள் பயன்படுத்துவதுடன், மற்ற பகுதிகளுக்கும் விற்பனை செய்கின்றனர்.ஒரு லிட்டர் குடிநீர், 50 பைசாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அருகில் உள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள், இந்த பகுதிகளுக்கு வந்து, குடிநீரை வாங்கிச் செல்கின்றனர்.

இதுகுறித்து, கூட்டுறவு சங்க தலைவர் ஹலாதர் சர்மா கூறியதாவது:பிரான்சில் செயல்படுத்தப்படும் தொழில்நுட்பத்தை நாங்கள் பின்பற்றுகிறோம். தினமும், 2,000 லி., சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை தயாரிக்கிறோம். எங்கள் தேவைக்கு பயன்படுத்தப்பட்டது போக, மீதமுள்ள தண்ணீரை விற்பனை செய்கிறோம். இப்போது, இந்த பகுதியைச் சேர்ந்த மக்கள், நச்சு இல்லாத தண்ணீரை பயன்படுத்துவது மகிழ்ச்சியை அளிக்கிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X