பொது செய்தி

தமிழ்நாடு

குன்னூரில் பிரமிப்பை ஏற்படுத்திய கராத்தே சாகச நிகழ்ச்சி

Added : பிப் 03, 2015
Share
Advertisement
குன்னூர் : குன்னூரில் நடந்த கராத்தே சாகச நிகழ்ச்சி பிரம்மிப்பை ஏற்படுத்தியது.குன்னூர் அருகே அருவங்காடு ஐயப்பன் "ஷோட்டாகான்' கராத்தே பள்ளியில், பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் கராத்தே பயின்று வருகின்றனர். இப்பள்ளி சார்பில், வெலிங்டனில் கராத்தே சாகச நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.இதில், கருணாகரன் என்பவர், தன்னுடைய வயிற்றின் மீது, ஒன்றன் பின் ஒன்றாக, 20 ஆமினி

குன்னூர் : குன்னூரில் நடந்த கராத்தே சாகச நிகழ்ச்சி பிரம்மிப்பை ஏற்படுத்தியது.குன்னூர் அருகே அருவங்காடு ஐயப்பன் "ஷோட்டாகான்' கராத்தே பள்ளியில், பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் கராத்தே பயின்று வருகின்றனர். இப்பள்ளி சார்பில், வெலிங்டனில் கராத்தே சாகச நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.இதில், கருணாகரன் என்பவர், தன்னுடைய வயிற்றின் மீது, ஒன்றன் பின் ஒன்றாக, 20 ஆமினி வேன்களை ஏற்றி இறக்கிய காட்சி, பார்வையாளர்களை பிரம்மிப்பில் ஆழ்த்தியது.இதனை தொடர்ந்து, ராஜா என்பவர், தனது இரண்டு கைகளை தரையில் வைத்து, விரல்கள் மீது ஐந்து ஆமினி வேன்களை ஏற்றி சாதனை படைத்தார்.மேலும், ராஜா மற்றும் கருணாகரன் ஆகிய இருவரும் இரண்டு ஆணி படுக்கையின் மீது, ஒருவர் மீது ஒருவர் படுத்துக்கொண்டு, 500 கிலோ எடை கொண்ட ஐஸ் கட்டிகளை சம்மட்டியால் உடைத்து அசத்தினர்.பள்ளி மாணவி ரீத்திகாவை, ஆணி மீது படுக்க வைத்து,75 கிலோ ஐஸ் கட்டி வைத்து சம்மட்டியால் உடைக்கும் சாகச நிகழ்ச்சியும் நடந்தது. மேலும், கராத்தே பள்ளி மாணவன் தன் வயிற்றின் மீது இரு கர வாகனத்தை ஏற்றி சாதனை படைத்தான். இதுபோல, பல பள்ளி மாணவ, மாணவியரும் சாதனை படைத்து அசத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X