பதிவு செய்த நாள் :
கருத்துகள் (46)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளில், 70 சதவீதம் பேர், மீண்டும் இலங்கை செல்ல விருப்பம் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில், ஏழு நிலைகள் கொண்ட தயாரிப்பு திட்டம் என்ற பெயரில், மத்திய, மாநில அரசுகளுக்கு அவர்கள் நிபந்தனை விதித்துள்ளனர்.

இலங்கையில் நடந்த மூன்றுகட்ட போர்களினால், 8 லட்சம் தமிழர்கள், அந்நாட்டை விட்டு வெளியேறினர். இவர்களில், 3.20 லட்சம் பேர், தமிழகம் வந்தனர். 2.12 லட்சம் பேர், இலங்கை திரும்பி விட்டனர். 1.02 லட்சம் பேர், தமிழகத்தில் உள்ளனர் என, தமிழக அரசு தெரிவித்துள்ளது. மூன்றாம்கட்ட இறுதிப் போர் முடிந்த பின்னும், நாட்டுக்கு திரும்பாமல் உள்ளவர்களின் எண்ணிக்கையே, 1.02 லட்சம். இவர்களில், 34,524 பேர், 107 முகாம்களிலும், மீதமுள்ளவர்கள் வெளியிலும் தங்கியுள்ளனர்.

அதிபர் தேர்தல்:இலங்கையில், அண்மையில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள், தாயகம் திரும்பத் தேவையான ஏற்பாடுகளை, ஈழ அகதிகள் மறுவாழ்வுக்கான அமைப்பு செய்து வருகிறது.'ஈழத் தந்தை' என அழைக்கப்படும் செல்வாவின் மகனும், இந்த அமைப்பின் பொருளாளருமான சந்திரஹாசன் கூறியதாவது:ஈழத் தமிழர்களுக்கு, நெருக்கடியான கட்டத்தில் தமிழகம் உதவி செய்துள்ளது. இதை, எங்களால் எப்போதும் மறக்க முடியாது. அதே நேரத்தில், விருந்தாளியாக எத்தனை நாட்களுக்கு, தமிழகத்தில் இருக்க முடியும். ஓட்டுரிமை, நிரந்தர குடியுரிமை என்பது, இலங்கையில் தான் கிடைக்கும். அதனால், பெருவாரியான ஈழத் தமிழர்கள், நாடு திரும்பவே விரும்புகின்றனர். இறுதிக்கட்டப் போர் முடிந்த பின், 2009 முதல் 2014 வரை, 2,000 பேர், அவர்களே விரும்பி, இலங்கை திரும்பி உள்ளனர். அவர்களில் பெரும் பகுதியினர், அங்கு தான் இருக்கின்றனர். சிலர், மீண்டும் இங்கு வந்துவிட்டனர்.அங்கிருப்பவர்கள், 'ஸ்கைப்' என்ற இணையதள வசதி மூலம் இங்கு உள்ளவர்களிடம் பேசுகின்றனர். அங்கு, உயிருக்கு அச்சமில்லை என்பது தெரிய வந்திருக்கிறது.

நெருக்கடிகள்:ஆனால், சில நெருக்கடிகள் மட்டும் உள்ளன. அதைத் தாண்டி முன்னேற முடியும் என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது. அகதிகள் நாடு திரும்புவதில் தமிழக அரசியலை புகுத்தாமல், விரும்பி நாடு திரும்புவோரை, உரிய முறையில் மகிழ்ச்சியுடன் அனுப்ப வேண்டும்.ஈழத்தில் விட்டுவிட்டு வந்த வீடு, நிலம் ஆகியவற்றை திரும்ப வழங்க வேண்டும். அப்படியில்லாத நிலையில், மாற்று இடங்களை வழங்க தயாராக இருப்பதாக, இலங்கை அரசு கூறியுள்ளது. ஆட்சி மாற்றத்தால் நிம்மதி ஏற்படும் வகையில், பாதுகாப்பு அம்சங்கள்

உருவாகியுள்ளன. புதிய அரசின், 100 நாள் திட்டம், இதற்கு சாட்சியாக இருக்கும் என, எதிர்பார்க்கிறோம். தமிழர் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் உள்ளிட்ட தமிழர் தலைவர்களைக் கொண்டு, இலங்கை அதிபர், பிரதமர் ஆகியோர் அடங்கிய குழு தான், 100 நாள் திட்ட நோக்கத்தை உருவாக்குகிறது. எனவே, தமிழர்களுக்கு சாதகமான நிலை உருவாகும்.இவ்வாறு, அவர் கூறினார்.

70 சதவீதம் பேர் ஆர்வம்:இந்தியாவில் உள்ள, பல்வேறு தொண்டு நிறுவனங்கள் நடத்திய ஆய்வில், தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளில், 70 சதவீதம் பேர், நாடு திரும்ப விரும்புவதாக தெரிவித்துள்ளனர். 20 சதவீதம் பேர், சில நிபந்தனைகளுக்குஉட்பட்டு நாடு திரும்ப விரும்புகின்றனர். 10 சதவீதம் பேரே, தமிழகத்தில் தொடர்ந்து வாழ விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர்.இந்த ஆய்வு, பார்லிமென்ட் நிலைக்குழு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு உள்ளது.

இதுகுறித்து, நிலைக்குழு தலைவர் சுதர்சன நாச்சியப்பன் கூறியதாவது:இரு நாடுகளின் வெளியுறவுத் துறை அதிகாரிகள், ஐ.நா., சபை அதிகாரிகள் பங்கேற்ற கூட்டத்தில், தொண்டு நிறுவனம் தன் ஆய்வு முடிவை அளித்துள்ளது. இதை, அகதிகள் மறுவாழ்வுக்கான பார்லிமென்ட் நிலைக் குழுவும், ஆய்வுக்கு எடுத்துக் கொண்டுள்ளது.தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளிடம், பார்லிமென்ட் நிலைக்குழு, கருத்துக் கேட்பு கூட்டங்களை நடத்த உள்ளது. அதன்மூலம் தொண்டு நிறுவன ஆய்வில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள், முழுமையாக ஆய்வு செய்யும். இதன்பின், நிலைக்குழு அறிக்கை பார்லிமென்டில் தாக்கல் செய்யப்படும். தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் நாடு திரும்ப விரும்பினால் அதற்கு, மூன்று முதல் ஐந்து ஆண்டுகளாகும். இதற்கான தயாரிப்பு பணிகள் மற்றும் பாதுகாப்பு பணிகளை செய்து தர வேண்டி இருக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.

பலன் என்ன?இலங்கையின், 1981ம் ஆண்டு மொத்த மக்கள் தொகை கணக்குப்படி, 7.4 சதவீத தமிழர்கள் இருந்தனர். 2012 கணக்கெடுப்பின் போது, தமிழர்களின் எண்ணிக்கை, 5.2 சதவீதமாகக் குறைந்துள்ளது என, புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.போரினால், தமிழர்கள் வெளியேறியதால், மக்கள் தொகை குறைந்து விட்டது. இதனால், இலங்கை பார்லிமென்டில், தமிழர்களின் எண்ணிக்கையில், நான்கு எம்.பி.,க்கள் குறைந்துள்ளனர்.வெளிநாட்டில் உள்ள தமிழர்கள்,

Advertisement

தாயகம் திரும்புவதன் மூலம், தமிழர்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கும். அதன்மூலம், அவர்களின் உரிமையை நிலைநாட்ட முடியும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

ஏழு அம்ச திட்டம் என்ன?*இந்தியாவில் இருந்த காலத்தில், பெற்ற கல்வி சான்று, திருமண சான்று, தொழில் சான்றுகளை தமிழகஅரசு அளிக்க வேண்டும். அதோடு, இங்கு சேர்த்த பொருட்களை, தாயகம் கொண்டு செல்ல, அனுமதியும், அவற்றை கொண்டு செல்ல மரப் பெட்டிகளும் கொடுக்க வேண்டும்.
*இப்பொருட்களை, அகதி முகாமில் இருந்து, விமான நிலையம் மற்றும் துறைமுகங்களுக்கு கொண்டு செல்ல, போக்குவரத்து வசதி செய்து தர வேண்டும். அத்துடன், இந்திய அரசு அளிக்கும் மறுவாழ்வு உதவிகளையும் கொடுக்க வேண்டும். இதற்கான, உறுதி ஆவணங்களையும் அளிக்க வேண்டும்.
*குறிப்பாக, பொருட்களை கொண்டு செல்ல, சிறப்பு கப்பல் போக்குவரத்தோடு, சுங்க மற்றும் இதர செலவுகளை இந்திய அரசு ஏற்க வேண்டும்.
*இலங்கையில், இப்பொருட்களுக்கு, சுங்க வரி விலக்கு பெற்று தர வேண்டும். இலங்கையில் சொந்த ஊர்களுக்கு செல்ல, சிறப்பு போக்குவரத்து ஏற்பாடு செய்து தர வேண்டும்.
*இலங்கையில், மீள் குடியமர்வு செய்யப்படுவோருக்கு, குடியிருக்க இடம், வீடு, தொழிலுக்கான உதவிகளை, படிப்படியாக அளிக்க வேண்டும்.
*நிரந்தர குடியமர்வு செய்யப்படுவோருக்கு, முதல் மூன்று ஆண்டுகளுக்கு, உணவு, மருத்துவ வசதி, குழந்தைகளின் கல்வி ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும்.
*வாழ்வாதாரத்தை உறுதி செய்ய, தொழில் பயிற்சி மற்றும் கடன் உதவிகளை அளிக்க வேண்டும்.இவ்வாறு, ஏழு அம்ச திட்டங்களை முன் வைக்கின்றனர்.
- நமது சிறப்பு நிருபர் -

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (46)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
&2986&3009&2997&2985&3021 - Karur,இந்தியா
05-பிப்-201509:23:00 IST Report Abuse
&2986&3009&2997&2985&3021 நண்பர்களுக்கு வணக்கம். நானும் இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து வந்து தற்போது அகதி முகாமில் வசித்து வருபவன்தான். இந்தக் கட்டுரை தொடர்பாக சில விடயங்களை ஆசிரியருக்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன். இங்கு குறிப்பிடப்பட்ட கருத்துகள் குறிப்பிட்ட ஒரு சிலரின் கருத்துக்களை உள்ளடக்கியுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன். தமிழக முகாம்களில் உள்ள ஒட்டுமொத்த அகதி மக்களின் கருத்து இதுவல்ல. மேலும் இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் 7 அம்ச கோரிக்கை என்பது அகதி முகாம்களில் வசிக்கும் எவருக்குமே தெரியாத ஒன்று. யாரோ ஒரு சிலர் தங்களது சுய நல நோக்கத்துக்காக இதனை தயாரித்து அதனை ஒட்டுமொத்த அகதி மக்களின் கருத்தாக பதிவு செய்துள்ளனர். மேலும் தொண்டு நிறுவனங்கள் நடத்திய ஆய்வில் 70 சதவீதம் பேர் தாயகம் திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளனர் என்பதும் தவறான தகவலே. ஏனெனில் சில மாதங்களுக்கு முன்னர் மும்பையில் உள்ள டாடா இன்ஸ்டிடியூட் ஆப் சோசியல் சயின்ஸ் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் 3ல் 2பேர் இலங்கை செல்ல விரும்பவில்லை என்ற தகவலை பதிவு செய்திருந்தனர். பெரும்பாலான ஆங்கில நாளிதழ்களில் இந்த செய்தி வெளியாகியிருந்தது. எனவே 70 சதவீதம் விருப்பம் தெரிவித்துள்ளனர் என்ற தகவலும் ஒரு சில இலாப நோக்குடையோரின் கருத்தாக இருக்கலாம். அடுத்தாக இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கும் மக்கள் தொகை குறைவு, பாராளுமன்ற ஆசனம் இழப்பு என்பதை பார்ப்போம். இலங்கைத் தமிழகர்களைப் பொறுத்தவரையில் இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதுமே அவர்கள் வாழ்ந்து வருகின்றனர். ஒட்டுமொத்த இலங்கைத் தமிழர்களில் நான்கில் ஒரு பகுதியினர் இலங்கைக்கு வெளியே வாழ்ந்து வருகின்றனர். ஏறக்குறைய 10 இலட்சம் பேர் இலங்கைக்கு வெளியே வாழ்ந்து வருகின்றனர். இதில் 102241 பேர்தான் தமிழகத்தில் வாழ்ந்து வருவதாக மக்களவையில் கேள்வி நேரத்தின் போது எழுத்துப் பூர்வமாக வழங்கப்பட்ட பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் உள்ள 1 இலட்சம் பேர் இலங்கை திரும்பினால் பாராளுமன்ற ஆசனம் காக்கப்படுமா? அல்லது வெளிநாடுகளில் உள்ளோர் நாடு திரும்பினால் பாராளுமன்ற ஆசனம் காக்கப்படுமா? ஏன் எந்தத் தலைவருமே வெளிநாடுகளில் வசித்து வரும் தமிழகர்களை தாயகம் திரும்பிடக் கோரவில்லை? நிலமை இப்படி இருக்கும் போது இலங்கையில் உள்ள தமிழ்த் தலைவர்களும், இந்தியாவில் இலங்கைத் தமிழர்களின் நலனில் அக்கறை கொண்டோர் எனக் கூறிக்கொள்வோரும் தமிழகத்தில் உள்ளோரை மட்டும் குறிவைத்து தாயகம் திரும்பக் கோருவது ஏன்? இறுதியாக ஒரு விடயம் தமிழக முகாம்களில் வசித்து வரும் 65000 மக்களின் ஏறக்குறைய 30000 பேர் வரை இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட தமிழர்கள். இவர்கள் ஆங்கிலேய ஆட்சியின் போது பஞ்சம் பிழைக்க இலங்கையின் தேயிலைத் தோட்டங்களுக்கு வேலைக்குச் சென்றவர்கள். இலங்கை சுதந்திரம் பெற்ற போது குடியுரிமை பறிக்கப்பட்டு தாக்குதலுக்கு ஆளாணவர்கள். தேயிலைத் தோட்டங்களில் ஏற்பட்ட வன்முறைகளால் பாதிக்கப்பட்டு இலங்கையின் தமிழ்ப் பகுதிகளுக்கு புலம்பெயர்ந்து அங்குள்ள காடுகளை வெட்டி விவசாய பூமியாக்கியவர்கள். அவர்கள் போரினால் பாதிக்கப்பட்டு தங்களது தாய்நாடான இந்தியாவிற்கே அகதிகளாக வந்தனர். இந்தக் கொடுமை யாருக்கு ஏற்பட்டுள்ளது? அகதியாக 25 வருடம் வாழ்ந்தவர்களை மீண்டும் இலங்கைக்கு கொண்டு செல்வோம் என ஒரு சிலர் முயற்சி செய்வது அவர்களின் சுய நல இலாபம் கருதிய செயல்பாட்டையே உணர்த்துகிறது. நண்பர்களே அகதி மக்களின் உண்மையான பிரச்சனைகளை புரிந்து கொண்டு, அகதி மக்களுடன் பேசி அவர்களது உண்மையான உள்ள எண்ணங்களை வெளிப்படுத்துங்கள். இங்கு நான் குறிப்பிட்ட விடயங்களை கூட நீங்கள் அகதி மக்களை நேரடியாகச் சந்தித்துப் பேசுங்கள். உண்மை புலப்படும். உண்மை நீண்ட ஒருபோதும் உறங்குவதில்லை. பத்திரிக்கை என்பது ஒரு நாட்டின் தலையெழுத்தையே மாற்றக் கூடியது. ஒரு இனத்தில் தலை எழுத்தை மாற்ற உதவிடுங்கள். நன்றி.
Rate this:
Share this comment
Cancel
தாமரை - பழநி,இந்தியா
04-பிப்-201511:28:35 IST Report Abuse
தாமரை இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் மீண்டும் தங்களது தாயகத்துக்குத் திரும்புவதே அவர்களுக்கான பிரச்சினைகள் தீர்வதற்கான வழி.போக மறுக்கும் மற்றவர்களையும் உரிய பாதுகாப்புடன் அனுப்புவதே நல்லது.மேலும் இங்குள்ளவர்களுக்கு அங்குள்ள பயங்கர வாதக் குழுக்களுடன் ஏதேனும் தொடர்பிருப்பதாகச் சந்தேகப் பட்டால் அவர்களை இலங்கையின் விசாரணை அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும். இதுதான் இந்தியா செய்ய வேண்டிய முக்கியப் பணியாகும்.எந்தக் காரணத்தைக் கொண்டும் இலங்கையின் பிரிவினைக்கு நமது நாடு கொஞ்சமும் இடம் தரலாகாது.இதன் மூலம் அந்நாட்டின் நம்பிக்கையை நாம் முழுமையாகப் பெறலாம்.இலங்கையின் நல்லுறவு நமது தேசப்பாது காப்புக்கு மிகவும் அவசியம். இலங்கையின் இறையாண்மைக்கு இந்தியா எப்போதும் தோள்கொடுக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Sriram V - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
04-பிப்-201511:25:07 IST Report Abuse
Sriram V Government should sent back whoever is willing. They should not allow these people to settle inside TN. They should be sent back. Now rich people from that state got ration cards, passport, etc. using their money power and corrupting our officials. Also they got lot of properties at a higher price resulting in increase of price. Government must stop this at all cost
Rate this:
Share this comment
Cancel
Nannisigamani Baskaran - Chennai,இந்தியா
04-பிப்-201510:59:47 IST Report Abuse
Nannisigamani Baskaran இவர்கள் அகதிகள் அல்ல விருந்தினர்கள், விருந்தினர்களின் விருப்பத்தை மத்திய / மாநில அரசுகள் நிறையற்ற முன்வர வேண்டும். அரசியல் கட்சிகளிடம் கருத்து கேட்கிறேன் என காலதாமதம் செய்ய கூடாது ? போக விருப்ப படாதவர்களுக்கு அதற்க்கான காரணத்தை அறிந்து, காரணம் நியாயமானதாக இருந்தால் அவர்களுக்கு இந்திய குடியுரிமை கொடுத்து சுதந்திரமாக வாழ அனுமதிக்க வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
சோமசுந்தரம் - நிகாடா,ஜப்பான்
04-பிப்-201510:51:18 IST Report Abuse
சோமசுந்தரம் அகதிகள் அவர்களின் நாட்டுக்கு செல்ல இலங்கை அரசுதான் உதவ வேண்டுமே தவிர இந்திய அரசு அல்ல. இத்தனை நாட்கள் அவர்களுக்கு பாதுகாப்பு அளித்து உதவிய இந்தியாவிடமிருந்து இன்னும் சலுகைகளா? இந்திய அரசு இலங்கை அரசுடன் பேசி அதற்கான வழியை ஏற்படுத்தி கொடுக்கலாம்.
Rate this:
Share this comment
Cancel
Ramanathan Pillai - Tirunelveli,இந்தியா
04-பிப்-201510:45:34 IST Report Abuse
Ramanathan Pillai மனிதாபிமான அடிப்படையில் அகதிகளுக்கு இந்தியாவில் தங்குவதற்கு இடம் கொடுக்கப்பட்டது. அவர்கள் நாட்டில் அமைதி நிலைமை திரும்பிய பின் அவர்களாக வே அவர்கள் திரும்பிச்செல்வது தானே நியாயம்,. அதை விடுத்து தமிழகத்தில் அரசியல் கட்சிகள் இலங்கையை வைத்து பிழைப்பு நடத்துவதால் , இவர்கள் பங்குக்கு நிபந்தனைகள் விதிப்பது வேடிக்கையாக இருக்கிறது. நியாயமான் கோரிக்கைகள் வைத்தால் மாநில மதிய அரசுகள் பரிசீலித்து ஆவன செய்ய வேண்டும். நிபந்தனைகள் என்பது சற்று அதிகமாக இல்லை?
Rate this:
Share this comment
Cancel
Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
04-பிப்-201510:44:01 IST Report Abuse
Swaminathan Nath வாழ்வாதாரத்தை உறுதி செய்ய, தொழில் பயிற்சி மற்றும் கடன் உதவிகளை அளிக்க வேண்டும். இவர்களது நியாயமான கோரிக்கையை மதிய, மாநில அரசுகள் செய்யவேண்டும்,.
Rate this:
Share this comment
Cancel
P. SIV GOWRI - Chennai,இந்தியா
04-பிப்-201510:36:50 IST Report Abuse
P. SIV GOWRI திரும்பி செல்ல விரும்பும் இலங்கை தமிழர்களுக்கு, வேண்டியதை செய்ய வேண்டும்..இனிமேலாவது நல்லதே நடக்க வேண்டும். ஆன நம்ம ஆளுங்க விட மாட்டாங்க போல
Rate this:
Share this comment
Cancel
Sundeli Siththar - North Carolina,யூ.எஸ்.ஏ
04-பிப்-201510:12:07 IST Report Abuse
Sundeli Siththar இலங்கையில் மீள்குடி ஏறுவோருக்கான அடிப்படை வசதிகளை செய்துத் தருவது இலங்கை அரசின் கடமை. அதை உறுதி செய்வது வேண்டுமென்றால், இந்திய அரசு செய்யட்டும். இவற்றை கோரிக்கையாக வைக்கலாமே தவிர, உரிமையாக கேட்கக்கூடாது. தமிழர்கள்.. ரத்த சம்பந்தம் உள்ளவர்கள்.. தொப்புள்கொடி உறவு உள்ளவர்கள் என்ற காரணத்தால் இவர்கள் மீது பரிதாபப்பட்டு நாம் அவர்களுக்கு உதவ வேண்டும் என்பதில் தவறில்லை. ஆனால் அவற்றை உரிமையாக கேட்பது... சரியல்ல.
Rate this:
Share this comment
Cancel
Sundeli Siththar - North Carolina,யூ.எஸ்.ஏ
04-பிப்-201510:08:18 IST Report Abuse
Sundeli Siththar இவங்க பொருளை சேர்பாங்க... அதை ஊருக்கு எடுத்துப் போகும் செலவு அனைத்தையும் தமிழக அரசு தரவேண்டுமாம்... கொஞ்சம் ஓவர்தான்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X