ஆம் ஆத்மி ரூ.2 கோடி பெற்றது குறித்து விசாரணை

Updated : பிப் 04, 2015 | Added : பிப் 03, 2015 | கருத்துகள் (48) | |
Advertisement
புதுடில்லி: ''போலியாக உருவாக்கப்பட்ட கம்பெனிகளிடம் இருந்து, ஆம் ஆத்மி கட்சி, 2 கோடி ரூபாய் பெற்றுள்ளதன் மூலம், கறுப்புப் பணம் தந்திரமான வழியில் கைமாறி உள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்தப்படும்,'' என, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார். போலி கம்பெனிகள்: டில்லியில், வரும் 7ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில், பா.ஜ.,வுக்கு சரியான
ஆம் ஆத்மி ரூ.2 கோடி பெற்றது குறித்து விசாரணை

புதுடில்லி: ''போலியாக உருவாக்கப்பட்ட கம்பெனிகளிடம் இருந்து, ஆம் ஆத்மி கட்சி, 2 கோடி ரூபாய் பெற்றுள்ளதன் மூலம், கறுப்புப் பணம் தந்திரமான வழியில் கைமாறி உள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்தப்படும்,'' என, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.


போலி கம்பெனிகள்:

டில்லியில், வரும் 7ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில், பா.ஜ.,வுக்கு சரியான போட்டியாக, அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி உள்ளது. இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அந்தக் கட்சியிலிருந்து வெளியேறிய சிலர், 'போலி பெயர் கொண்ட, நான்கு கம்பெனிகளிடம் இருந்து, தலா, 50 லட்சம் ரூபாய் வீதம், கடந்த ஆண்டில், ஆம் ஆத்மி கட்சி, 2 கோடி ரூபாய் நன்கொடை பெற்றுள்ளது. குறிப்பிட்ட அந்த கம்பெனிகள் செயல்படவே இல்லை' என, புகார் தெரிவித்தனர். இந்த புகாரை மறுத்த ஆம் ஆத்மி, 'டில்லி சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும், மூன்று முக்கிய அரசியல் கட்சிகளுக்கு கிடைத்த நன்கொடைகள் தொடர்பாக, கறுப்புப் பணம் குறித்து விசாரிக்கும், சிறப்பு புலனாய்வுக் குழு ஆய்வு செய்ய வேண்டும்' என, கோரிக்கை விடுத்தது.

இந்நிலையில், இந்த பிரச்னை தொடர்பாக, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியதாவது: போலியான கம்பெனிகளிடம் இருந்து, ஆம் ஆத்மிபணம் பெற்றுள்ளதன் மூலம், அந்தக் கட்சி கையும் களவுமாக பிடிபட்டுள்ளது. மேலும், கறுப்புப் பணமானது, போலி கம்பெனி பெயரில், ஆம் ஆத்மிக்கு சென்றுள்ளது.


ஹவாலா பணம்?

இந்தத் தவறை மறைப்பதற்காக, மற்ற கட்சிகளுக்கு கிடைக்கும் நன்கொடை தொடர்பாக, ஆய்வு செய்ய வேண்டும் என, ஆம் ஆத்மி கூறி, பிரச்னையை திசை திருப்ப பார்க்கிறது. ஆம் ஆத்மி பெற்ற பணம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விசாரணை நடத்துவர்; விரைவில், உண்மை வெளிவரும். ஒரு நிறுவனத்திடம் இருந்து, அரசியல் கட்சியானது பணம் பெறும் போது, அந்த நிறுவனத்தை பற்றிய முழு விவரங்களையும் தெரிந்திருக்க வேண்டும். ஆம் ஆத்மிக்கான பண பரிமாற்ற விவகாரத்தில், 'ஹவாலா' பணமோ அல்லது கறுப்புப் பணமோ கைமாறி உள்ளது. அதிகாரிகள் விசாரணை நடத்தும் போது, தங்களுக்கு பணம் கொடுத்த கம்பெனிகள் பற்றிய விவரத்தையும், அந்த கம்பெனிகளுக்கு வருமானம் எங்கிருந்து வருகிறது என்ற விவரத்தையும், அரவிந்த் கெஜ்ரிவால் விளக்க வேண்டும். இவ்வாறு, அருண் ஜெட்லி கூறினார்.


அடித்தது 'அந்தர் பல்டி':

'பா.ஜ., - காங்., போன்ற அரசியல் கட்சிகளின் தேர்தல் நிதி மற்றும் செலவினங்கள் தொடர்பாக விசாரணை நடத்த, ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்கள் ஐந்து பேர், சுப்ரீம் கோர்ட்டில் கடிதம் வழங்குவர்' என, முன் தெரிவித்த, ஆம் ஆத்மி கட்சி, இப்போது தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளது.'கட்சியின் முன்னணித் தலைவர்களுக்குப் பதிலாக, கட்சியின் வழக்கறிஞர், சுப்ரீம் கோர்ட்டில் கடிதம் வழங்குவார்' என, அக்கட்சி தெரிவித்துள்ளது.

நாங்கள், நேர்மையான முறையிலேயே கட்சிக்கு நிதி சேர்க்கிறோம். எங்கள் மீது கூறப்படும் புகார்கள் உண்மை என நிரூபித்தால், சிறையில் தள்ளலாம். அரசியல் கட்சிகளின் தேர்தல் நிதி குறித்து, பா.ஜ., - காங்., தலைவர்களுக்கு கடிதம் எழுத உள்ளோம்.
அஷுதோஷ்,
ஆம் ஆத்மி செய்தி தொடர்பாளர்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (48)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Cheran Perumal - Radhapuram,இந்தியா
04-பிப்-201511:08:56 IST Report Abuse
Cheran Perumal கருப்பு பண சாக்கடையில் விழுந்த கெஜ்ரி மற்ற கட்சிகளையும் விசாரிக்க வேண்டும் என்கிறார். மற்ற கட்சிகள் மோசடிதான் என்று இங்கு கருத்து எழுதி விளங்க வைத்த அறிவாளிகள் அதே சாக்கடையில் ஏன் கெஜ்ரியும் போய் விழுந்தார் என்று கேட்க துப்பில்லையே. ஒரு தலைபட்சமாக கருத்து எழுதுவதால்தான் யாரும் யாரையும் தப்பாக எடுத்துக்கொள்வதில்லை.
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
04-பிப்-201510:23:28 IST Report Abuse
Pugazh V கடந்த டில்லி சட்ட மன்ற தேர்தலுக்கான செலவுக்கனக்கையே இன்னமும் பி ஜே பி வேட்பாளர்கள் சமர்ப்பிக்கவில்லை. அதை முதலில் செய்யச் சொல்லுங்கள். மேலும், AAP தமக்கு வருகிற நிதி எல்லாமே காசோலை தான் வாங்குகிறார்கள். அந்தக் காசோலைகள் தருகிற கம்பெனிகள், தனி நபர்களின் வங்கிக் கணக்கு மூலம் அவர்களின் சரித்திரமே அறிய இயலும். அவர்கள் யார் யார் என்கிற விவரத்தை அருண் ஜெட்லி பத்திரிகைகளுக்குசொல்வாரா? அவை போலிக் கம்பெனிகள் எனில், எப்படி அந்தக் கம்பெனிகள் பேரில் வங்கிக் கணக்கு துவங்க முடிந்தது? 2 கோடி வரை கொடுத்தது எந்தக் கம்பெனி என்று கம்பெனிகள் பேர்களை நிதி அமைச்சர் சொல்வாரா? ஒரு தனி நபர் வங்கிக் கணக்கு துவங்கவே 1008 பார்மாலிட்டிகள் இருக்கின்றனவே. சும்மா ஆம் ஆத்மி பார்டி மீதுஆதாரமில்லாத குற்றச் சாட்டை வீசிப் பார்க்கிறார், பாவம்.
Rate this:
Cancel
Sundeli Siththar - North Carolina,யூ.எஸ்.ஏ
04-பிப்-201510:17:11 IST Report Abuse
Sundeli Siththar பல குறுக்கு வழிகளில் அரசியல் கட்சிகளுக்கு நிதி வருவது ஏற்கனவே நடந்து வருவதுதான். ஆனால், நாங்கள் தூய்மையானவர்கள்,நேர்மையானவர்கள் என்று கூறும் ஆம் ஆத்மி கட்சியினர் இதற்கு கண்டிப்பாக பதில் சொல்லியே ஆகவேண்டும். ஏனென்றால், அடுத்தவர்கள் செய்வது திருட்டுத் தனம் என்ற வகையில் பேசியவர்கள், அதே போல தங்களது கட்சிக்கும் பணம் சேர்த்தால் இவர்களும் திருட்டுத்தனம் செய்வது போன்றதுதானே. ஆம் ஆத்மி கட்சியினர் பதவிக்கு வரக்கூடாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X