பொது செய்தி

இந்தியா

உணவு பொருட்களில் பூச்சிக்கொல்லி கலப்பு!

Updated : பிப் 05, 2015 | Added : பிப் 04, 2015 | கருத்துகள் (13)
Advertisement
உணவு பொருட்களில் பூச்சிக்கொல்லி கலப்பு!

புதுடில்லி : நாட்டில் விளைவிக்கப்படும் காய்கறிகள், பழங்கள் மற்றும் இதர உணவுப் பொருட்களில், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகப்படியான பூச்சிக் கொல்லி கலப்பு இருப்பதாக, மத்திய அரசின் அறிக்கையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

'இந்திய உணவுப் பொருள் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம்' விளைப்பொருட்களில் கலந்துள்ள பூச்சி கொல்லிகளின் அளவு குறித்து, ஆண்டுதோறும் ஆய்வு நடத்தி வருகிறது. அதற்கான அறிக்கையும் தாக்கல் செய்யப்படுகிறது. இந்நிலையில், 2013 - 14ம் ஆண்டில் விளைவிக்கப்பட்ட காய்கறிகள், பழங்கள் மற்றும் இதர உணவுப் பொருட்களில் நடத்தப்பட்ட ஆய்வில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிகப்படியான விளைப்பொருட்களில், அனுமதிக்கப்பட்ட அளவை விட மிக அதிக அளவில் பூச்சிக் கொல்லி கலந்திருப்பது தெரிய வந்துள்ளது.

மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்த, 2013 - 14ம் ஆண்டில் பயிரிடப்பட்ட விளைப்பொருட்ள் பலவற்றில், அனுமதிக்கப்பட் அளவை விட பூச்சிக் கொல்லி கலப்பு அதிகம் உள்ளது.
*மொத்தம், 16,790 மாதிரிகளை சோதனையிட்டதில், 509 மாதிரிகளில் அதிகப்படியான பூச்சி கொல்லி கலப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
*குறிப்பாக, 7,591 காய்கறி மாதிரிகளில், 221 மாதிரிகளில் அதிக பூச்சி கொல்லி கலப்பு காணப்பட்டது. குடை மிளகாய், பச்சை மிளகாய், தக்காளி, முட்டைகோஸ், பாகற்காய், பச்சை பட்டாணி, வெள்ளரி, கொத்தமல்லி இலைகள் உள்ளிட்ட போன்றவற்றில் அதிகப்படியான பூச்சி கொல்லி கலப்பு உள்ளது.
*திராட்சை போன்ற முக்கிய பழ வகைகளிலும், ஏலக்காய் போன்ற வாசனை பொருட்களிலும் அதிகப்படியான பூச்சி கொல்லி கலக்கப்பட்டுள்ளது.
*அரிசி, கோதுமை உள்ளிட்ட தானிய வகைகள் மட்டுமின்றி, பல வகை மீன்களிலும் அதிகப்படியான பூச்சி கொல்லி கலப்பு உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
gummanguthu gopi - abudhabi ,ஐக்கிய அரபு நாடுகள்
04-பிப்-201511:27:01 IST Report Abuse
gummanguthu gopi ஹ...ஹா... என்னமா நடிக்கிரீன்கப்பா... புதுசா ஏதோ கண்டு பிடிச்ச மாதிரி
Rate this:
Share this comment
Cancel
சோமசுந்தரம் - நிகாடா,ஜப்பான்
04-பிப்-201511:08:04 IST Report Abuse
சோமசுந்தரம் இயற்கை விவசாயிகளை எல்லாம் பசுமை புரட்சி என்ற பெயரில் செயற்கை உரம் பூச்சிகொல்லிகள் மூலம் செயற்கை விவசாயிகளாக மாற்றிவிட்டு, காயில் பூச்சிகொல்லி, பழத்தில் பூச்சிகொல்லி என்றால் என்ன செய்வது. பாமர விவசாயி என்ன செய்வார்? தேவையான பயிற்சி மற்றும் பூச்சிகொல்லிகளால் ஏற்படும் விளைவுகளை விவசாயிகளுக்கு புரிய வைப்பது நமது அரசின் கடமையாகும். வெறும் அறிக்கை சமர்ப்பிப்பதன் மூலம் ஒன்றும் மாறப்போவதில்லை. மேலும் காய்கறி தற்சார்பு முறை மூலம் ஒவ்வொரு குடும்பமும் தமக்கு தேவையான காய்கறிகளை தாமே பயிர்செய்தால் இப்படிப்பட்ட பூச்சிகொல்லிகளால் ஏற்படும் நோய்களை தடுக்க முடியும்.
Rate this:
Share this comment
Cancel
Suresh - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
04-பிப்-201510:13:44 IST Report Abuse
Suresh ஓஹோ . . . அதனால தானோ என்னவோ பெட்ரோல் விலை பூச்சி மருந்து விலை ஏறும்போது காய் கறி விலையும் ஏறுது :)
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X