பொது செய்தி

தமிழ்நாடு

தேங்காய் விலை உயர்வு கொப்பரை உற்பத்தி பாதிப்பு

Added : நவ 01, 2010
Advertisement

பொங்கலூர்: தேங்காய் உற்பத்தி சீசன் முடிவு, தொடர்ச்சியாக வரும் பண்டிகைகளால் ஏற்பட்டுள்ள தேவை அதிகரிப்பு, வெளிமார்க்கெட்டில் கொப்பரைக்கு ஏற்பட்டுள்ள விலையேற்றம் போன்ற காரணங்களால் தேங்காய்க்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. இது, கொப்பரை உற்பத்தி செய்யும் உலர் களங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐப்பசி, கார்த்திகை மாதங்கள் தேங்காய் சீசன் முடியும் காலம். இச்சமயத்தில் பண்டிகைகள் தொடர்ச்சியாக வருவதால், மார்க்கெட்டில் தேங்காய்க்கு தேவை அதிகரித்துள்ளது. தற்சமயம் தேங்காயின் சராசரி விலை தோப்புகளில் ஆறு ரூபாயாக உள்ளது. மார்க்கெட்டில் ஏழு முதல் ஒன்பது ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. சில்லரை விலையில் 10 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கொப்பரை கிலோ 48 ரூபாய்க்கு விற்பனையாகிறது. மார்க்கெட்டில் நல்ல விலை கிடைப்பதால், கொப்பரை உற்பத்தியாளர்களுக்கு விற்பனை செய்ய விவசாயிகள் தயக்கம் காட்டுகின்றனர். அதிக விலை கொடுத்து வாங்கினால் கொப்பரை உற்பத்தியாளர்களுக்கு இழப்பு ஏற்படுகிறது. இதனால், தற்போதைய தேவைக்கு இருப்பு வைக்கப்பட்டுள்ள தேங்காய்களை, கொப்பரை உற்பத்திக்கு பயன்படுத்தி வருகின்றனர். சில வியாபாரிகள், தங்கள் தேவைக்கு பொள்ளாச்சி, மைசூர், கேரளா போன்ற பகுதிகளில் தேங்காய்களை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். கடந்த ஒரு வாரமாக மழை காரணமாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. இதனால், கொப்பரை உற்பத்தி மந்தமாக உள்ளது. உற்பத்தியில் ஏற்பட்டுள்ள தொய்வு காரணமாக கூலி தொழிலாளர்களுக்கும் வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X