பழநி கோயிலில் சீமான்: போலீசார் அனுமதி மறுப்பு

Added : பிப் 08, 2015 | |
Advertisement
பழநி:போலீஸ் அனுமதியின்றி பழநி மலைக்கு சென்ற "நாம் தமிழர்' கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருப்பி அனுப்பப்பட்டார்.பழநியில் நேற்று அக்கட்சியின் சார்பில் "வீரத்தமிழர் முன்னணி' என்ற அமைப்பு துவக்கவிழா, ஊர்வலம் நடந்தது. முன்னதாக பழநியாண்டவர் கலை, பண்பாட்டு கல்லூரியில் இருந்து ஊர்வலம் துவங்கியது. திடீரென பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானாவில் இருந்து மலைக்கோயில் நோக்கி



பழநி:போலீஸ் அனுமதியின்றி பழநி மலைக்கு சென்ற "நாம் தமிழர்' கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருப்பி அனுப்பப்பட்டார்.பழநியில் நேற்று அக்கட்சியின் சார்பில் "வீரத்தமிழர் முன்னணி' என்ற அமைப்பு துவக்கவிழா, ஊர்வலம் நடந்தது. முன்னதாக பழநியாண்டவர் கலை, பண்பாட்டு
கல்லூரியில் இருந்து ஊர்வலம் துவங்கியது. திடீரென பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானாவில் இருந்து மலைக்கோயில் நோக்கி வாகனங்கள் சென்றன.
அப்போது, "முருகனை காண மலைக்கோயிலுக்கு செல்கிறோம்' என சீமான் மற்றும் தொண்டர்கள் மலை ஏறினர். இந்நிலையில் சீமான் கருவறை நுழைவு போராட்டம் நடத்த உள்ளதாக, இந்து அமைப்பினருக்கு தகவல் பரவியது. இந்து முன்னணி, விஸ்வ இந்து பரிஷத் நிர்வாகிகள் மலைக்கோயிலில் குவிந்தனர்.
டி.எஸ்.பி., சண்முகசுந்தரம், தாசில்தார் மாரியப்பன் ஆகியோர் மலைக்கோயிலில் சீமானை தடுத்து நிறுத்த காத்திருந்தனர். படிப்பாதையில் சீமானை தடுத்த போலீசார், "கோயிலுக்கு செல்ல நீங்கள் அனுமதி வாங்கவில்லை' என தெரிவித்தனர். இதனால் வெளிப் பிரகாரத்தில் வணங்கி விட்டு கீழே இறங்கிய சீமான், பொதுக்கூட்டத்திற்கு சென்றார்.இதுகுறித்து டி.எஸ்.பி., சண்முகசுந்தரம் கூறுகையில், ""ஊர்வலம், பொதுகூட்டம் நடத்த அனுமதி வாங்கியிருந்தனர். திடீரென ஊர்வலத்தின் போது மலைக்கோயிலுக்கு செல்வதாக கூறினர். இதனால் தடுத்தோம்,'' என்றார்.பொதுக்கூட்டத்தில் சீமான், தனது கட்சியை சேர்ந்த சிலர் தமிழில் பெயரை மாற்றிக் கொண்ட விபரத்தை வாசித்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X