அன்பு வழிந்த காட்சி... அண்ணா சிலையே சாட்சி! | Dinamalar

அன்பு வழிந்த காட்சி... அண்ணா சிலையே சாட்சி!

Added : பிப் 10, 2015
Share
''என்னம்மா...இப்பிடிப் பண்றீங்களேம்மா?,'' என்று பூ விற்கும் பெண்ணிடம், 'ஜாலி'யாய் கலாய்த்துக் கொண்டிருந்தாள் மித்ரா.''ஸ்டேட் முழுக்க இது தான் 'டாப் ஹிட் டயலாக்'...யூ டூ மித்து?,'' என்றபடி, மித்ராவை தலையில் குட்டினாள் சித்ரா.இருவரும் பூ, பழங்கள் வாங்கிக் கொண்டு, தோழியின் வீட்டிற்கு, 'கால் டாக்சி' பிடித்து கிளம்பினார்கள்.''அக்கா! நான் சொன்ன
அன்பு வழிந்த காட்சி...   அண்ணா சிலையே சாட்சி!

''என்னம்மா...இப்பிடிப் பண்றீங்களேம்மா?,'' என்று பூ விற்கும் பெண்ணிடம், 'ஜாலி'யாய் கலாய்த்துக் கொண்டிருந்தாள் மித்ரா.''ஸ்டேட் முழுக்க இது தான் 'டாப் ஹிட் டயலாக்'...யூ டூ மித்து?,'' என்றபடி, மித்ராவை தலையில் குட்டினாள் சித்ரா.இருவரும் பூ, பழங்கள் வாங்கிக் கொண்டு, தோழியின் வீட்டிற்கு, 'கால் டாக்சி' பிடித்து கிளம்பினார்கள்.''அக்கா! நான் சொன்ன 'டயலாக்'கைத்தான், இப்போ நம்ம மாவட்டமே சொல்லுது. யாரைப் பாத்து இதைச் சொல்றாங்கன்னு, உனக்கே தெரியும்!,'' என்றாள் மித்ரா.''உண்மை தான் மித்து! டிஸ்ட்ரிக்ட் முழுக்க, மண் கொள்ளை பயங்கரமா நடக்குது. இந்தம்மாகிட்ட 'கம்பிளைன்ட்' கொடுத்தா, 'அதெல்லாம் பெரிய இடத்து விவகாரம்; நான் ஒண்ணுமே செய்ய முடியாது'ன்னு கைய விரிச்சிர்றாங்க,'' என்றாள் சித்ரா.''ஒரு பக்கம் பார்த்தா, அவுங்க சொல்றது உண்மை தான்க்கா. ஏன்னா, மண் கொள்ளை அடிக்கிற 'மாபியா'வுக்கு எதிர்க்கட்சிகள்லயும் பலமான ஆதரவு இருக்கு. வெள்ளலுார் குளத்துல மண் அள்ளுறதுக்கு எதிரா, விவசாயிகள் சில பேரு செங்கொடி துாக்குனாங்க. அவுங்க திடீர்ன்னு அமைதியாயிட்டாங்க. ஏன் தெரியுமா?,'' என்றாள் மித்ரா.''அது தெரியாதா? இப்பல்லாம், நல்லா வசூல் பண்றவங்களுக்கு தான், எல்லாக் கட்சியிலயும் பொறுப்பு கொடுக்குறாங்க. டிஎம்கேல ஸ்ரீரங்கம் தேர்தலுக்குன்னு, ரெண்டு பேரு வசூலு தட்டி எடுத்திருக்காங்க!,''''சிட்டியில முக்கிய பொறுப்புல இருக்கிற ரெண்டு பேருமே, வசூல் ராஜாக்களாச்சே. நீ யாரைச் சொல்ற?,''''வாயைத் தொறந்தா, முத்து விழுந்துருமோன்னு பயப்படுவாரே. அவரும், அவரை பொறுப்புக்குக் கொண்டு வந்த ஆனந்தமானவரும் தான்!,'' என்றாள் சித்ரா.''ஓ... அந்த கோஷ்டியா?,'' என்றாள் மித்ரா.''அவுங்களே தான். டாஸ்மாக் 'பார்'லயிருந்து சின்ன, பெரிய பேக்டரி, கடை, கண்ணி எதையும் விட்டு வைக்கலையாம். ஸ்ரீரங்கத்துல தேர்தல் வேலை பாக்கிற உடன் பிறப்புகளுக்கு சமைச்சுப் போடணும்னு சொல்லி, அரிசி, பருப்பு, நெய் எல்லாம் வாங்கிருக்காங்க. மளிகைக்கடைக்காரங்களே புலம்புறாங்க,'' என்றாள் சித்ரா.''இதெல்லாம் அவுங்க தளபதிக்குத் தெரியாதா?,''''அவரு தான் தெனமும் அஞ்சு லட்சம் கொடு, பத்து லட்சம் கொடுன்னு இம்சையக் கொடுக்கிறாருன்னு சொல்லித்தான் இவுங்க வசூலே பண்றாங்களாம். ஒவ்வொரு துணைப் பொறுப்புக்கும் ஒரு லட்சம், ரெண்டு லட்சம்னு பேரம் பேசுறாங்களாம்,''''இவுங்களே இப்படின்னா, ஆளும்கட்சிக்கு செலவு ஜாஸ்தியாச்சே...!,''''அவுங்களுக்குத் தான் ஆயிரம் வழி இருக்கே. பில்டிங் கண்காட்சி நடத்துனவுங்ககிட்ட ஏதோ பெரிய தொகை எதிர்பார்த்திருக்காங்க. ஆனா, 'நாங்களே நொந்து நுாடுல்ஸ் ஆயிருக்கோம்'னு சொல்லி, பேருக்கு ஒரு தொகை கொடுத்ததாத் தகவல்!,''''அக்கா! ஆளும்கட்சியில ஒரு அசத்தல் காட்சி. அண்ணா நினைவு நாளன்னிக்கு, அவரோட சிலைக்கு மாலை போடுறதுக்கு, இந்நாள் முன்னாள் மேயர் ரெண்டு பேரும் போயிருக்காங்க. பழையவரைப் பாத்து, புதியவர், 'நீங்க முதல்ல மாலை போடுங்கண்ணே'ன்னு சொல்ல...அவரு, 'நீங்க தான் மாவட்டம்; நீங்க முதல்ல போடுங்க'ன்னு சொல்ல...நெஞ்சைத் தொடும் காட்சியெல்லாம் அரங்கேறிருக்கு,'' என்றாள் மித்ரா.''அப்புறம் யாரு தான் முதல்ல போட்டது?,'' என்று ஆர்வமாய்க் கேட்டாள் சித்ரா.''ராஜ்குமார் தான். செ.ம.,வோட ஆளு நடராஜன், மண்டலத் தலைவரா ஆனதுலயிருந்து, இவுங்க ரெண்டு பேருக்கும் இடையில ஏதோ 'கெமிஸ்ட்ரி' புதுசா 'ஒர்க் அவுட்' ஆவுதுன்னு பேசிக்கிறாங்க,'' என்றாள் மித்ரா.''எனக்கென்னமோ...இது கொளுத்திப் போடுற வேலையாத் தெரியுது!,'' என்றாள் சித்ரா.''இருக்கலாம்! இந்த கவருமென்ட் வந்து, கார்ப்பரேஷன்ல போட்ட மூணு பட்ஜெட்ல, சொன்ன திட்டங்கள்ல பத்து பர்சண்டேஜ் வேலை கூட நடக்கலை. இதுல....வர்ற பட்ஜெட்ல எதை சொல்றதுன்னு தெரியாம, ஆபீசர்ஸ் உச்சக்கட்ட குழப்பத்துல இருக்காங்க,''''மூணு வருஷமா அட்டைய மட்டும் தான மாத்துனாங்க. இந்த வருஷமும் அதே மாதிரி, பழைய மேட்டரையே 'காபி பேஸ்ட்' பண்ணப் போறாங்க. இதுல என்ன பிரச்னை?,''''எலக்ஷன் வருதே...ஆபீசருங்க தான் பாவம்!,'' என்றாள் மித்ரா.''என்னது பாவமா? நம்ம கார்ப்பரேஷன் ஆபீசருங்க பல பேரு பண்ற வேலையெல்லாம் உனக்கு என்ன தெரியும்?. சிட்டியில இருக்கிற காஸ்ட்லி கிளப்ல கட்டிடம் கட்டுன விவகாரத்துல, ஏகப்பட்ட முறைகேடு நடந்ததைப் பத்திப் பேசுனோமே. அதுல, போலி டாக்குமென்ட்களை வச்சு, 'அப்ரூவல்' கொடுத்ததுக்கு உதவுன ஆபீசர் யாருன்னு தெரியுமா?,''''2011ல இருந்த கமிஷனரா?,''''இல்ல மித்து! சென்ட்ரல்ல அப்போ முக்கிய பொறுப்புல இருந்து, 'டிரான்ஸ்பர்' ஆகி, 'சஸ்பெண்ட்' ஆகி, திரும்ப வந்தாரே. அவரே தான்! அந்த 'கிளப்'ல மெம்பராகணும்னா ஏழரை லட்ச ரூபா கட்டணும். ஆனா, இந்த ஆபீசரை 'சும்மா' சேத்திருக்காங்க!,'' என்றாள் சித்ரா.''அடேங்கப்பா! அவ்ளோ பெரிய அப்பா டக்கரா அவரு?,'' என்றாள் மித்ரா.''ஆனா...அந்த 'பில்டிங்'கை கட்ட முடியாமப் போனதுல, அடுத்த வருஷமே, அவரோட உறுப்பினர் அங்கீகாரத்தை ரத்து பண்ணிருக்காங்க!,'' என்றாள் சித்ரா.''அக்கா! 'வயலேஷன்' பண்ணி பில்டிங் கட்றவங்களுக்கு இப்ப தான் வசந்த காலம். இந்த கலெக்டரும், கார்ப்பரேஷன் டிபிஓவும் வந்த பிறகு, ஒரு 'வயலேஷன் பில்டிங்' மேல ஒரு ஆக்ஷனும் எடுக்கலை. டிபிஓகிட்ட எதைக் கேட்டாலும், 'என் மைண்ட்ல இருக்கு; பண்ணிருவோம்'கிறாராம்!,'' என்றாள் மித்ரா.''என் மைண்ட்ல ஓடுற ஒரு விஷயத்தைச் சொல்லிர்றனே. அசோக் நகர்ல, ஒருத்தர் கைய வெட்டி ஏழே கால் கிலோ தங்கம் அடிச்சிட்டுப் போனாங்களே...அந்த கேசுல, மொத்தத் தங்கத்தையும் பிடிச்சிட்டாங்க. நம்ம போலீஸ் உண்மையிலேயே 'கிரேட்' தான்!,'' என்றாள் சித்ரா.''ஆனா, எல்லாரும் அப்பிடி இல்லீயே. பீளமேட்டுல, செங்காளியப்பன் நகர்ங்கிற ஏரியால மட்டும், ஒரே மாசத்துல 9 கார், ஆட்டோன்னு பல வண்டிங்க தொலைஞ்சு போயிருக்கு. ஆனா, அந்த ஏரியாக்கு போலீஸ் ரவுண்ட்சே வர்றதில்லையாம். அந்த இன்ஸ்பெக்டர்ட்ட கேட்டா, 'அசால்ட்'டா பதில் சொல்றாராம்!,''''மேலதிகாரிங்க கிட்ட 'கம்பிளைன்ட்' பண்ண வேண்டியது தான?,''''அந்த மேடத்துகிட்ட புகார் கொடுத்ததுக்கு, அதே இன்ஸ்பெக்டர்க்கு திருப்பி விட்ருக்காங்க. அவரு, 'எங்க போனாலும் இங்க தான் வந்தாகணும்'னு மக்களை மெரட்டுறாராம்,'' என்றாள் மித்ரா.''மித்து! இவுங்க மக்களை மெரட்டுவாங்க. கஞ்சா விக்கிறவுங்களைக் கண்டுக்க மாட்டாங்க. நம்ம ஊருல இருக்கிற பல காலேஜ் ஹால்டல்கள்ல எந்த விதமான 'கன்ட்ரோல்'லும் இல்லாம பசங்க இஷ்டத்துக்குத் தப்புப் பண்றாங்கன்னு நிறைய 'கம்பிளைன்ட்' வருது. காலேஜ் பக்கத்துல கஞ்சா விக்கிறது அதிகமாயிருச்சு. போலீஸ் 'சப்போர்ட்' இல்லாமலா இது நடக்கும்?,'' என்றாள் சித்ரா.''நிஜமாத்தான்க்கா. பொள்ளாச்சி ரோட்டுல இருக்கிற ஒரு பெரிய கல்வி நிறுவனத்துக்குப் பக்கத்துல கஞ்சா சேல்ஸ், பட்டையக் கெளப்புதாம். அங்க இருக்கிற ஒரு பிரவுசிங் சென்டருக்குப் பக்கத்துல ஒரு இடத்துல கஞ்சா, போதை மாத்திரை எல்லாம் விக்கிறாங்களாம். அங்க போற பசங்க, கண்ணு சிவந்து திரும்பி வர்றாங்களாம்,''''கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட் ஏரியாலயும் இடிக்காத வீடுகள்ல இந்த மாதிரி வேலை நிறையா நடக்குது. நம்ம போலீஸ் ரெண்டு கையிலயும் லஞ்சம் வாங்கிட்டு, கையக்கட்டிக்கிறாங்க!,''''ஆனா, கோயம்புத்துார்க்கு வடக்கால இருக்கிற ஒரு ஆர்.டி.ஓ.,க்கு லஞ்சம் வாங்குறதுக்கு இன்னொரு கை இல்லாம கஷ்டப்படுறாராம். ஏன்னா, மாவட்டத்துல இருக்கிற மூணு ஆபீசுக்கும் அவரு தான் ஆர்.டி.ஓ.,வாம். பக்கத்துல இருக்கிற ஆர்.டி.ஓ.,க்களையெல்லாம் விட்டுட்டு, அவருக்கு கூடுதல் பொறுப்பு கொடுத்திருக்காங்கன்னா, அவரு எவ்ளோ பொறுப்பா 'வசூல்' பண்றவர்ன்னு பார்த்துக்கோ!,'' என்றாள் சித்ரா.''இன்னொரு வசூல் நியூஸ்க்கா! ராமநாதபுரம் ஏரியால இருக்கிற ஒரு செல்வம் படைச்ச கவுன்சிலரு, 15 லட்ச ரூபாய்க்கு 'பினாமி' பேருல ஒரு கான்ட்ராக்ட் எடுத்து, கால்வாய் கட்டுறாராம். குடி தண்ணி 'பைப்'களை உடைச்சு விட்டு, சரி பண்றதுக்கு 2,500 ரூபா வசூல் பண்றாராம். இதுல என்ன கொடுமைன்னா, அந்த வேலைக்கு பிப்.,14 தான் டெண்டரே விடப்போறாங்க!,'' என்றாள் மித்ரா.வெளியே எட்டிப்பார்த்த சித்ரா, வண்டியை நிறுத்தச் சொன்னாள். சரசரவென்று வெளியேறிய 'பில்'லில் இருந்த தொகை 69 ரூபாய்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X