சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறுமியை பாலியல் தொழிலில் தள்ளிய தாய், சினிமா இயக்குனர் உட்பட 3 பேர் கைது

Added : பிப் 10, 2015
Advertisement

சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருவதாக, சிறுமியை, அவரது தாயின் உதவியுடன், பாலியல் தொழிலில் தள்ளி சீரழித்த, சினிமா இயக்குனர் உட்பட, மூன்று பேரை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்தனர்.சிக்கியது எப்படி?தமிழக சி.பி.சி.ஐ.டி., விபசார தடுப்பு பிரிவு போலீசாரை, நேற்று முன் தினம், வாலிபர் ஒருவர் தொடர்பு கொண்டு, சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்த, பாலியல் தரகர் ராஜேஸ்வரி மற்றும் தமிழ் சினிமா இயக்குனர் செந்தமிழ் அரசு ஆகியோர், 14 வயது சிறுமியை, பாலியல் தொழிலில் சிக்க வைத்து, அவரது வாழ்வை சீரழித்து வருவதாக தெரிவித்தார். அதையடுத்து, தனியார் தொண்டு நிறுவன நிர்வாகிகள் மற்றும் குழந்தைகள் நல வாரிய அதிகாரிகள் துணையுடன், சினிமா இயக்குனர் செந்தமிழ் அரசு மற்றும் ராஜேஸ்வரியை, வாடிக்கையாளர்கள் போல், போலீசார் தொடர்பு கொண்டனர்.ரூ.10 ஆயிரம்அப்போது, செந்தமிழ் அரசு, சிறுமியுடன், பாலியல் உறவு கொள்ள, ௧.௫௦ லட்சம் ரூபாய் தர வேண்டும் எனவும், முன் பணமாக, 10 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்க, போலீசாரும் சம்மதித்தனர். போலீசாரை, பல இடங்களுக்கு வரவழைத்த செந்தமிழ் அரசு, கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே, 10 ஆயிரம் ரூபாயை முன் பணமாக பெற்றுக்கொண்டு, சிறுமியை அனுப்பி வைத்தார். அப்போது, போலீசார் கையும் களவுமாக, அவரை பிடித்தனர். விசாரணையில், சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருவதாக, ஆசை வார்த்தை கூறிய செந்தமிழ் அரசு, தாயின் துணையுடன், சிறுமியை பாலியல் தொழிலில் தள்ளி, சீரழித்தது தெரியவந்தது.சிறுமியிடம் விசாரித்தபோது, செந்தமிழ் அரசு, தரகர் ராஜேஸ்வரி மற்றும் தன் தாய் மூன்று பேரும், வலுக்கட்டாயமாக, பலருடன், பாலியல் உறவு கொள்ள வைத்ததாக தெரிவித்தார்.ஒப்படைப்புஇதையடுத்து, செந்தமிழ் அரசு உள்ளிட்ட மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர். சிறுமி, அரசு குழந்தைகள் நல காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார். அந்த கும்பலிடம் இருந்து, நான்கு அலைபேசிகள் மற்றும், 10 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டன.
- நமது நிருபர் -


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X