நேசம் தான் உலகை இயக்கும்:எழுத்தாளர் பொன்னீலன் பேச்சு| Dinamalar

நேசம் தான் உலகை இயக்கும்:எழுத்தாளர் பொன்னீலன் பேச்சு

Added : பிப் 13, 2015 | |
சிவகாசி:""நேசம் தான் உலகை இயக்கும் ,'' என எழுத்தாளர் பொன்னீலன் கூறினார்.சிவகாசியில் காளீஸ்வரி கல்லூரி , பாரதி இலக்கிய சங்கம் இணைந்து நடத்திய"யாதுமாகி -2015' இலக்கிய மாநாடு நிறைவு விழாவில் அவர் பேசுகையில்,"" இலக்கியம் மானுட மேன்மைக்கான விடுதலை சிந்தனையுடன் உருவாக வேண்டும். சமூகத்தின் உள்ளிருந்து உருவாகும் போதுதான் இலக்கியம் பயன்தரும். அடித்தட்டு மக்களை

சிவகாசி:""நேசம் தான் உலகை இயக்கும் ,'' என எழுத்தாளர் பொன்னீலன் கூறினார்.சிவகாசியில் காளீஸ்வரி கல்லூரி , பாரதி இலக்கிய சங்கம் இணைந்து நடத்திய"யாதுமாகி -2015' இலக்கிய மாநாடு நிறைவு விழாவில் அவர் பேசுகையில்,"" இலக்கியம் மானுட மேன்மைக்கான விடுதலை சிந்தனையுடன் உருவாக வேண்டும். சமூகத்தின் உள்ளிருந்து உருவாகும் போதுதான் இலக்கியம் பயன்தரும். அடித்தட்டு மக்களை தைரியப்படுத்துவதே உண்மையான இலக்கியம். பாரதி முதல் இன்றைய எழுத்தாளர்கள், கலைஞர்கள் வரை விடுதலைப் பற்றி எழுதுகிறோம். ஆண்,பெண் ஏற்றத்தாழ்வு இல்லாது எல்லா இடத்திலும் சமத்துவமாக இருக்க வேண்டும்.


விடுதலை என்பது எல்லா தளங்களிலும் இருக்க வேண்டும். விடுதலை நேசத்தை வளர்க்க வேண்டும். நேசம் தான் உலகை இயக்கும்,'' என்றார்.முன்னதாக எழுத்தாளர் தமிழ்மகன், கல்கி பொறுப்பாசிரியர் வெங்கடேஷ் பேசினர். முதல்வர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். துணை முதல்வர் சுப்பிரமணியன், பேராசிரியர் பாலமுருகன், கவிஞர் திலகபாமா, துறை தலைவர் செந்தில்நாதன் பேசினர். உதவி பேராசிரியர் அமுதா நன்றி கூறினார். கவிதை, சிறுகதை, கட்டுரை வாசித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X