வந்தது பெண்ணா... வானவில் தானா... என பார்த்ததும் பாட தோன்றும் அழகு. 'பிப்ட்டி கேஜி' தாஜ்மகாலான தமிழ் பொண்ணு. பாலிவுட் பட வாய்ப்பை எதிர்நோக்கும் கனவுநாயகிகள் மத்தியில் அந்த வாய்ப்பே இவரை தேடி வந்திருக்கிறது. பாலிவுட் படம் முடிவதற்குள்ளாகவே நான்கு தமிழ் சினிமாக்களில் நடித்து வருகிறார். 'அய்யனார் வீதி' பட நாயகி சாரா தான் அவர். தினமலர் நாளிதழ் வாசகர்களுக்காக மனம் திறந்ததாவது...* சினிமா கனவா?என் தாத்தா சென்னையில் தியேட்டர் நடத்தினாரு. இதனால் சின்ன வயசிலிருந்தே சினிமாவில் நடிக்கணும்னு ஆசை. அதை மனதில் வைத்து விஸ்காம் படித்தேன்.* பெற்றோர் ஒப்புக் கொண்டார்களா?முதலில் தயங்கினாங்க. என் லட்சியத்தை அறிந்து ஓ.கே., சொல்லிட்டாங்க.* விளம்பர படங்களில் நடித்துள்ளீர்களாமே?விஸ்காம் முடிக்கும் முன்பே வாய்ப்புகள் வந்தன. தவிர்க்க முடியவில்லை. பல விளம்பர படங்களில் தலைகாட்டியுள்ளேன்.* பாலிவுட் வாய்ப்பு எப்படி?என் மாடலிங்கை பார்த்துட்டு அகிலேஷ் சர்மா நடிக்கும் 'ஜாட்' படத்தில் நடிக்கிறீர்களா என கேட்டனர். முதலில் நானே நம்பவில்லை. உடனே ஓ.கே., சொல்லிட்டேன்.* 'ஜாட்' படத்தில் இரண்டு நாயகிகளாமே?ஆமா... நானும், ஓவியாவும் நடித்திருக்கிறோம். ஆனால் அவரும், நானும் இதுவரை சந்தித்து கொண்டதில்லை.* தமிழ் சினிமாவிற்கு வந்தது?இந்தி பட ஸ்டில்களை பார்த்து 'அய்யனார் வீதி' பட வாய்ப்பு கிட்டியது. இயக்குனர் பாக்யராஜ், பொன்வண்ணன், சிங்கம்புலி போன்றோர் நடிக்கிறார்கள் என அறிந்ததும் ஒப்புக்கொண்டேன்.* வேறு படங்கள் கைவசம் உண்டா?இயக்குனர் பாலாஜி சக்திவேல் உதவியாளர் குசால் குமார் இயக்கத்தில் 'பூம் பூம் காளை', 'அரசியலில் இதெல்லாம் சகஜம்ப்பா' போன்ற படங்களில் நடித்து வருகிறேன். இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்திலும் புக் ஆயிருக்கிறேன்.* எதிர்கால லட்சியம்?விஜய், அஜீத்வுடன் நடிக்கணும். அவங்களோட நடிக்க சம்பளம் கூட தேவையில்லை(இயக்குனர்கள் கவனிக்க...)* பிடித்த நடிகை?ஜோதிகா நடிப்பு ரொம்ப பிடிக்கும்.* நடிக்க முடியாமல் போனதாக ஆதங்கப்பட வைத்த படம்?'சந்தோஷ் சுப்பிரமணியம்' ஜெனிலியா, 'வருத்தப்படாத வாலிபர்' சங்கம் திவ்யா கேரக்டர்கள் பண்ண வேண்டும் என்ற ஆசையுள்ளது.* தமிழ் சினிமாவில் தமிழ் பொண்ணுங்க அதிகரித்திருப்பது?சந்தோஷப்பட வேண்டிய விஷயம். முன்பெல்லாம் தமிழ் சினிமாவில் தமிழ் பொண்ணுங்களை தேட வேண்டியிருக்கும். ஆனால் தமிழ் பொண்ணுங்க அதிகரித்திருப்பது பெருமையாக இருக்கிறது. saaradeva@gmail.com
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE