கவர்மென்ட் பஸ் காலி: ஆனா... ஜனங்களுக்கு ஜாலி!| Dinamalar

கவர்மென்ட் பஸ் காலி: ஆனா... ஜனங்களுக்கு ஜாலி!

Added : பிப் 17, 2015
Share
''ஹய்யோ...க்ளாசிக் ஷாட்...!,''உலகக் கோப்பை கிரிக்கெட் 'மேட்ச்' பார்த்துக் கொண்டே, உற்சாகமாக கத்திக் கொண்டிருந்தாள் மித்ரா. அலறியது அலைபேசி...அழைத்தது சித்ரா.''என்னக்கா! 'மேட்ச்' செமையாப் போயிட்டு இருக்கிறப்ப, 'டிஸ்டர்ப்' பண்ற...!,'' என்று செல்லமாய்க் கடித்தாள் மித்ரா.''ஓ...நீயும் வீட்டை விட்டு நகராம, 'மேட்ச்' பார்க்குறியா? உருப்பட்டாப்புல தான். சரி...நான்
கவர்மென்ட் பஸ் காலி: ஆனா...  ஜனங்களுக்கு ஜாலி!

''ஹய்யோ...க்ளாசிக் ஷாட்...!,''உலகக் கோப்பை கிரிக்கெட் 'மேட்ச்' பார்த்துக் கொண்டே, உற்சாகமாக கத்திக் கொண்டிருந்தாள் மித்ரா. அலறியது அலைபேசி...அழைத்தது சித்ரா.''என்னக்கா! 'மேட்ச்' செமையாப் போயிட்டு இருக்கிறப்ப, 'டிஸ்டர்ப்' பண்ற...!,'' என்று செல்லமாய்க் கடித்தாள் மித்ரா.''ஓ...நீயும் வீட்டை விட்டு நகராம, 'மேட்ச்' பார்க்குறியா? உருப்பட்டாப்புல தான். சரி...நான் அப்புறமா...!,'' என்று சித்ரா முடிப்பதற்குள், ''அக்கா...நான் ச்சும்மா... கலாய்ச்சேன். நான் எப்பவுமே 'ஃபுட்பால்' ரசிகை தான். ஏதோ எல்லாரும் பாக்குறாங்களேன்னு...!,'' என்று இழுத்தாள் மித்ரா.''நீ பரவாயில்லடி...பல ஆபீசர்க, இண்டியா மேட்ச்ன்னா, 'லீவ்' போட்டு, ஆபீசை 'கட்' அடிச்சிட்டுப் பார்ப்பாங்க. அந்த நாள்ல பல ஆபீஸ்கள்ல, 'சீட்' காலியாத்தான் இருக்கும். ஏதோ லேடீஸ் ஸ்டாஃப் வர்றதால பல ஆபீஸ்கள்ல வேலை நடக்கும்!,'' என்றாள் சித்ரா. ''அக்கா! நம்ம ஊர்ல, 'வேர்ல்டு கப் கிரிக்கெட்'டை வச்சு, ஏகப்பட்ட 'பெட்டிங்' நடக்குது தெரியுமா?. சிட்டிக்கு வெளியில இருக்கிற சில 'ரிசார்ட்ஸ்'கள்லயும், 'கிளப்'கள்லயும் பெரிய்ய்ய 'ஸ்கிரீன்' வச்சு, 'மேட்ச்'சை காமிச்சு, லட்ச லட்சமா 'பெட்' கட்றாங்களாம். இந்தியா-பாகிஸ்தான் மேட்ச்லயே இது ஆரம்பிச்சிருச்சு!,'' என்றாள் மித்ரா.''துபாய் மாதிரி 'பெட்டிங்'கை... சட்டப்பூர்வமா அங்கீகரிச்சிட்டா, பிரச்னையே இல்லை!,'' என்றாள் சித்ரா.''ஆனா, போலீசுக்கு துட்டு கெடைக்காதே. அவிநாசி ரோட்டுல, பல குடும்பங்கள் குடியிருக்கிற ஒரு அபார்ட்மென்ட்ல, பத்து 'ஃபிளாட்'களை வாடகைக்குப் பிடிச்சு, 'வேற' தொழில் பண்றாங்களாம். சமீபத்துல, ஒரு புதுச்சேரி பொண்ணை அங்க கூப்பிட்டு வந்து, 'செக்ஸ் டார்ச்சர்' பண்ணிருக்காங்க...!,''''அச்சச்சோ...அப்புறம் என்னாச்சு?,''''அந்தப் பொண்ணு, உடனே கன்ட்ரோல் ரூமுக்கு போன் பண்ணிருக்கா. போலீஸ் வந்து, ரெண்டு பேரை 'அரெஸ்ட்' பண்ணிட்டாங்க. அதே அபார்ட்மென்ட்ல, இப்ப வரைக்கும் கனஜோரா 'தொழில் நடக்குதாம். பீளமேட்டுல இருக்கிற சில காக்கிகளுக்கு, கரெக்டா போயிருதாம் கரன்சி. அதுலயும், அந்த ஏரியா ஆபீசர், இந்த மாதிரி வசூல்ல ரொம்ப 'ஸ்ட்ரிக்ட்'டாம்,'' என்றாள் மித்ரா.''அங்க குடியிருக்கிற குடும்பத்துக்காரங்க உண்மையிலேயே பாவம் தான்!,'' என்றாள் சித்ரா.''சிட்டியிலேயே இப்படின்னா, ரூரல்ல என்னென்ன நடக்குதோ?,''''மித்து! உனக்கு விஷயம் தெரியாதா? ரூரல் போலீஸ்காரங்க, இப்போ அடக்கி வாசிக்கிறாங்க. அதுக்குக் காரணம், நம்ம எஸ்.பி., சுதாகர் தான்!,''''ஏன்க்கா! தப்புப் பண்ணுனதுக்காக யாரையாவது 'சஸ்பெண்ட்' பண்ணிட்டாரா?,'' என்றாள் மித்ரா.''போன வாரம் ஆலாந்துறைக்கு மாறு வேஷத்துல போயி, ஒரு நம்பர் லாட்டரி கும்பலைப் பிடிச்சிருக்காரு. அந்த ஏரியா போலீஸ்காரங்க மேல 'என்கொயரி' நடக்குது. உறுதியாச்சுன்னா, பல பேரு 'சஸ்பெண்ட்' ஆகலாம்! அதனால தான், ரூரல் போலீஸ்காரங்க, சேவல் சண்டை, சீட்டாட்டம் எல்லாத்தையும் கொஞ்ச நாளைக்கு நிறுத்தி வையுங்கன்னு, சொல்ல வேண்டியவுங்களுக்குச் சொல்லிட்டாங்களாம்!,'' என்றாள் சித்ரா.''ஆனா, வாங்கிப்பழகுனவுங்களால சும்மா இருக்க முடியுமா? க.க.சாவடி ஆர்.டி.ஓ., செக்போஸ்ட்ல பல வருஷமா, செம்ம கலெக்ஷன் பாத்துட்டு இருந்தாங்களே ஒரு லேடி ஆபீசர். அவுங்களை இங்கயிருந்து வால்பாறைக்கு துாக்குனாங்க. அந்தம்மா, இப்போ வளந்தாய்மரம் செக்போஸ்ட்டுக்கு டிரான்ஸ்பர் வாங்கிட்டு வந்து, கலெக்ஷனை 'கன்டினியூ' பண்றாங்க,''''அதே டிபாட்மென்ட்ல, வடக்கால இருக்கிற ஆபீஸ்ல 'கங்காணி' வேலை பாத்துட்டு இருந்தவரு, அவரும் கேரளா பார்டர் செக்போஸ்ட்ல வண்டிங்களை ஆய்வு பண்ற வேலைய வாங்கிட்டு, ஓய்வில்லாம வசூல் பண்ணிட்டு இருக்காராம்,''''இப்போ புதுசா இன்னொரு வசூலு நடக்குதுக்கா...கோயம்புத்துார்லயிருந்து மதுரை, திருச்சிக்கு கவர்மென்ட் பஸ்சுங்க மட்டும் தான் ஓடுதுல்ல... இப்போ, சனி, ஞாயிறுகள்ல ராப்பகலா ஏர் பஸ் ஓட்ட ஆரம்பிச்சிட்டாங்க. எதுக்குமே 'பர்மிட்' கிடையாது. கவர்மென்ட் பஸ்சை விட, அம்பது, நுாறு தான் அதிகம். அதனால, கவர்மென்ட் பஸ்சுங்க பாதி காலியாப் போகுது. இதுல மக்கள், ஜாலியாப் போறாங்க,'' என்றாள் மித்ரா.''நானும் கேள்விப்பட்டேன். அதெல்லாம், கரூர்க்காரரோட பஸ்சுகளாம். இதையே, பிரைவேட் கையில 'லீகலா' ஒப்படைச்சிட்டா, இதை விட சூப்பரா பஸ்சு விடுவாங்க; ஜனங்களும் இன்னும் சந்தோஷமாப் போவாங்க!,'' என்றாள் சித்ரா.''அதுல, கவர்மென்ட் கஜானாவுக்குக் காசு போகும்; வேற யாருக்கும் கிடைக்காதே. எதை எடுத்தாலும் இப்போ 'கமிஷன்' தான்...ரோடு வேலையெல்லாம், படு கேவலமா நடக்குது. சரவணம்பட்டி ஏரியால ரோடு போடுறதுக்கு 32 லட்ச ரூபாய்க்கு ஒருத்தர் கான்ட்ராக்ட் எடுத்திருக்காரு. படுமட்டமா ரோட்டைப் போட்டுட்டு, பணத்தை அப்பிடியே அமுக்கிட்டாரு. மக்கள் கொந்தளிச்சு மறியல்ல இறங்கிட்டாங்க...!,''''அட! பரவாயில்லையே...திரும்ப ரோடு போட்டாங்களா?,''''நல்லாப் போடுவாங்களே...அந்த ஏரியா ஏ.இ.,யை 'கரெக்ட்' பண்ணுன கான்ட்ராக்டர், பிரச்னை பண்ணுன ஏரியாவுல மட்டும் கொஞ்சம் நல்லா ரோட்டைப் போட்டுக் கொடுத்துட்டு, மறுபடியும் 'எஸ்கேப்' ஆயிட்டாரு!,'' என்றாள் மித்ரா.''அப்பாடி! ஒரு வழியா ஸ்ரீரங்கம் எலக்ஷன் முடிஞ்சிருச்சு. இனிமேலாவது, மினிஸ்டரு, மேயரு எல்லாரும் நம்ம ஊரு வேலையப் பார்ப்பாங்களா? ரெண்டு மூணு வாரமா, எந்த வேலைக்குமே பூஜை கூட நடக்கலையாமே?,'' என்றாள் சித்ரா.''ஆமாக்கா! இந்த 'கேப்'புல பட்ஜெட்ல புதுசா என்ன திட்டம் கொண்டு வரலாம்னு ஆபீசருங்க 'டிஸ்கஸ்' பண்ணிருக்காங்க. மேயரு, கமிஷனரு ரெண்டு பேருக்குமே, சுற்றுச்சூழல், விளையாட்டுல ஆர்வம் அதிகம்கிறதால, மரம் வளர்க்குறது, உள் விளையாட்டு அரங்கம் சம்மந்தமா ரெண்டு திட்டம் வரும்னு பேசிக்கிறாங்க!,'' என்றாள் மித்ரா.''திட்டம் போடுறது சரி! ஆனா, ஒரு வேலையும் நடக்கிறதில்லையே. இதுக்கெல்லாம் அடுத்த எலக்ஷன்லயாவது, மக்கள் வட்டியும் முதலுமா கொடுப்பாங்களா?,'' என்றாள் சித்ரா.''அக்கா! வட்டி, முதல்னு நீ சொன்னதும், நம்மூரு பூமார்க்கெட்ல வட்டிக்கு விடுற ஒரு 'பந்தா' பார்ட்டியோட ஞாபகம் வந்துருச்சு. கந்து வட்டி, கரன்ட் வட்டி, மினிட் வட்டி, மீட்டர் வட்டின்னு சிட்டியையே கலக்குற அவரால, ஏகப்பட்ட குடும்பங்கள் குலைஞ்சு போயிருக்குன்னு, பூ வியாபாரிங்க புலம்புறாங்க!,'' என்றாள் மித்ரா.''அவரைப் பத்தி யாரும் 'கம்பிளைன்ட்' கொடுக்கிறதில்லையா?,''''கொடுத்தாலும், அந்த ஏரியா போலீஸ் கண்டுக்கவே மாட்டாங்க. நடமாடும் நகைக்கடை மாதிரி வலம் வர்ற அந்த 'பந்தா' பார்ட்டி தான், அங்க இருக்கிற போலீஸ்காரங்க பல பேருக்கு, ஏ.டி.எம்., மாதிரியாம்! எல்லாக் கட்சியிலயும் அவருக்கு ஏகப்பட்ட 'சப்போர்ட்' இருக்காம்!,''''நம்ம ஊரு நிலைமை, வரவர ரொம்பவே மோசமாயிட்டு இருக்கு மித்து!. ஊரைக்காப்பாத்த எந்த குலசாமி கோவிலுக்குப் போறதுன்னே தெரியலை!,'' என்றாள் சித்ரா.''கொடுமை கொடுமைன்னு கோவிலுக்குப் போன கதை தான்...நம்ம ஊர்ல கோனியம்மன் கோவிலு, வேணுகோபால சுவாமி கோவிலு, சுக்கிரவார்பேட்டை முருகன் கோவிலு, நரசிம்மர் கோவிலுன்னு பல கோவில்கள்ல, பணத்தை வாங்கிட்டு, 'போஸ்ட்டிங்' போட்ருக்காங்க. அதைப் பத்தி, இப்போ தீவிரமா 'என்கொயரி' நடந்துட்டு இருக்கு!,'' என்றாள் மித்ரா.''என்னத்த 'என்கொயரி' நடந்து...நடவடிக்கை எடுத்து...விசாரணைங்கிற பேருல, இன்னும் கொஞ்சம் காசைப் பறிப்பாங்க. பணம் கொடுக்க முடியலைன்னா, வீட்டுக்கு அனுப்புவாங்க!,'' என்றாள் சித்ரா.''அக்கா! வீடுன்னு சொன்னதும் ஹவுசிங் போர்டு மேட்டர் ஞாபகத்துக்கு வந்துச்சு. ரேஸ்கோர்ஸ், ஜி.சி.டி., குவாட்டர்ஸ்கள்ல 'சமூக சேவகர்'ங்கிற பேருல, எக்ஸ் மினிஸ்டரு, எக்ஸ் எம்.எல்.ஏ., சிட்டி சேச்சின்னு பல பேரு வீடுகளை வாங்கி வச்சிக்கிட்டு, வருஷக்கணக்கா வாடகையும் கட்டாம, வீடுகளையும் காலி பண்ணாம வச்சிருக்காங்க. ஆனா, கவர்மென்ட் ஸ்டாஃப்க வீடு இல்லாமத் தவிக்கிறாங்க!,'' என்றாள் மித்ரா.''சரி சரி! உன்கிட்ட பேசிப்பேசி, எனக்கு தண்ணி தவிக்குது. நான் அப்புறமா கூப்பிடுறேன்!,'' என்று அலைபேசியை துண்டித்தாள் சித்ரா.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X