பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்...

Updated : பிப் 17, 2015 | Added : பிப் 17, 2015 | கருத்துகள் (16) | |
Advertisement
''பிண்டம் என்னும், எலும்போடு சதை நரம்புஉதிரமும் அடங்கிய உடம்பு எனும்பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்ஐயனே என் ஐயனே''...கடந்த வாரம் கோவையில் அதிகாலை பயணித்த நகர பஸ்சில் ஒலிபரப்பான இந்த பாடலின் நிஜவடிவங்களை அன்றைய தினமே பார்ப்பேன் என்று கொஞ்சமும் நினைக்கவில்லை.அதற்கான வாய்ப்பை உண்டாக்கி கொடுத்தவர் நண்பர் கோவை ஈரநெஞ்சம் மகேந்திரன்.வெயில் மழைக்கு ஒதுங்க ஒரு கூரை
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்...

''பிண்டம் என்னும், எலும்போடு சதை நரம்பு

உதிரமும் அடங்கிய உடம்பு எனும்

பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்

ஐயனே என் ஐயனே''...


கடந்த வாரம் கோவையில் அதிகாலை பயணித்த நகர பஸ்சில் ஒலிபரப்பான இந்த பாடலின் நிஜவடிவங்களை அன்றைய தினமே பார்ப்பேன் என்று கொஞ்சமும் நினைக்கவில்லை.அதற்கான வாய்ப்பை உண்டாக்கி கொடுத்தவர் நண்பர் கோவை ஈரநெஞ்சம் மகேந்திரன்.


வெயில் மழைக்கு ஒதுங்க ஒரு கூரை இல்லாத ஆதரவற்றவர்களுக்கு ஒரு இல்லம் வேண்டும் என்ற சிந்தனையின் விளைவாக தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட தலைநகர்களில் துவக்கப்பட்டதுதான் அரசு ஆதரவற்றோருக்கான விடுதி.


கோவையில் இந்த விடுதி துவக்கப்பட்டதன் நோக்கத்துடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.இதற்கு முதல் காரணம் கோவை மாநகராட்சி என்றால் இரண்டாவது காரணம் இங்குள்ள பொறுப்பாளர் கங்காதரன்,மூன்றாவதும் காரணம் மகேந்திரன்.


அரசு ஆஸ்பத்திரிகளால் கூட புறக்கணிக்கப்பட்ட முதியோர்களை, மனநலம் பாதித்தவர்களை, நோய் முற்றியவர்களை ஒரு தாயுள்ளத்தோடு அணுகி அவர்களுக்கு வேண்டிய முதலுதவிகளை செய்தபின் நிலையான அமைதியை தேடிதரும் வகையில் இந்த விடுதியில் கொண்டுவந்து சேர்த்துவிடுகிறார்.தனது வாழ்வாதாரத்திற்கான நேரம் போக மீதிநேரம் முழுவதும் இந்த விடுதி வாழ் மக்களே உறவாக கருதி ஈரநெஞ்சத்தோடு இயங்குபவர், இயக்குபவர்.


இவரைப்பொறுத்தவரை கோவையில் பார்க்கவேண்டிய இடங்கள் பட்டியலில் முதல் இடம் இந்த இல்லம்தான்.யார் இவரைப்பார்க்க வந்தாலும் ஒரு எட்டு அப்படியே இல்லத்திற்கு போய்விட்டு வரலாம் வாருங்கள் என்று இழுத்துச்சென்றுவிடுவார்.


அப்படித்தான் நானும் அங்கு சென்றேன்


ஒரு காலத்தில் கோடீஸ்வரராக லட்சாதிபதியாக இருந்தவர்கள் எல்லாம் பிள்ளைகளால் விரட்டப்பட்டு இங்கு ஆதரவற்றவர்களாக இருப்பவர்கள் சில பேர்.


ஒரு காலத்தில் நாம் என்னவாக இருந்தோம் என்பதே தெரியாத குழந்தைத்தனமான மனநிலையில் இருப்பவர்கள் சில பேர்.


அனுபவித்தது போதும் என்னை அழைத்துக்கொள்ளேன் இறைவா என வயதும் நோயும் முதிர்ந்த நிலையில் இருப்பவர்கள் சிலபேர்.


இன்னும் பார்வை இழந்தவர்கள் சிலபேர், உடல் அவயங்கள் இழந்தோர் சிலபேர், படுத்த படுக்கையிலே இருப்பவர்கள் சில பேர், தன் தேவை என்னவென்றே சொல்லத்தெரியாத சில பேர், பேசத்தெரிந்தாலும் மொழிபிரச்னையால் பேசமுடியாமல் இருக்கும் வடமாநிலத்தவர் சில பேர் என்று இந்த ஆதரவற்றோர் இல்லம் முழுவதும் பல பேர் இருக்கின்றனர்.


அன்பிர்க்கும் பாசத்திர்க்கும் ஏங்கித்தவிக்கும் இந்த உள்ளங்களுடன் செலவிடும் உங்கள் நேரம் உண்மையில் வாழ்க்கையில் பொன்னான நேரமாக இருக்கும்,நாம் வாழும் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கும்.அன்பு பூத்துக்குலுங்கும் தோட்டமாக்கும்.


கோவைக்கு போகக்கூடியவர்கள் வாய்ப்பு இருந்தால் அவசியம் இந்த இல்லத்திற்கு போய்விட்டு வாருங்கள். முடியுமானால் போகும்போது போர்வை, வேட்டி, புடவை போன்றவைகளை கொண்டு செல்லுங்கள், அது புதியதாகத்தான் இருக்கவேண்டும் என்பதுகூட அவசியமில்லை நல்லதாக இருந்தால் போதும்.இல்லம் செல்ல உதவி தேவை எனில் மகேந்திரனை போனில் அழைக்கவும் எண்:9080131500.


-எல்.முருகராஜ்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gowthami Kandasamy - Chennai,இந்தியா
12-நவ-201616:31:48 IST Report Abuse
Gowthami Kandasamy அன்பிற்கு ஏங்கும் இவர்களின் அன்பைப் பெற வேண்டும். அதற்கு ஈடு வேறு இல்லை இங்கு ...அன்பு என்னும் அழியாத குறைவில்லாத சொத்து அனைவரிடமும் இருக்கிறது...பகிர்ந்து கொள்வோம் நம் பாசத்தை...என்னால் முடிந்த வரையில் மிக விரைவில் என் சொந்தங்களை சந்திக்க விரும்புகிறேன்...
Rate this:
Cancel
p.manimaran - VAYALAPPADIKEERANUR,இந்தியா
08-மார்-201503:48:29 IST Report Abuse
p.manimaran மனசாட்சி இல்லாத மானுடர்கள்.
Rate this:
Cancel
paavapattajanam - chennai,இந்தியா
26-பிப்-201513:58:33 IST Report Abuse
paavapattajanam கடவுள் இல்லை என்று சொல்லி ஊரை கொள்ளை அடிக்கும் அரசியல்வாதிகளுக்கு நடுவில் வாருங்கள் இறைவனை பார்க்கலாம் என்று வாழ்ந்துகாட்டும் மகேந்திரன் போன்ற மகான்களை நினைத்தாலே சிலிர்க்கிறது - அவருக்கு நீண்ட ஆயுள் கிடைக்கபெற்று நலமுடன் இருக்கவேண்டும் - சென்னைக்கு வரமுடிந்தால் - வேண்டிய துணிமணிகளை சேகரித்து கொடுக்கலாம் - ஜெய் ஹிந்த்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X