அழகே ஆராதிக்கும் ஆராதிகா.....| Dinamalar

அழகே ஆராதிக்கும் ஆராதிகா.....

Added : பிப் 22, 2015 | கருத்துகள் (1)
அழகே ஆராதிக்கும் ஆராதிகா.....

அழகை எல்லாம் அள்ளி பருகிய விழிகளில் இருப்பது இமைகளா? இல்லை பட்டாம் பூச்சிகளின் சிறகுகளா? என்ற சந்தேகம் பார்த்தவுடன் பளிச்சென தோன்றும். வரிகள் சில இருந்தாலும் ஆயிரம் அர்த்தங்கள் சொல்லும் 'ஹைக்கூ' இதழ்கள். கண்ணாடியும் தன் பிம்பம் பார்க்கும் பளபள கன்னங்கள். மலையாள சினிமாவில் அறிமுகம், தமிழ் சினிமாவின் புதுமுகம். அழகே நேரில் வந்து ஆராதிக்கும் நடிகை ஆராதிகா பேசிய கலகல நிமிடங்கள்...* எப்படி நடிக்க வந்தீர்கள்நான் பிறந்து, வளர்ந்தது கேரள மாநிலம் பாலக்காடு. சின்ன வயசில் நிறைய 'ஆல்பம்சாங்'க்ல நடிச்சிருக்கேன். எத்தனை நாளைக்கு தான் ஆல்பம்ல நடிக்குறது? சினிமா பக்கம் கொஞ்சம் தலை காட்டலாமேன்னு நடிக்க வந்துட்டேன்.* இதுவரை எத்தனை படம் நடிச்சிருக்கீங்கஹும்ம்... என்னைய பார்த்தா நிறைய படம் நடிச்ச மாதிரி தெரியுதா?! அப்படி ஒன்னும் நிறைய படமெல்லாம் நடிக்கலங்க. மலையாள ஹீரோ பிரித்விராஜ் நடிச்ச 'மாணிக்க கல்' படம் தான் நான் நடிச்ச முதல் படம். இந்தப்படம் தமிழ்ல 'சாட்டை'னு ஒரு படம் வந்துச்சே அதே மாதிரி இருக்கும்.* என்ன ஒரே படத்தோட நிறுத்தீட்டீங்களேஹலோ... இன்னும் இருக்கு... ரஜினி நடித்த 'குசேலன்' படத்தோட மலையாள ஒரிஜினலில் 'ஸ்கூல் கேர்ள்' கேரக்டர்ல நடிச்சிருக்கேன்.* தமிழ் சினிமால ஏன் நடிக்கல ?யாருங்க சொன்னது? தமிழ்ல 'உன்னதமானவன்', 'முயல்'ன்னு இரண்டு படத்துலநடிச்சுருக்கேன்.* அது என்ன முயல்...?!நீங்க நினைக்குற மாதிரி தாவி ஓடுற முயல் இல்லீங்க. முயற்சி செய்யுறது அதை தான்சுருக்கமா 'முயல்'ன்னு வைச்சுருக்காங்க.* அதில் உங்க கேரக்டர் என்னஇந்த படத்தோட கதை களம் மதுரை தான். வில்லன்களுக்கு எதிரா போராடுற துணிச்சலான பொண்ணா கேரக்டர்ல நடிச்சுருக்கேன்.* குங்பூ, கராத்தே எல்லாம் அத்துபடி போலஅத்துபடி எல்லாம் இல்லை, படத்தோட டைரக்டர் குகன் சொன்னதால 'ஆக்ஷன்' கத்துக்கிட்டு 'கிளைமாக்ஸ்'ல கொஞ்சம் 'பைட்' பண்ணிருக்கேன்.* மதுரைக்காரங்க என்ன சொன்னாங்கஅய்யோ... மதுரை மக்கள் என்னை சொந்த பொண்ணு மாதிரி பார்த்துகிட்டாங்க. 'சூட்டிங்'நாட்களில் அழகர் கோவில், மீனாட்சி கோயில்ன்னு சுத்தாத இடமே இல்லை.* பிடித்த ஹீரோ, ஹீரோயின்கள்பிரித்விராஜ், நயன்தாரா, காவ்யா மாதவன், நஸ்ரியா ரொம்ப பிடிக்கும்.* இப்போ எந்த படத்துல நடிக்குறீங்கநான் இப்போ கோவையில் பி.பி.ஏ., 'பைனல் இயர்' படிக்கிறேன். படிக்கும் போதே நடிக்கவந்ததால படிக்க முடியாம போச்சு. அதனால முதல்ல படிப்ப முடிச்சுட்டு அப்புறம் சென்னைக்கு போயி தீவிரமா நடிக்க வாய்ப்பு தேடணும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X