பொது செய்தி

தமிழ்நாடு

திரைப்பட இயக்குநர் ஆர்.சி.சக்தி காலமானார்

Added : பிப் 23, 2015 | கருத்துகள் (3)
Share
Advertisement
திரைப்பட இயக்குநர் ஆர்.சி.சக்தி உடல்நலக்குறைவு காரணமாக, இன்று காலமானார். வித்தியாசமான கதை அமைப்பு கொண்ட படங்களை இயக்குவதில் தன்னிகரற்ற இயக்குநராக திகழ்ந்த ஆர்.சி.சக்தி, 18 படங்களை இயக்கியுள்ளார். உணர்ச்சிகள், தர்மயுத்தம், சிறை உள்ளிட்ட இவரது படங்கள், மக்ளை பெரிதும் கவர்ந்தன.உணர்ச்சிகள் படத்தில், கமலஹாசனை,முதன்மை கேரக்டரில் அறிமுகப்படுத்தியவர் ஆர்.சி.சக்தியே ஆவார்.

திரைப்பட இயக்குநர் ஆர்.சி.சக்தி உடல்நலக்குறைவு காரணமாக, இன்று காலமானார். வித்தியாசமான கதை அமைப்பு கொண்ட படங்களை இயக்குவதில் தன்னிகரற்ற இயக்குநராக திகழ்ந்த ஆர்.சி.சக்தி, 18 படங்களை இயக்கியுள்ளார். உணர்ச்சிகள், தர்மயுத்தம், சிறை உள்ளிட்ட இவரது படங்கள், மக்ளை பெரிதும் கவர்ந்தன.
உணர்ச்சிகள் படத்தில், கமலஹாசனை,முதன்மை கேரக்டரில் அறிமுகப்படுத்தியவர் ஆர்.சி.சக்தியே ஆவார். ரஜினிகாந்தை வைத்து தர்மயுத்தம் படத்தையும், விஜயகாந்தை வைத்து மனக்கணக்கு படத்தையும் ஆர்.சி.சக்தி இயக்கியுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அடுத்த புழுதிகுளத்தில் பிறந்த ஆர்.சி.சக்தி, சிறுவயதிலேயே, கல்வியில் கவனத்தை செலுத்தாமல், நடிப்புத்துறையிலேயே அவரது முழுக்கவனமும் இருந்தது. இளைஞராக இருந்தபோதே, நண்பர்களுடன் இணைந்து நாடகக்கம்பெனியை துவங்கினார். வாழ்க்கை வாழ்வதற்கே என்ற நாடகத்தில், வில்லன் கேரக்டரில் நடித்தார். கிராம மக்கள் அனைவரும் சக்தியின் நடிப்பை பாராட்டியதோடு மட்டுமல்லாது, அவர் சினிமாவில் நுழையவும் அவருக்கு ஆதரவு அளித்தனர்
சினிமா ஆசையில், சென்னை வந்த சக்தி, வில்லுப்பாட்டு புகழ் சுப்பு ஆறுமுகம் குழுவில் சேர்ந்து, திரைக்கதை எழுத்தாளராக பணியாற்றிவந்தார். தீவிர முயற்சிக்கு பிறகு, பொற்சிலை படத்தில், உதவி இயக்குநராக பணியாற்றினார். பின் டான்ஸ் மாஸ்டர் தங்கத்துடன் இணைந்து, அன்னை வேளாங்கண்ணி படத்தில் திரைக்கதை எழுதினார். பின், 1972ம் ஆண்டு, உணர்ச்சிகள் படத்தின் மூலம் இயக்குநராக உயர்ந்தார். தனது முதல் படத்திலேயே, பால்வினை நோய்களை மையமாகக்கொண்டு படத்தை இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
நடிகர் கமலஹாசன், தனது ஒவ்வொரு பேட்டியிலும், ஆர்.சி.சக்தியின் பெயரை குறிப்பிட தவறியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohana Krishna - Salem,இந்தியா
23-பிப்-201519:27:18 IST Report Abuse
Mohana Krishna அன்னாரது மறைவு தமிழ் திரை உலகிற்கு மிகப்பபெரிய இழப்பு. அன்னாரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
Rate this:
Cancel
LAX - Trichy,இந்தியா
23-பிப்-201517:01:15 IST Report Abuse
LAX ஆழ்ந்த இரங்கல்கள்.. அவரது குடும்பத்தாருக்கும், நண்பரை இழந்த கமல்ஹாசன் அவர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்..
Rate this:
Cancel
N.Purushothaman - Kuala Lumpur ,மலேஷியா
23-பிப்-201516:38:22 IST Report Abuse
N.Purushothaman ஐயா அவர்களின் ஆத்மா சாந்தியடைய எல்லாம வல்ல இறைவன் அருள் புரியட்டும்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X