இன்ஸ்பெக்டர்களுக்கு "டிரான்ஸ்பர்' "ஓசி'யில் நடந்த தடபுடல் விருந்து

Added : பிப் 24, 2015
Share
Advertisement
""தொழில் துறைக்காக, நம்ம "தினமலர்' சார்பில் ஏற்றுமதி வழிகாட்டி கருத்தரங்கு நடத்துனாங்களே... போயிருந்தீயா...'' என்ற கேள்வியோடு, அன்றைய விவாதத்தை துவக்கினாள் சித்ரா.சூடா பஜ்ஜி, இஞ்சி டீ கொடுத்து உபசரித்த மித்ரா, ""ஆமாக்கா... போயிருந்தேன். ஞாயித்துக்கிழமை விடுமுறை தினமா இருந்தும், இந்தியா - தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் மேட்ச் நடந்த போதிலும், முன்பதிவு செஞ்சிருந்தவங்க,
இன்ஸ்பெக்டர்களுக்கு "டிரான்ஸ்பர்' "ஓசி'யில் நடந்த தடபுடல் விருந்து

""தொழில் துறைக்காக, நம்ம "தினமலர்' சார்பில் ஏற்றுமதி வழிகாட்டி கருத்தரங்கு நடத்துனாங்களே... போயிருந்தீயா...'' என்ற கேள்வியோடு, அன்றைய விவாதத்தை துவக்கினாள் சித்ரா.சூடா பஜ்ஜி, இஞ்சி டீ கொடுத்து உபசரித்த மித்ரா, ""ஆமாக்கா... போயிருந்தேன். ஞாயித்துக்கிழமை விடுமுறை தினமா இருந்தும், இந்தியா - தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் மேட்ச் நடந்த போதிலும், முன்பதிவு செஞ்சிருந்தவங்க, கரெக்டா ஆஜராகியிருந்தாங்க. பயிற்சி அளித்த சேதுராமன் சாத்தப்பனும், போரடிக்காம, நகைச்சுவையா வகுப்பெடுத்தார். ஒருத்தர் கூட இருக்கையை விட்டு எழுந்திரிச்சுப் போகமா, சாயங்காலம் 6:00 மணி வரைக்கும் அமர்ந்திருந்தாங்க... அதுதான் ஆச்சரியமா இருந்துச்சு...'' என்றாள்.""ஆவணம் தயாரிப்பதில் சின்ன, சின்ன "மிஸ்டேக்' விட்டா, எவ்வளவு இழப்பு ஏற்படும்னு, அவுங்களுக்கு நல்லாத் தெரியும். அதனாலதான், ஆர்வத்தோடு வந்திருப்பாங்க,'' என்ற சித்ரா, ""கலெக்டர் ஆபீசில் பூட்டிய அறைக்குள் ரகசியமா தேர்வு நடத்துனாங்களாமே... கேள்விப்பட்டீயா,'' என காதை கடித்தாள்.""அதுவாக்கா... ஊரக வளர்ச்சித்துறையில் காலியா இருக்கற ரோடு இன்ஸ்பெக்டர் வேலைக்கான தேர்வு நடந்துச்சு. கலெக்டர் ஆபீஸ் மீட்டிங் ஹாலில், எல்லா கதவையும் உள்பக்கமா தாழிட்டு, தேர்வு நடத்துனாங்க. வெளியேயும் ஆட்களை நிறுத்தியிருந்தாங்க. போட்டோ கூட எடுக்க வேண்டாமுனு சொல்லிட்டாங்க. நேர்மையா தேர்வு நடத்துறதா இருந்தா, ஏன் பயப்படணும்னு அரசு ஊழியர்கள் வட்டாரத்துல பேசிக்கிறாங்க,'' என்றாள் மித்ரா.""வேலை வாய்ப்பு அலுவலகம் மூலமாத்தானே "போஸ்டிங்' போடுவாங்க? எதுக்கு, "எக்ஸாம்' வச்சாங்க,'' என, துருவினாள் சித்ரா.""நீங்க கேக்குறது சரியான கேள்விதான்... இந்த வேலைக்கு தகுதியான ஆட்கள் கொஞ்ச பேருதான் இருக்காங்க; அதனால, தேர்வு வச்சு எடுக்கறோம்னு அதிகாரிங்க சொல்றாங்க. சான்றிதழ் சரிபார்ப்பு, அதுக்கு அப்புறம் தேர்வு நடந்திருக்கு. நேர்காணல் கிடையாது; அதிக மார்க் எடுத்தவங்களுக்கு வேலைன்னு சொல்லி, விருப்பப்பட்டவங்களை தேர்வு செய்றாங்க,'' என, விளக்கினாள் மித்ரா.""ஆமா... ஸ்ரீரங்கம் போயிருந்தாங்களே... என்னாச்சு... நம்மூர் ஆளுங்கட்சியினருக்கு ஒதுக்கியிருந்த பூத்களில் எவ்வளவு ஓட்டு வாங்கியிருந்தாங்க... ஏதாவது தெரியுமா,'' என, அடுத்த மேட்டருக்கு தாவினாள் சித்ரா.""மொத்தம் 8 பூத் ஒதுக்குனாங்க; 4,796 ஓட்டு பதிவாச்சு. அதில், ஆளும்கட்சி 3,128 ஓட்டு வாங்கியிருக்கு. திருப்பராயத்துறைங்கிற எடத்துல, 28ம் நம்பர் பூத் தி.மு.க., கோட்டையா இருந்துச்சு; முதன்முறையா 17 ஓட்டு அதிகமா வாங்கியிருக்கிறதை, "பெருமை'யா பேசுறாங்க,'' என, சலித்துக் கொண்டாள் மித்ரா.""காவல் துறை வட்டாரத்துல, விருந்து உபசாரம் தடபுடலா நடந்துச்சாமே...'' என்றவாறு, பஜ்ஜியை சுவைத்தாள் சித்ரா.""மாநகர காவல்துறையில், 4 இன்ஸ்பெக்டர்களுக்கு பரஸ்பர இட மாறுதல் வழங்கியிருக்காங்க. அதுல, ரெண்டு பேருக்கு, பூம்பூகார் நகரில் ஒரு தோட்டத்துல, தடபுடல் விருந்து கொடுத்து வழியனுப்பு விழா நடத்தியிருக்காங்க,'' என்றாள் மித்ரா.""நம்மூருக்குள்ளதானே, "டிரான்ஸ்பர்' கொடுத்திருங்காங்க... இதுக்கே விருந்தா?'' என, வாயை பிளந்தாள் சித்ரா.""அவுங்க காசை செலவழிச்சா விருந்து கொடுத்தாங்க... "ஓசி'யில நடந்ததுதானே...?'' என மித்ரா சொல்ல, ""என்னாது...'' என, சித்ரா விழி பிதுங்க கேட்டாள்.""பிளாட்பாரக்கடை போடுவாங்கள்ல, அவுங்களிடம் "ஸ்பான்சர்' பிடிச்சிருக்காங்க. கடைக்கு ஏத்த மாதிரி, காஸ் சிலிண்டர், சிக்கன், காளான், அரிசி மூட்டை, பாத்திரம் வாங்கியிருக்காங்க. தோட்டத்துக்கு போற வழியில் சென்ற ஆட்டோவை வழிமறித்து, அதுல எல்லாத்தையும் ஏத்திட்டுப் போயிருக்காங்க. விருந்து முடிஞ்சதும், அங்கேயே... அப்படி அப்படியே போட்டுட்டு போயிட்டாங்க. "ஓசி' கொடுத்தவங்க போயி, தங்களோட பொருட்களை "மீட்டுட்டு' வந்தாங்க,'' என, பெருமூச்சு விட்டாள் மித்ரா.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X