இளம்பெண்ணை காப்பாற்றிய ஆட்டோ டிரைவர்: நடிகரை பார்க்க வீட்டைவிட்டு ஓடி வந்தார்

Added : பிப் 24, 2015 | கருத்துகள் (7) | |
Advertisement
பெங்களூரு: திரைப்பட நடிகர் துருவா சர்ஜாவை பார்ப்பதற்காக, குக்கே சுப்ரமண்யாவிலிருந்து, பெங்களூருக்கு வந்து, வழி தெரியாமல் பரிதவித்த இளம் பெண்ணுக்கு, ஆட்டோ டிரைவர் அடைக்கலம் தந்து, பெற்றோரிடம் பாதுகாப்பாக சேர்த்தார்.விவரம்: கடந்த, 18ம் தேதி இரவு, 9:45 மணிக்கு, ஆட்டோ டிரைவர் ஆனந்த குமார் என்பவர், தன் ஆட்டோவில், பெங்களூரு வெஸ்ட் ஆப் கார்டு சாலை, சிவனஹள்ளி சிக்னல்

பெங்களூரு: திரைப்பட நடிகர் துருவா சர்ஜாவை பார்ப்பதற்காக, குக்கே சுப்ரமண்யாவிலிருந்து, பெங்களூருக்கு வந்து, வழி தெரியாமல் பரிதவித்த இளம் பெண்ணுக்கு, ஆட்டோ டிரைவர் அடைக்கலம் தந்து, பெற்றோரிடம் பாதுகாப்பாக சேர்த்தார்.விவரம்:

கடந்த, 18ம் தேதி இரவு, 9:45 மணிக்கு, ஆட்டோ டிரைவர் ஆனந்த குமார் என்பவர், தன் ஆட்டோவில், பெங்களூரு வெஸ்ட் ஆப் கார்டு சாலை, சிவனஹள்ளி சிக்னல் அருகில் சென்று கொண்டிருந்தார். அப்போது, இளம்பெண் ஒருவர் ஆட்டோவை நிறுத்தினார். 'நடிகர் துருவா வீட்டுக்கு செல்ல வேண்டும். ஜெயநகர் முதல் பிளாக்கில் அவரது வீடு உள்ளது' என்றார். ஆட்டோவில், டிரைவர் அனந்த குமார், ஜெயநகர் முதல் பிளாக்கில் இளம்பெண் கூறிய விவரத்தை தேடி அலைந்தார். இரவு, 11:30 மணி வரை, தேடியும், நடிகரின் வீட்டை கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால், 'நீங்கள் எங்கு செல்ல வேண்டும் என்ற விவரத்தை சரியாக கூறுங்கள்' என்று கேட்ட போது, அந்த இளம்பெண், தன் பெயர் சவிதா என்றும், ஆசிரியை பணி செய்வதாகவும், நடிகர் துருவாவின் தீவிர ரசிகை, அவரை பார்ப்பதற்காக யாரிடமும் சொல்லாமல் ஊரை விட்டு வந்ததாகவும், அழுது கொண்டே கூறியுள்ளார். 'இரவு எங்கு தங்கப்போகிறீர்கள்' என்று, டிரைவர் அனந்தகுமார் கேட்டபோது, அந்த இளம்பெண்ணிடம் பதில் இல்லை. 'உங்கள் பெற்றோர் பற்றிய விவரத்தை கூறுங்கள். அவர்களுக்கு தகவல் தெரிவித்து, உங்களை அழைத்து செல்ல ஏற்பாடு செய்கிறேன். இரவு நேரம் சாலையில் அலைய வேண்டாம்' என்று ஆறுதல் கூறி, மூடலபாளையாவில், மனைவி, மாமியாருடன் வசிக்கும், தன் வீட்டிற்கு அழைத்து சென்றார். வீட்டுக்கு சென்ற பின்னரும், சவிதா, தன் பெற்றோர் பற்றிய விவரத்தை கூறவில்லை. அனந்தகுமாரின் மனைவியும், மாமியாரும் கேட்டும், வாய் திறக்கவே இல்லை. பிப்., 20ம் தேதி, சவிதா, தன் சகோதரனின் மொபைல் போன் எண்ணை தெரிவித்தார். அதன் பின், அந்த நம்பரில் தொடர்பு கொண்ட அனந்த குமார், சவிதாவை பற்றி கூறினார்.பாதுகாப்பு:

மகளை காணாமல் தேடி அலைந்து கொண்டிருந்தவர்களுக்கு, மகள் பாதுகாப்பாக இருக்கிறார் என்று தெரிந்ததும், நிம்மதியடைந்தனர். அன்று மாலை, சவிதாவின் சகோதரர், பெங்களூருவுக்கு வந்து, அனந்தகுமார் வீட்டில் தங்கியிருந்த, சவிதாவை அழைத்துச் சென்றார்.ஆட்டோ டிரைவர் அனந்தகுமார் கூறியதாவது:

நடிகரின் மீதுள்ள அபிமானத்தால், அந்த இளம்பெண், யாரிடமும் கூறாமல், பெங்களூருக்கு வந்துள்ளார். இரவு நேரத்தில், யார் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதே தெரியாது. இதனால் இளம்பெண்ணின் பாதுகாப்பை கருதி, என் வீட்டுக்கு அழைத்து சென்றேன். இளம்பெண்ணை வீட்டுக்கு அழைத்து சென்ற போது, என் மனைவியும், மாமியாரும் தவறாக நினைக்காமல், இளம்பெண்ணை அவரது பெற்றோரிடம் சேர்க்க ஒத்துழைத்தனர். இவ்வாறு, அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
LAX - Trichy,இந்தியா
25-பிப்-201512:27:00 IST Report Abuse
LAX நீயெல்லாம் என்னம்மா பாடம் சொல்லிக்குடுக்கப்போற மாணவ மணிகளுக்கு..? - அந்த ஆட்டோ டிரைவர் ஆனந்த் குமாருக்கு பாராட்டி விருது குடுக்கலாம் இதுபோன்ற உன்னதமான செயலுக்கு.. இளம்பெண் விஷயத்தில், சஞ்சலம் கொள்ளாமல், மிகவும் பொறுப்புடன் நடந்துகொண்டுள்ளதைப் படிக்கும்போது வார்த்தைகளில் அடக்கமுடியாத மிகப்பெரிய மரியாதை ஏற்படுகிறது அவர்மீது.. - அவரது புகைப்படத்தை வெளியிடுங்க சார்.. நல்ல மனிதர்களை (அதுவும் பெண்கள் விஷயத்தில்) பார்ப்பதற்கே கொடுத்துவைத்திருக்க வேண்டும்..
Rate this:
Cancel
JeevaKiran - COONOOR,இந்தியா
25-பிப்-201511:27:13 IST Report Abuse
JeevaKiran ஆட்டோ டிரைவருக்கு பாராட்டுக்கள். போலீஸ் தகுந்த சன்மானம் அளிக்கணும்.
Rate this:
Cancel
skv - Bangalore,இந்தியா
25-பிப்-201508:46:02 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> ஆட்டோக்காரர் மெய்யாலுமே நல்ல மனிதர். வாழ்க வளர்க அவரும் அவர் குடும்பமும் . இந்த காலத்துலே எவ்ளோ அவளாங்க்களாய் பாக்குறோம் தினம் தினம் ,கிரேட் திரு ஆனந்தகுமார் சார். நல்லவரிடம் இருந்ததால் அந்தப்பெண் மானத்தொடா தப்பினா , கொடூரமா இல்லே போயிருக்கும் அவ வாழ்க்கை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X