சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இணையத்தில் மணமகனை தேடி 4 பேரை மணந்த பெண் கைது

Added : பிப் 27, 2015 | கருத்துகள் (50)
Advertisement
இணையத்தில் மணமகனை தேடி 4 பேரை மணந்த பெண் கைது

இணையத்தில், ஆண்களுக்கு வலை விரித்து, நான்கு பேரை திருமணம் செய்து, ஐந்தாவது திருமணத்திற்கு முயன்ற பெண் கைது செய்யப்பட்டார்.சென்னை, முகப்பேர் கிழக்கு, டி.வி.எஸ்., அவென்யூவைச் சேர்ந்தவர், சீனிவாசன், 38; வீடு மற்றும் அலுவலக உள் அலங்காரம் செய்யும் தொழில் செய்கிறார். அவர், சில தினங்களுக்கு முன், திருமங்கலம் மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது:
நடவடிக்கை:

கடந்த ஆண்டு நவம்பரில், இணையத்தில், மணமகன் தேவை என்ற விளம்பரத்தை பார்த்து, மொபைல்போனில், கோ வையை சேர்ந்த, காயத்ரி, 32, என்பவரை தொடர்பு கொண்டேன். பி.எஸ்சி., படித்து இருப்பதாக தெரிவித்த அவரை, திருமணம் செய்து கொண்டேன். நடவடிக்கை சரியில்லை என்பதால், அவர் வைத்து இருந்த, மொபைல் போனை ஆய்வு செய்தேன். அதில், பல ஆண்களின் எண்கள் இருந்தன. அந்த எண்களுக்கு தொடர்பு கொண்ட போது, காயத்ரி, ஏற்கனவே மூன்று ஆண்களை திருமணம் செய்து இருந்தது தெரியவந்தது. இணையத் தில், ஆண்களுக்கு வலை விரித்து கல்யாண மோசடி செய்து வரும், காயத்ரி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்து இருந்தார். இதுகுறித்து, திருமங்கலம் மகளிர் போலீசார், காயத்ரியிடம் விசாரணை நடத்தி, நேற்று அவரை கைது செய்துள்ளனர். போலீசாரிடம் காயத்ரி அளித்துள்ள வாக்குமூலம்:
2 லட்சம் ரூபாய்:

சொந்த ஊர் கோவை. பி.எஸ்சி., படித்துள்ளேன். பெற்றோர் இறந்து விட்டனர். கடந்த, 2010ல் இணையத்தில், மணமகன் தேவை என, விளம்பரம் செய்து, சென்னை தி.நகரைச் சேர்ந்த, நரசிம்மராவ், 40, என்பவரை திருமணம் செய்தேன். 2 லட்சம் ரூபாய் வாங்கி கொண்டு, விவாகரத்து செய்தேன்.கடந்த, 2012ல், திருச்சியை சேர்ந்த, தொழில் அதிபர் ரவிகுமார், 35, என்பவரை திருமணம் செய்து, 1 லட்சம் ரூபாய் பெற்ற பின், விவாகரத்து கோரி, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். பின், 2013ல், சென் னை மாம்பலத்தைச் சேர்ந்த ராஜகோபால், 33, என்பவரை திருமணம் செய்து, 1 லட்சம் ரூபாய்; 5 சவரன் நகை பெற்ற பின், அவரிடம் இருந்து விலகினேன். நான்காவதாக, சீனிவாசனை திருமணம் செய்தேன். அவரிடம் இருந்து விலக முடிவு செய்து, ஐந்தாவதாக, அம்பத்தூரைச் சேர்ந்த, பாலாஜி என்பவரை திருமணம் செய்ய முடிவு செய்து இருந்தேன். அதற்கான பணிகள் நடந்து வந்தன. இணையத்தில், சுபிக் ஷா, சவுந்தரவள்ளி, சிந்து, காயத்ரி போன்ற பெயர்களில், பதிவு செய்து, மணமகன்கள் தேடினேன். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார். காயத்ரி, மேலும் பல ஆண்களை திருமணம் செய்து, மோசடி செய்து இருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர். அவரை, போலீஸ் காவலில் விசாரிக்கவும் முடிவு செய்துள்ளனர்.

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (50)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
tharun - najran,சவுதி அரேபியா
28-பிப்-201518:06:25 IST Report Abuse
tharun நல்ல பெண். நடவடிக்கை எடுக்க எந்த காரணமும் இருக்க வாய்ப்பில்லை. கணினியை கண்ணியமாக சட்டப்படி பயன் படுத்தியுள்ளார். விவாக ரத்து பெற்ற பின் தான் மற்றவரை மணந்திருக்கிறார். இதில் வெட்கப்பட வேதனைப்பட தேவையில்லை. மறுமணம் அனுமதிக்கப்படும் போது அதில் குறை எது. மாற்றான் மனைவியாகவே வாழ்ந்து மற்றவர்களை மகில்விப்பதையும் மாற்றான் மனைவியை அபகரித்து வாழ்பவனும் தான் தண்டனைக்கு உட்பற்றவர்கள். இவரின் மீது புகார் கூறியவர் , கூறுபவர்கள் தன்னிலை அறியாததின் விளைவு.
Rate this:
Share this comment
Cancel
Sithu Muruganandam - chennai,இந்தியா
27-பிப்-201521:11:04 IST Report Abuse
Sithu Muruganandam பெண்ணுக்குக் கொடுக்கப்படும் முழுச் சுதந்திரம் எதில் எப்படிப்போய் முடியும் என்பதற்கு இவள் ஒரு சிறந்த உதாரணம்.
Rate this:
Share this comment
Cancel
viji kumar - villupuram,இந்தியா
27-பிப்-201520:22:43 IST Report Abuse
viji kumar பாஞ்சாலியாக முயற்சி?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X