தெங்குமரஹடாவில் சதீஷ்குமார்...

Updated : மார் 07, 2015 | Added : மார் 07, 2015 | கருத்துகள் (4)
Share
Advertisement
நீலகிரி மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதிக்கு உள்பட்ட சிறிய கிராமம்தான்தெங்குமரஹடா. தெங்குமரஹடா வனப்பகுதியில் புலி , யானை, சிறுத்தைகள் அதிகமாகவசிக்கிறது. மேலும் அரியவகை மானாக கருதப்படும் சுருளைகொம்பு மானைஇங்கு அதிகம் பார்க்கலாம். வனவிலங்குகள் சரணாலயமாக மாற்றப்பட்ட இப்பகுதிக்கு வனத்துறையினர்அனுமதி வாங்கியே உள்ளே செல்லமுடியும். தற்போது புலிகளின்
தெங்குமரஹடாவில் சதீஷ்குமார்...

நீலகிரி மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதிக்கு உள்பட்ட சிறிய கிராமம்தான்தெங்குமரஹடா. தெங்குமரஹடா வனப்பகுதியில் புலி , யானை, சிறுத்தைகள் அதிகமாகவசிக்கிறது. மேலும் அரியவகை மானாக கருதப்படும் சுருளைகொம்பு மானைஇங்கு அதிகம் பார்க்கலாம்.
வனவிலங்குகள் சரணாலயமாக மாற்றப்பட்ட இப்பகுதிக்கு வனத்துறையினர்அனுமதி வாங்கியே உள்ளே செல்லமுடியும். தற்போது புலிகளின் எண்ணிக்கைகூடியுள்ளதால், புலிகள் காப்பகமாக மாற்றவும் வனத்துறை பரிசீலித்து வருகிறது.
இங்குள்ள மக்களுக்கும் விலங்குகளுக்கும் பயன்பட்டுவருவது இங்கு ஒடும்மாயாறுதான்.
இந்த மாயாறு ஒருவகையில் அற்புதம் என்றால் இன்னோரு வகையில்ஆபத்தானதும் கூட, காரணம் இந்த மாயாற்றில் சமீபகாலமாக பெருகிவரும்முதலைகள்தான்.
மான், காட்டுப்பன்றி போன்றவைகளை கபளீகரம் செய்து செழுமையாக இருக்கும்இந்த முதலைகளை படம் எடுக்க கோவை போட்டோகிராபர் சதீஷ்குமார் சிலநாட்களுக்கு முன் இங்கு பயணம் மேற்கொண்டார்.
வழக்கமாக ஆற்றைக்கடந்து பரிசல் போகும் பாதையைவிட்டு உள்ளூர்வழிகாட்டிகளின் உதவியோடு மாயாற்றின்கரையோரமாகவே நடந்து சென்றபோது ஒரு இடத்தில் பாறை நகர்வது போல பட்டது,கூர்ந்து கவனித்த போதுதான்தெரிந்தது அது பாறையல்ல பாறையின் வடிவத்தோடு ஒத்திருந்த முதலை என்பது.
சத்தமில்லாமல் அதன் அருகே நெருங்கி மறைவிடத்தில் இருந்தபடிகவனித்தபோதுதான் இன்னோரு காட்சி தெரியவந்தது.அது ஒரு முதலைஇன்னோரு முதலையின் வாயை தனது வாலால் சுருட்டி கட்டிப்போட்டிருந்தது.
இனப்பெருக்க காலத்தில் இது போல இரண்டு முதலைகள் சண்டையிடுவதுவழக்கம்தான் இதில் எது ஜெயிக்கிறதோ அதுவே தன் ஜோடியிடம் செல்லும்மற்றது ஒடிவிடும் என்றார் உள்ளூர் வழிகாட்டி.
வாலால் கட்டிபோடப்பட்ட முதலை நீண்ட நேரமாகியும் அந்த பிடியில் இருந்துவிடுபடமுடியாமல் தவித்தது.பிறகு திடீரென தன்னை விடுவித்துக்கொண்டதும்காடே அதிரும்படியாக சத்தமிட்டு சண்டையிட்டது .மொத்தமே முப்பதுவினாடிகள்தான் ஒன்றையொன்று அடித்துக்கொண்டும் இழுத்துக்கொண்டும்தண்ணீருக்குள் மறைந்தது.
அப்படி ஒரு பயங்கர சத்தத்தை கேட்டது இல்லை என்றாலும் அதையும்தாங்கிக்கொண்டு அந்த முப்பது வினாடிகளில் எடுத்தபடங்கள்தான் இவை.
வைல்டுலைப் புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் மிகக்கொண்ட சதீஷ்குமார் தனதுபுகைப்பட பயணத்தில் இது முக்கியமான படம் என்று பெருமிதம் கொள்கிறார்உண்மைதானே அவருக்கான வாழ்த்துக்களை சொல்வதற்காக எண்:9566657026.

-எல்.முருகராஜ்.Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Emperor SR - Ooty,இந்தியா
11-ஜூன்-201516:30:24 IST Report Abuse
Emperor SR பாராட்டுக்கள் சதீஷ் குமார். மென்மேலும் நீங்கள் WILDLIFE PHOTOGRAPHY யில் சிறந்து விளங்க வாழ்த்துக்கள்... நீலகிரியில் இப்படி பல அறிய வனவிலங்கு புகைப்படங்கள் சாத்தியம்..
Rate this:
Cancel
R.BALAMURUGESAN - Muscat,ஓமன்
27-மார்-201508:54:31 IST Report Abuse
R.BALAMURUGESAN ...ஒரே இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட அனைத்து புகைப்படங்களும் நன்று...
Rate this:
Cancel
Indian Sandwalker - chenai,இந்தியா
14-மார்-201515:17:36 IST Report Abuse
Indian Sandwalker சூப்பர் சுரேஷ்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X