பொது செய்தி

தமிழ்நாடு

எழுத்தாளர்களுக்கு எதிர்பார்ப்பு கூடாது: சாகித்ய அகாடமி விருது பெறும் தேவதாஸ் கருத்து

Added : மார் 11, 2015
Advertisement
எழுத்தாளர்களுக்கு எதிர்பார்ப்பு கூடாது: சாகித்ய அகாடமி விருது பெறும் தேவதாஸ் கருத்து

விருதுநகர்: "எழுத்தாளர்கள் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இருக்க வேண்டும்,” என சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள சா.தேவதாஸ் தெரிவித்தார்.


'ஷேடோ ஓவர் லடாக்':

ஆங்கில நாவலை 'லடாக்கிலிருந்து கவிழும் நிழல்' என தமிழில் மொழிபெயர்த்த சா.தேவதாசுக்கு சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் எரிச்ச நத்தம் அருகே உள்ள நடையநேரியைச் சேர்ந்தவர் சா.தேவதாஸ், 60. கூட்டுறவுத்துறையில் துணைப்பதிவாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற இவர் தற்போது ராஜபாளையத்தில் வசிக்கிறார். அவர் கூறியதாவது: 1975-77ல் மதுரை காமராஜ் பல்கலையில் எம்.ஏ., தமிழ் இலக்கியம் படித்தேன். 1990ல் இருந்தே என் எழுத்துப்பயணம் துவங்கியது. தமிழ் இலக்கிய ஆர்வம் காரணமாக நூல் மொழிபெயர்ப்பு, கட்டுரைகள் எழுதுவது, ஆய்வு செய்வதில் ஈடுபாடு ஏற்பட்டது. இந்திய ஆங்கில நாவலாசிரியர் பவானி பட்டாச்சார்யா எழுதிய 'ஷேடோ ஓவர் லடாக்' என்ற நூலை தமிழில் 2011ல் மொழிபெயர்த்து வெளியிட்டேன். அதை 2014ம் ஆண்டிற்குரிய சாகித்ய அகாடமியின் சிறந்த மொழிபெயர்ப்பு நூலாக தேர்வு செய்து விருதிற்காக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுவரை 25 ஆங்கில நூல்களை தமிழில் மொழிபெயர்த்துள்ளேன். ஆறு கட்டுரை நூல்கள் எழுதி உள்ளேன். எழுத்தாளர்களை பொறுத்தவரை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இருக்க வேண்டும். விருது வரும்போது ஏற்றுக்கொள்ள வேண்டும். அந்த மனநிலையில்தான் நான் உள்ளேன். அதே நேரத்தில் எழுத்தாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் தீவிரமாக இயங்கும் காலகட்டத்தில் அவர்களுக்கு அங்கீகாரம் கிடைத்தால் உற்சாகப்படுத்துவதாக, ஊக்குவிப்பதாக அமையும் என்றார். இவரை 99761 34450 ல் வாழ்த்தலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X