ஆயிரம்படங்களில் சில அபூர்வபடங்கள்...| Dinamalar

ஆயிரம்படங்களில் சில அபூர்வபடங்கள்...

Added : மார் 12, 2015 | கருத்துகள் (2)
ஆயிரம்படங்களில் சில அபூர்வபடங்கள்...

மெர்வின் ஆண்டோ

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்தவர்.புகைப்பட பிரியன் என்ற அமைப்பை முகநூலில் ஏற்படுத்தி புகைப்படக்கலைஞர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர்.

பெருநகரங்களில் மட்டுமே நடந்துவரும் புகைப்பட கருத்தரங்கு மற்றும் கண்காட்சி போன்றவைகளை வெற்றிகரமாக கன்னியாகுமரியில் நடத்திக்காட்டி வருபவர்.

கடந்த 7,8 ஆகிய தேதிகளில் நாகர்கோயிலில் எக்ஸ்போசர் 15 என்ற தலைப்பில் புகைப்பட கண்காட்சியை நடத்தினார்.புகைப்பட கண்காட்சி மற்றும் புகைப்பட போட்டிக்கான அழைப்பை ஏற்று தமிழகம் முழுவதிலும் இருந்து கிட்டத்தட்ட ஆயிரம் புகைப்படங்கள் வந்தன.


பரிசுகள்:

இதில் போட்டிக்காக வந்த 600 படங்களில் சிறந்த படங்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.முதல் பரிசு புதுச்சேரியை சேர்ந்த விஷாலுக்கும் இரண்டாம் பரிசு நாகர்கோவிலைச் சேர்ந்த அலெக்ஸ்க்கும்,மூன்றாம் பரிசு புதுச்சேரியை சேர்ந்த ஸ்ரீகாந்திற்கும் வழங்கப்பட்டது. இது போக மேலும் பத்து படங்கள் தேர்வு செய்யப்பட்டு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.

மேலும் முகநூலில் போட்டோ ஆப் தி டே என்ற தலைப்பில் நடைபெற்ற ஆன்லைன் புகைப்பட போட்டியில் தேர்வு பெற்ற ஐம்பது புகைப்படங்களின் படைப்பாளிகளும் கவுரவிக்கப்பட்டனர்.

கண்காட்சியினை நாகர்கோவில் நகரசபை தலைவர் மீனாதேவ் திறந்துவைத்தார் சிறப்பு விருந்தினர்களாக சீசர் ஜெபனேசன்,ரபார்ட் கிராப் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கண்காட்சியினை முன்னிட்டு சென்னை சென்டியண்ட் போட்டோகிராபி ஸ்கூல் நிறுவனர் லட்சுமண்,'கேன்டிட் போட்டோகிராபி' வகுப்பினை நடத்தினார்,அதே போல கேமில் அலெக்ஸ் மாடல் போட்டோகிராபி வகுப்பினை நடத்தினார்.

இரண்டு நாட்கள் நடைபெற்ற கண்காட்சியினை ஏாராளமான பொதுமக்களும் புகைப்பட ஆர்வலர்களும் பார்த்து ரசித்தனர் கண்காட்சிக்கான ஏற்பாடுகளை மெர்வின் ஆண்டோவுடன் இணைந்து செல்வம்,ஜவஹர் மற்றும் ஐயப்பன் ஆகியோர் செய்திருந்தனர்.

- எல்.முருகராஜ்

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X