பொது செய்தி

தமிழ்நாடு

'மாணவர்களை வழிநடத்துவது ஆசிரியர்களின் கடமை'

Added : மார் 15, 2015
Share
Advertisement
கும்மிடிப்பூண்டி : சரியான வழிகாட்டுதல் இல்லாமல், தடம் மாறும் மாணவர்களை கண்டறிந்து நல்வழிப்படுத்துவது ஆசிரியர்களின் கடமை என, பள்ளி கல்வி துறை இயக்குனர் தெரிவித்தார். கும்மிடிப்பூண்டி அடுத்த, மாதர்பாக்கம் பகுதியில் உள்ள அரசினர் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில், நேற்று முன்தினம், ஆண்டு விழா நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சந்திரசேகர்,

கும்மிடிப்பூண்டி : சரியான வழிகாட்டுதல் இல்லாமல், தடம் மாறும் மாணவர்களை கண்டறிந்து நல்வழிப்படுத்துவது ஆசிரியர்களின் கடமை என, பள்ளி கல்வி துறை இயக்குனர் தெரிவித்தார்.

கும்மிடிப்பூண்டி அடுத்த, மாதர்பாக்கம் பகுதியில் உள்ள அரசினர் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில், நேற்று முன்தினம், ஆண்டு விழா நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சந்திரசேகர், கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி., சிவலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியின் தலைமை ஆசிரியர் விஜயம் வரவேற்றார்.சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பள்ளி கல்வி துறை இயக்குனர் கண்ணப்பன், கல்வி மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளித்து பேசுகையில், ''இன்றைய சூழலில், சரியான வழிகாட்டுதல் இல்லாமல், பள்ளி மாணவ, மாணவியர், தடம் மாறும் நிலை ஏற்படுகிறது. அப்படி தடம் மாறும் மாணவர்களை கண்டறிந்து, அவர்களை சரியாக வழி நடத்த வேண்டியது ஆசிரியர்களின் கடமையாகும்,'' என்றார். மேலும், ''கிராமப்புற பெற்றோர், பெண் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அவர்களை பட்டப்படிப்பு வரை படிக்க வைக்க வேண்டும்,'' என, பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X