ஆண்டு விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆண்டு விழா

Added : மார் 15, 2015
Share
காரைக்குடி: வெற்றியூர் அரசு மேல்நிலை பள்ளி ஆண்டு விழா, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சுப்பு தலைமையில் நடந்தது. ஊராட்சி தலைவர் உதயகுமார் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் லூர்துராஜ் வரவேற்றார். ஆசிரியர் சகாயரத்தினம், ஒன்றிய கவுன்சிலர் ராஜாமலர், முருகேசன் பங்கேற்றனர். தமிழ் ஆசிரியை சண்முகவள்ளி நன்றி கூறினார். தேவகோட்டை: தேவகோட்டை ஆனந்தா கல்லூரி ஆண்டு விழா நடந்தது.



காரைக்குடி: வெற்றியூர் அரசு மேல்நிலை பள்ளி ஆண்டு விழா, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சுப்பு தலைமையில் நடந்தது. ஊராட்சி தலைவர் உதயகுமார் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் லூர்துராஜ் வரவேற்றார். ஆசிரியர் சகாயரத்தினம், ஒன்றிய கவுன்சிலர் ராஜாமலர், முருகேசன் பங்கேற்றனர். தமிழ் ஆசிரியை சண்முகவள்ளி நன்றி கூறினார்.
தேவகோட்டை: தேவகோட்டை ஆனந்தா கல்லூரி ஆண்டு விழா நடந்தது. பள்ளி செயலாளர் சூசைமாணிக்கம் வரவேற்றார். முதல்வர் அந்தோணிச்சாமி அறிக்கை வாசித்தார். அழகப்பா பல்கலை தேர்வு கட்டுபாட்டு அலுவலர் உதயசூரியன் மலரை வெளியிட்டார். இயக்குனர் ஜெயசீலன் பரிசு வழங்கினார். துணை முதல்வர் ஜான்வசந்த்குமார் நன்றி கூறினார். பேராசிரியர்கள் சங்கர், கார்த்திகேயன் ஏற்பாட்டை செய்தனர்.
திருப்புத்தூர்: திருப்புத்தூர் பாபா அமிர்பாதுஷா மெட்ரிக்., பள்ளி ஆண்டு விழா நடந்தது. தாளாளர் பாபா அமிர்பாதுஷா தலைமை வகித்தார். மாணவி அப்னா பானு வரவேற்றார்.
முன்னாள் மாணவி ராஜலெட்சுமி பேசினார். ஹாஜா மொய்னுதீன் ஆலீம் வாழ்த்தி பேசினார். மாணவர்கள் ஸ்ரீகுமார், லெட்சுமி பிரியா, ஹசீனா பாத்திமா பேசினர்.
சான்று, பதக்கம் வழங்கினர். மாணவர் பிரித்திவிராஜ் நன்றி கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X