பிரதமர் மோடியின் பேச்சுக்கு ஆதரவும், எதிர்ப்பும்

Added : மார் 17, 2015 | கருத்துகள் (31)
Share
Advertisement
கொழும்பு ''இலங்கை தமிழர்களுக்கு அதிகார பகிர்வு வழங்க வகை செய்யும், 13வது சட்ட திருத்தத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும்,'' என்ற பிரதமர் மோடியின் பேச்சுக்கு, இலங்கையில் ஆதரவும், எதிர்ப்பும் எழுந்துள்ளது. அண்மையில் இலங்கை சென்று, அதிபர் மைத்ரிபால சிறிசேனவுடன் பேச்சு நடத்திய பிரதமர் மோடி, 'தமிழர்கள் உட்பட அனைத்து சமூகத்தினரும் சமத்துவமாக, மரியாதையுடன் நடத்தப்பட
பிரதமர் மோடியின் பேச்சுக்கு ஆதரவும், எதிர்ப்பும்

கொழும்பு ''இலங்கை தமிழர்களுக்கு அதிகார பகிர்வு வழங்க வகை செய்யும், 13வது சட்ட திருத்தத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும்,'' என்ற பிரதமர் மோடியின் பேச்சுக்கு, இலங்கையில் ஆதரவும், எதிர்ப்பும் எழுந்துள்ளது.

அண்மையில் இலங்கை சென்று, அதிபர் மைத்ரிபால சிறிசேனவுடன் பேச்சு நடத்திய பிரதமர் மோடி, 'தமிழர்கள் உட்பட அனைத்து சமூகத்தினரும் சமத்துவமாக, மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும்' என்று தெரிவித்திருந்தார். 'ஒற்றுமையான, அமைதியான, ஒன்றுபட்ட இலங்கையை உருவாக்க, இந்தியா துணை நிற்கும்; இதற்கு, 13வது அரசியல் சாசன சட்ட திருத்த அமலாக்கம் துணை புரியும்' என்று கூறியிருந்தார்.

இதுகுறித்து, மக்கள் விடுதலை முன்னணி பொதுச் செயலர், தில்வின் சில்வா கூறியது: இலங்கையின், 13வது சட்ட திருத்தம், 1987ம் ஆண்டு உருவானது. அதனால், பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில், அப்போது அதை ஏற்றுக் கொண்டோம். இந்தியாவால் இலங்கை மீது திணிக்கப்பட்ட இந்த சட்டம், இனப் பிரச்னைக்கு தீர்வாகாது. இதற்கு, நேர்மையான அணுகுமுறை தேவை. அதன் மூலம், தமிழ் மக்களுக்கு அதிக ஜனநாயக உரிமைகள் வழங்கப்பட்டால், அதை வரவேற்போம்.இவ்வாறு, அவர் கூறினார்.

வடகிழக்கு தமிழர்கள் மத்தியில் அதிக செல்வாக்கு உள்ள ஜனநாயக மக்கள் முன்னணி கட்சி தலைவர் கணேசன் கூறுகையில், ''இலங்கை அரசு, 13வது சட்ட திருத்தத்தை ஏற்றுக் கொண்டுள்ளதால், அதை செயல்படுத்தும் பட்சத்தில் சுமுக தீர்வு ஏற்படும்,'' என்று தெரிவித்துள்ளார்.

ஆனால், சிங்களர்களின் பாரம்பரிய கட்சி செய்தி தொடர்பாளர், நிஷாந்தா ஸ்ரீ வாரணசிங்கே கூறுகையில், ''மோடியின் கருத்து சுதந்திரத்தை நாங்கள் மதிக்கிறோம். ஆனால், தமிழர் பிரச்னைக்கு தீர்வு காண்பது, இலங்கை மக்களின் கைகளில் தான் உள்ளது,'' என்று கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Somiah M - chennai,இந்தியா
17-மார்-201520:25:04 IST Report Abuse
Somiah M சுமார் நூறு வருடங்களாக எல்லா வகையிலும் சமன் இல்லாத நிலையிலிருந்த ஒருநாட்டில் சம நிலை ஏற்படுத்துவது என்பது சுலபமான சாதனை அல்ல. இந்திராஜிக்கு பிறகு ஒரு நல்ல முயற்சிக்கு மோடி வித்திட்டு இருக்கிறார். அம்முயற்சி வெற்றி பெற நாம் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். தமிழர்கள் எவ்வளவு தூரம் பலமாக இருக்கிறார்களோ அந்த அளவுக்கு அது இந்தியாவிற்கு பலமாகும் என்ற ராஜ தந்திரத்தை இந்திராஜியை போல மோடிஜியும் உணர்ந்து செயல் படவேண்டும் .
Rate this:
Cancel
C Suresh - Charlotte,இந்தியா
17-மார்-201519:56:10 IST Report Abuse
C Suresh மோடியின் செயல்களில் ஒரு உண்மை தெரிகிறது. இங்கு உள்ளவர்கள் ஏதோ தமிழருக்கு இலங்கையில் தனி நாடு என்று இன்னும் பேசுகின்றனர். சிங்கபூர் போல ஒன்றாக ஒத்துழைத்து வாழ்ந்தால் தமிழருக்கும் நல்லது, ஐக்கிய இலங்கைக்கும் நல்லது. ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
17-மார்-201514:00:04 IST Report Abuse
Pugazh V அண்டை நாடுகளுடன் எந்த அளவில் சுமுகமான உறவு இருக்கிறது என்பதற்கு இது எடுத்துக்காட்டு. பரிதாபம். இலங்கை சென்று வயிறார சாப்பிட்டுவிட்டு, காங்கிரஸ் காலத்தில் தமிழர்களுக்காகக் கட்டப்பட்ட வீடுகளை திறப்புவிழா செய்துவிட்டு, இந்தியா வந்து இறங்கக் கூட இல்லை, அதற்குள், மீன் பிடிக்க வந்தால் சுட்டுத் தள்ளுவேன் என்று இலங்கை அரசு முழங்குகிறது. அங்கே சென்றிருந்த போது, என்ன புண்ணாக்கு ஒப்பந்தம் பேசினார்களோ, கடவுளுக்கே வெளிச்சம். "இதை மோடி சும்மா விட மாட்டார்" என்று நம்புவோம்" என்று ஒரு கும்பல் சொல்லிக் கொண்டு திரிகிறது, பரிதாபம்.
Rate this:
Rajamani Ksheeravarneswaran - bangalore,இந்தியா
18-மார்-201512:00:18 IST Report Abuse
Rajamani Ksheeravarneswaranகாங்கிரசும் திமுகவும் இலங்கை தமிழர்களுக்கு ஏற்கனவே நிறைய செய்துவிட்டார்கள். மிஞ்சியிருக்கும் இலங்கை தமிழர்களுக்கும் மோடி ஏதாவது செய்வார் என்று நம்புவோமாக ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X