எல்லை மீறி வந்தால் சுடுவோம் மீண்டும் ரணில் 'திமிர்' பேச்சு

Added : மார் 17, 2015 | கருத்துகள் (54)
Share
Advertisement
கொழும்பு: 'இலங்கை கடல் பகுதியில் அத்துமீறி யார் வந்தாலும் கடற்படையினர் சுடுவார்கள்' என இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே எச்சரித்து உள்ளார்.'அத்துமீறி இலங்கை கடல் பகுதிக்குள் நுழையும் தமிழக மீனவர்களை சுட்டுத் தள்ளுவோம்' என அண்மையில் அவர் தெரிவித்த கருத்தால் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது.இதையடுத்து தம் பேச்சுக்கு ரணில் விக்ரமசிங்கே பகிரங்க
எல்லை மீறி வந்தால் சுடுவோம் மீண்டும் ரணில் 'திமிர்' பேச்சு

கொழும்பு: 'இலங்கை கடல் பகுதியில் அத்துமீறி யார் வந்தாலும் கடற்படையினர் சுடுவார்கள்' என இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே எச்சரித்து உள்ளார்.

'அத்துமீறி இலங்கை கடல் பகுதிக்குள் நுழையும் தமிழக மீனவர்களை சுட்டுத் தள்ளுவோம்' என அண்மையில் அவர் தெரிவித்த கருத்தால் தமிழகத்தில் பெரும்
கொந்தளிப்பு ஏற்பட்டது.இதையடுத்து தம் பேச்சுக்கு ரணில் விக்ரமசிங்கே பகிரங்க வருத்தம் தெரிவித்தார்.

இந்நிலையில் ஒரு தொலைக்காட்சி பேட்டியில் இலங்கை கடல் எல்லைக்குள் வரும் எந்த நாட்டினரையும் சுடும் அதிகாரம் கடற்படைக்கு உள்ளது; இது ஒன்றும் புதிதல்ல என்று தெரிவித்து உள்ளார்.'பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை பயணம் வெற்றிகரமாக இருந்தது' என்று தெரிவித்த ரணில் 'மீனவர் பிரச்னைக்கு தீர்வு காண்பதில் இரு நாடுகளும் ஆர்வமாக உள்ளன' என்று கூறினார்.

மோடி இலங்கை வருவதற்கு முன் தன் பேச்சுக்கு வருத்தம் தெரிவித்த ரணில் பிரதமர் இந்தியா திரும்பியவுடன் மீண்டும் வெறிப் பேச்சை உமிழ்ந்திருப்பது தமிழக மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (54)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஏடு கொண்டலு - Cupertino,யூ.எஸ்.ஏ
18-மார்-201502:53:48 IST Report Abuse
ஏடு கொண்டலு இதில் வெறிப் பேச்சு எங்கிருந்து வந்தது. ஒவ்வொரு பிரதமரும், சொன்னாலும் சொல்லாவிட்டாலும், செய்யவேண்டியது இதைத் தான். அப்புறம் எதற்கு எல்லை என்று ஒன்று? தாண்டினால் சுடுவதற்குப் பெயர் தான் எல்லை. எவன் வேண்டுமானாலும் நினைத்த போது வந்துவிட்டுப் போக அது என்ன இந்திய எல்லையா?
Rate this:
Cancel
A.Karnan - jurong west,சிங்கப்பூர்
17-மார்-201521:04:32 IST Report Abuse
A.Karnan எந்த மனிதனாக இருந்தாலும் ஒரு சொல்லை சொல்லும்போது அவரவர் பொறுப்பை உணர்ந்து பேசவேண்டும்.ஒரு நாட்டை வழிநடத்தும் பிரதமர் தன்நாட்டு மக்களை கட்டிகாக்க வேண்டும் அதேபோல் நட்புநாடு மற்றும் அடுத்த நாட்டு மக்களுக்கு எந்த தீங்கும் நேராமல் பார்த்துகொள்வது பிரதமரின் தலையாய கடமை ஆகும்.தன் நாட்டு கடல் எல்லையை தாண்டி வருபவர்களை கைது செய்ய மட்டும்தான் அதிகாரம் உள்ளதே தவிர சுட்டுத்தள்ள அதிகாரம் இல்லை.ஆனால் இலங்கை பிரதமர் "எல்லை தாண்டும் மீனவர்களையும்,அயல் நாட்டவரையும் சுட்டு தள்ளுவோம்" என்று கூறியிருப்பது தீவிரவாதிகளின் பேச்சிபோல் உள்ளது.எனவே இதனை உலகத்தலைவர்கள் தட்டி கேப்பார்களா ?.
Rate this:
jagan - Chennai,இந்தியா
18-மார்-201519:11:45 IST Report Abuse
jagan"கைது செய்ய மட்டும்தான் அதிகாரம்" ...அப்பிடியா? சொல்லவே இல்ல....சுட்டு தள்ள முழு அதிகாரம் உண்டு......
Rate this:
Cancel
Varun Ramesh - Chennai,இந்தியா
17-மார்-201518:59:52 IST Report Abuse
Varun Ramesh எதற்காக எல்லையை கடந்து போக வேண்டும்? எல்லைக்கப்பால் தான் நல்ல மீன் நிறைய கிடைக்கிறது என்பதற்காகவா? இது நியாயமா? பாகிஸ்தான் இந்திய எல்லையில் ஊடுருவினால் நாம் கண் மூடி, வாய் மூடி சும்மா இருப்போமா? கடல் எல்லையில் அத்து மீறுவது தவறு என்று தெரிந்தும் மீண்டும் மீண்டும் அதை செய்வானேன்? தமிழக அரசியல்வாதிகள் மீனவர்களின் அபிமானத்தை ( வாக்குகளை ) பெறுவதற்காக அத்து மீறுவது ஏதோ நியாயம் என்பது போல் பேசி வருவது தவறு. ஆட்சியில் இல்லாத அத்தனை அரசியல் கட்சிகளும் மீனவர்களின் செயலை ஆதரிக்கின்றன. ஆட்சியில் இருக்கும் கட்சி, ஆட்சியில் இருக்கும் வரை அமைதியாக இருந்துவிட்டு, பதவி இழந்த பின் மீனவர் பிரச்சனையில் தற்போதைய ஆளும் கட்சி எதுவும் செய்யவில்லை என்று குறை கூறுவதை வழக்கமாக கொண்டுள்ளன.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X