எல்லை மீறி வந்தால் சுடுவோம் மீண்டும் ரணில் திமிர் பேச்சு| We will shoot Fisherman: Ranil | Dinamalar

எல்லை மீறி வந்தால் சுடுவோம் மீண்டும் ரணில் 'திமிர்' பேச்சு

Added : மார் 17, 2015 | கருத்துகள் (54)
Share
கொழும்பு: 'இலங்கை கடல் பகுதியில் அத்துமீறி யார் வந்தாலும் கடற்படையினர் சுடுவார்கள்' என இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே எச்சரித்து உள்ளார்.'அத்துமீறி இலங்கை கடல் பகுதிக்குள் நுழையும் தமிழக மீனவர்களை சுட்டுத் தள்ளுவோம்' என அண்மையில் அவர் தெரிவித்த கருத்தால் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது.இதையடுத்து தம் பேச்சுக்கு ரணில் விக்ரமசிங்கே பகிரங்க
எல்லை மீறி வந்தால் சுடுவோம் மீண்டும் ரணில் 'திமிர்' பேச்சு

கொழும்பு: 'இலங்கை கடல் பகுதியில் அத்துமீறி யார் வந்தாலும் கடற்படையினர் சுடுவார்கள்' என இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே எச்சரித்து உள்ளார்.

'அத்துமீறி இலங்கை கடல் பகுதிக்குள் நுழையும் தமிழக மீனவர்களை சுட்டுத் தள்ளுவோம்' என அண்மையில் அவர் தெரிவித்த கருத்தால் தமிழகத்தில் பெரும்
கொந்தளிப்பு ஏற்பட்டது.இதையடுத்து தம் பேச்சுக்கு ரணில் விக்ரமசிங்கே பகிரங்க வருத்தம் தெரிவித்தார்.

இந்நிலையில் ஒரு தொலைக்காட்சி பேட்டியில் இலங்கை கடல் எல்லைக்குள் வரும் எந்த நாட்டினரையும் சுடும் அதிகாரம் கடற்படைக்கு உள்ளது; இது ஒன்றும் புதிதல்ல என்று தெரிவித்து உள்ளார்.'பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை பயணம் வெற்றிகரமாக இருந்தது' என்று தெரிவித்த ரணில் 'மீனவர் பிரச்னைக்கு தீர்வு காண்பதில் இரு நாடுகளும் ஆர்வமாக உள்ளன' என்று கூறினார்.

மோடி இலங்கை வருவதற்கு முன் தன் பேச்சுக்கு வருத்தம் தெரிவித்த ரணில் பிரதமர் இந்தியா திரும்பியவுடன் மீண்டும் வெறிப் பேச்சை உமிழ்ந்திருப்பது தமிழக மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X