நண்பனுக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனைக்கு நிதியுதவி அளித்த 8 வயது சிறுவன்

Added : மார் 17, 2015 | கருத்துகள் (13)
Share
Advertisement
கொலராடோ: நண்பனுக்கு மருத்துவ சிகிச்சையளித்த மருத்துவமனைக்கு நன்றி செலுத்தும் வகையில், எட்டு வயது சிறுவன், சாக்லேட் விற்பனை செய்து கிடைத்த பணத்தை மருத்துவமனைக்கு அளித்துள்ளான்.அமெரிக்காவின் டென்வர் நகரில், டிரிஸ்டன், 8, வசித்து வருகிறான். இவனது நண்பன் கேட், மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, அப்பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அறுவை சிகிச்சை
நண்பனுக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனைக்கு நிதியுதவி அளித்த 8 வயது சிறுவன்

கொலராடோ: நண்பனுக்கு மருத்துவ சிகிச்சையளித்த மருத்துவமனைக்கு நன்றி செலுத்தும் வகையில், எட்டு வயது சிறுவன், சாக்லேட் விற்பனை செய்து கிடைத்த பணத்தை மருத்துவமனைக்கு அளித்துள்ளான்.

அமெரிக்காவின் டென்வர் நகரில், டிரிஸ்டன், 8, வசித்து வருகிறான். இவனது நண்பன் கேட், மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, அப்பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அறுவை சிகிச்சை மற்றும் கீமோதெரப்பிக்கு பின், உயிர் பிழைத்து வீடு திரும்பினான்.இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன், விளையாட்டு பொம்மைகள் வாங்குவதற்காக தன்னுடைய வீட்டு வாசலில், டார்க் சாக்லேட் விற்பனையை டிரிஸ்டன் துவக்கினான்.

ஒரு கப் ஹாட் சாக்லேட் ஒரு டாலருக்கும், இரண்டு டாலருக்கு பல்வேறு சுவைகளில் உள்ள சாக்லேட்களும் விற்பனை செய்தான்.அக்கம்பக்கத்தில் உள்ள குழந்தைகள், ஆர்வமாக சாக்லேட் வாங்கிச் சென்றதில், மூன்று வாரங்களில் ஏறக்குறைய, 75 ஆயிரம் ரூபாய் (1,200 டாலர்) டிரிஸ்டனுக்கு வருமானமாக கிடைத்தது.இந்த பணத்தை, விளையாட்டு பொம்மைகள் வாங்க பயன்படுத்தாமல், தன்னுடைய நண்பனுக்கு சிகிச்சையளித்த மருத்துவமனைக்கு வழங்கினான்.இதன் காரணமாக, இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உயர் சிகிச்சை கிடைத்தது.

'உதவி செய்வதில் சிறியது, பெரியது என்ற பாகுபாடு இல்லை. உதவிக்கு பின் உள்ள உயர்ந்த நோக்கம் அதை உயர்த்திவிடுகிறது' என்று, டிரிஸ்டனை மருத்துவமனை நிர்வாகி பாராட்டி உள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
25-மார்-201514:39:23 IST Report Abuse
&2965&3006&2992&3021&2980&3021&2980&3007&2965&3021 குழந்தைகள் கடவுளின் மறு உருவம்.
Rate this:
Cancel
Poornima - Singapore,சிங்கப்பூர்
18-மார்-201520:46:10 IST Report Abuse
Poornima நல்ல காரியம் சிறுவனே வாழ்த்துக்கள். உன் சக மனிதனுக்கு உதவு என்பதை விட உன் சக மனிதனை விட பொருளாதரத்தில் எப்படியாவது முந்து என்று இக்காலத்தில் பிஞ்சு மனதினில் பொறாமையை விதைக்கிறார்கள் சிலர். இவர்கள் மனம் மாறினால் எவ்வளவோ மாற்றங்கள் வரும்
Rate this:
Cancel
Nannisigamani Baskaran - Chennai,இந்தியா
18-மார்-201510:27:07 IST Report Abuse
Nannisigamani Baskaran நீதாண்டா மனித பிறவி ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X