நேபாளம்:பஸ் விபத்தில் 18 பேர் பலி

Added : மார் 17, 2015 | கருத்துகள் (1)
Share
Advertisement
காத்மாண்டு:நேபாள நாட்டில் பயணிகளுடன் சென்ற பஸ், நேற்று மலைப் பாதையிலிருந்து உருண்டு விழுந்ததில், அதிலிருந்த 18 பேர் உயிரிழந்தனர். 11 பேர் காயமடைந்தனர்.அந்த நாட்டின் ஜும்லா மாவட்டத்திலிருந்து 29 பயணிகளுடன், அந்த பஸ், காளிகோட் மாவட்டத்திலுள்ள நாகம் என்னும் ஊருக்குச் சென்று கொண்டிருந்தது.மழை காரணமாக மலைப் பாதையில் தண்ணீர் தேங்கி நின்றதால் இந்த விபத்து ஏற்பட்டதாகக்

காத்மாண்டு:நேபாள நாட்டில் பயணிகளுடன் சென்ற பஸ், நேற்று மலைப் பாதையிலிருந்து உருண்டு விழுந்ததில், அதிலிருந்த 18 பேர் உயிரிழந்தனர். 11 பேர் காயமடைந்தனர்.அந்த நாட்டின் ஜும்லா மாவட்டத்திலிருந்து 29 பயணிகளுடன், அந்த பஸ், காளிகோட் மாவட்டத்திலுள்ள நாகம் என்னும் ஊருக்குச் சென்று கொண்டிருந்தது.மழை காரணமாக மலைப் பாதையில் தண்ணீர் தேங்கி நின்றதால் இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.விபத்தைத் தொடர்ந்து, சம்பவ இடத்திலேயே 13 பேரும், மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் இருவரும் உயிரிழந்தனர். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 3 மாதக் குழந்தை உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் மேலும் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ديفيد رافائيل - مدری,இந்தியா
17-மார்-201505:38:58 IST Report Abuse
ديفيد رافائيل கொடுரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X