படம் பிடித்தார், இந்தியாவின் வேர்களில் இடம் பிடித்தார்

Updated : மார் 21, 2015 | Added : மார் 18, 2015 | கருத்துகள் (7)
Advertisement
படம் பிடித்தார், இந்தியாவின் வேர்களில் இடம் பிடித்தார்

இந்திய கலாச்சாரத்தை அழகாக அற்புதமாக ஆனித்தரமாக வெளிப்படுத்தும்புகைப்பட அமைப்புதான் ரூட்ஸ் ஆப் இந்தியா(இந்தியாவின் வேர்கள்).

பல்வேறு மாநிலங்களில் பல்வேறு சூழ்நிலைகளில் பல்வேறு கலாச்சாரங்களின்பின்னனியில் பல்வேறு புகைப்படக்கலைஞர்களால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்இதில் இடம் பெற்றிருக்கும்.பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல படங்கள்அனைத்தும் அருமையாக இருக்கும்.

இந்த அமைப்பிற்கு யார் வேண்டுமானாலும் படங்கள் அனுப்பலாம் ஆனால் தேர்வுபெற்றால் மட்டுமே படம் பிரசுரமாகும்.இதில் தங்களது படங்கள் இடம் பெறுவதைபெருமையாக கருதி படங்கள் அனுப்பும் புகைப்படக்கலைஞர்கள் அதிகம்.

இந்த நிலையில் ரூட்ஸ் ஆப் இந்தியாவில் வெளியாகி பலரது விருப்பத்திற்கும்பாராட்டிற்கும் உள்ளான ஒரு படத்தை எடுத்தவர்தான் மீனா ராகேஷ்.

கங்கைகொண்ட சோழபுரம் கோவில் நந்தி சிலையின் காதில் குழந்தை பேசுவதுபோன்ற படம்தான் ரூட்ஸ் ஆப் இந்தியாவில் இடம் பெற்று பலரதுபாராட்டைபெற்றுவரும் படமாகும்.

இவ்வளவு அருமையான படம் எடுத்த மீனா புரபஷனல் போட்டோகிராபர் அல்லஎன்பதுதான் இன்னும் வியப்பான விஷயம்.

குழந்தைகள் மீது கொண்ட பிரியம் காரணமாக குழந்தைகளுக்கான விருட்சம்பர்ஸ்ட்ஸ்கூல் துவங்கியவர்.குழந்தைகள் எதிரே விரலையும் உயர்த்தக்கூடாதுகுரலையும் உயர்த்தக்கூடாது என்பது போன்ற நல்ல கொள்கைகளின் காரணமாக அடைந்த வளர்ச்சியானாம் பெற்றோர்களின் ஆதரவினாலும்தற்போது பள்ளியை நிறைய கிளைகளுடன் நடத்திவருபவர்.

தனது பத்து வயது மகன் எடுக்கும் குறும்புத்தனமான புகைப்படங்களைதிருத்துவதற்காக கேமிராவை எடுத்தவர் இப்போது கிழே வைக்க முடியாதஅளவிற்கு புகைப்படக்கலையோடு ஒன்றிவிட்டார்.

குளு மணாலி போகும் போது கேமிராவை துாக்கி முதலில் பையில் வைப்பது கூடபெரிய விஷயமல்ல,வீட்டு மொட்டை மாடியில் துணியை உலர்த்த போகும் போதுகூட ஒரு கையில் துணிவாளியும் இன்னோரு கையில் கேமிராவுமாகத்தான்செல்கிறார், கேட்டால் என் வீட்டு மாடிக்கு வரும் பறவைகளும் அணில்களும் நான்கேமிரா இல்லாமல் இருந்தால் வருத்தப்படும் என்று சொல்லி சிரிக்கிறார்.

பரபரப்பான பள்ளி வேலை, பொறுப்பான மருமகள், குழந்தைகளைஆளாக்கிபார்க்கவேண்டிய தாய், குடும்பதலைவி என்ற பரபரப்பிற்கு நடுவிலும்தனக்கு பிடித்த விஷயங்களை படம் எடுக்க தவறுவது இல்லை.

என் கணவர் ராகேஷ்க்குதான் மிகவும் நன்றி சொல்லவேண்டும் நான் விருப்பப்பட்டகேமிராவை என்ன விலை என்று கேட்காமல் வாங்கிக்கொடுத்ததுடன் எனதுபடங்களின் முதல் ரசிகராக இருந்து பாராட்டுவது வரை அவர் தரும் ஊக்கம்தான்எனது படங்கள் சிறப்பாக பிரதானகாரணம்.

படம் எடுக்க வழிகாட்டியவர் சென்னை சென்டியன்ட் பள்ளி நிறுவனர்லட்சுமணன்சார்தான். அவரிடம் படித்த பிறகு மிகுந்த நம்பிக்கையுடன் படம் எடுக்கஆரம்பித்தேன், எனது படங்களை முகநுாலில் பார்த்துவிட்டு சீனியர்புகைப்படக்கலைஞர்கள் பலரும் பாராட்டியபிறகு சந்தோஷம் அதிகரித்தது.

பொதுவாக எனக்கு போர்ட்ரெயிட் எனப்படும் முகங்களை படம் எடுப்பது பிடிக்கும்அந்த முகங்களும் கேமிராவை பார்க்ககூடாது என்பதில் கவனமாக இருப்பேன்.மற்றபடி இயற்கை காட்சிகள், பறவைகளை படம் எடுப்பதும் பிடிக்கும், குளுமணாலி போய்வந்த பிறகு நிறைய பயணம் செய்து டிராவல் போட்டோகிராபி மீதுஆர்வம் அதிகரித்துள்ளது என்றவரிடம் அடுத்து நிறைய டிராவல் போட்டோகிராபிபடங்களை எதிர்பார்க்கலாம். நிறைய படங்கள் எடுக்கவேண்டும் என்றுஎண்ணியுள்ளேன் என்றார்.
-எல்.முருகராஜ்.

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Joseph Raja - Chennai,இந்தியா
23-மார்-201523:41:43 IST Report Abuse
Joseph Raja இனிய வாழ்த்துகள் எங்களது மீனா ராகேஷ் அவர்களுக்கு
Rate this:
Share this comment
Cancel
skshanmuganathan - Coimbatore,இந்தியா
20-மார்-201518:01:10 IST Report Abuse
skshanmuganathan கலைநயம் மற்றும் கவித்துவம் வாய்ந்த அருமையான படங்கள். வாழ்த்துக்கள் மீனா ராகேஷ்.
Rate this:
Share this comment
Cancel
P. SIV GOWRI - Chennai,இந்தியா
20-மார்-201515:56:37 IST Report Abuse
P. SIV GOWRI உங்கள் வெற்றி பயணம் தொடர வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X