வெறும் பட்டதாரிகள் தேவையில்லை- பேராசிரியர் க. பழனித்துரை -காந்தி கிராமிய பல்கலைக்கழகம்

Added : மார் 21, 2015 | கருத்துகள் (3) | |
Advertisement
நம் நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி, இன்று உலகக் கவனத்தை ஈர்த்துள்ளது. வெளிநாட்டில் வாழும் நம் இந்தியர்கள், தங்கள் துறைகளில் சாதிக்கும் சாதனைகள் இந்தியர்களின் மதிப்பை உலகத்தில் உயர்த்துகிறது. இந்த மரியாதையை தகுதிப்படுத்திக் கொள்ள என்ன செய்யப் போகிறோம் என்பது தான் இன்று நம் முன் உள்ள கேள்வி. மக்கள் தொகை பெருக்கம் என்பது நாட்டின் மிகப்பெரிய பிரச்னையாகப்
வெறும் பட்டதாரிகள் தேவையில்லை- பேராசிரியர் க. பழனித்துரை -காந்தி கிராமிய பல்கலைக்கழகம்

நம் நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி, இன்று உலகக் கவனத்தை ஈர்த்துள்ளது. வெளிநாட்டில் வாழும் நம் இந்தியர்கள், தங்கள் துறைகளில் சாதிக்கும் சாதனைகள் இந்தியர்களின் மதிப்பை உலகத்தில் உயர்த்துகிறது. இந்த மரியாதையை தகுதிப்படுத்திக் கொள்ள என்ன செய்யப் போகிறோம் என்பது தான் இன்று நம் முன் உள்ள கேள்வி.

மக்கள் தொகை பெருக்கம் என்பது நாட்டின் மிகப்பெரிய பிரச்னையாகப் பார்க்கப்பட்டது. ஆனால், அது இன்று செல்வமாக பார்க்கப்படுகிறது. இந்தியாவில் உள்ள, 35 வயதுக்கு உட்பட்ட, 65 கோடி இளைஞர்களை பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும் வகையில், தொழிற்திறன் மிக்கவர்களாக மாற்றி தொழிற்சாலைகளுக்கும், சேவைத்துறைக்கும், விவசாயத்திற்கும் அனுப்ப வேண்டும். ஐந்தாண்டு காலத்திற்கு, ஓர் இயக்கம் போல் செயல்பட்டால், இந்தியாவின் வீச்சு உலகம் வியக்கும் வண்ணம் இருக்கும். பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைந்த நாடுகளில், தொழில் கல்வியை நடைமுறைப்படுத்தி அதன் மூலம் பொருளாதாரத்தில் மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளனர். அந்தத் தொழில்கல்விக்கான கொள்கை மற்றும் சட்டம், அதை நடைமுறைப்படுத்த விரிவான திட்டச் செயல்பாடுகள் என அனைத்தும், அங்கு உள்ளன. நாம் இன்னும் இந்த தொழிற்கல்வியில் மிகவும் தாழ்நிலையில் இருக்கிறோம். அதே நேரத்தில், 65-லிருந்து, 70 கோடி இளைஞர்கள் இந்த நாட்டில் வலுவாக மக்கள்தொகையில் இருக்கின்றனர். இந்த மனித வளத்தை வைத்துப் பொருளாதாரத்தை மேம்படுத்த உள்ளது என்பதை அனுமானிக்க முடிகிறது. இந்த இளைஞர் கூட்டம் தொழில்கல்வி நோக்கி நகர்ந்து நாட்டுக்கும், உலகத்திற்கும் தேவையான தொழிற்கல்வியை பெற்றுவிட்டால், இந்தியா வின் வளர்ச்சியை ஒருவராலும் வீழ்த்த முடியாது.

மத்திய அரசு இதற்கான கொள்கையை வகுத்துள்ளது, அதற்கான பூர்வாங்க ஆலோசனை மற்றும் அமைப்புகளை உருவாக்கி உள்ளது. இந்தச் செயல்பாடுகளுக்கான நிதியத்தையும் உருவாக்கியுள்ளது. பதினேழு அமைச்சகங்கள் இந்தப் பணியை எப்படி செய்ய வேண்டும் என்ற திட்டத்தையும் உருவாக்கியுள்ளது. இவையனைத்தும் வழிகாட்டல்கள் தான். இதை நடைமுறைப்படுத்துவது என்பது மாநிலங்களின் கையில்.எனவே, ஒவ்வொரு மாநில அரசும் இந்த முக்கியத்துவத்தை உணர்ந்து, நடவடிக்கைகளை மத்திய அரசு நிர்ணயிக்கிற இலக்குகளை அடைய விழிப்புணர்வுடனும், ஆர்வத்துடனும் புரிந்து செயல்பட்டால், நாம் அடைய நினைக்கும் இலக்கை அடைந்து விடலாம்.இன்றைய சூழலில் நமக்குத் தேவையான பணியாட்களையே நம்மால் தயார் செய்ய முடியாத சூழலில் நாம் இருக்கிறோம். 50 கோடி பணியாட்கள் இந்திய நாட்டுக்கு மட்டும் தேவை. பணியாளர்களுக்குத் தேவையான தொழிற்கல்வியை, 2022ம் ஆண்டுக்குள் அளித்து அவர்களைத் தயார் செய்து விட வேண்டும். அதுதான் திட்ட இலக்கு.ஆனால், நம்மால் இன்றுள்ள கல்வி நிலையங்களாலும், பயிற்சி நிறுவனங்களாலும், 15 கோடி பணியாளர்களை மட்டும்தான் உருவாக்க முடியும் என்பதுதான் எதார்த்தமான உண்மை. இந்தச் சூழலில் நம் இளைஞர்களை எப்படி தொழிற்திறன் மிக்கவர்களாக ஆக்கப்போகிறோம் என்பதுதான் நம் முன் உள்ள மிகப்பெரிய சவால்.

மேற்கத்திய நாடுகளில் நடைமுறைப்படுத்தி வெற்றி கண்ட கல்வித்திட்டத்தை, நம் கல்விக்கூடங்களில் நடைமுறைப்படுத்தினாலே, மிகப்பெரிய அளவில் வெற்றியைப் பெறமுடியும். இதன் மூலம் நம் பொருள் உற்பத்தித்திறன் கூடும், உற்பத்தி செய்யப்படும் பொருள்களின் தரம் கூடும், நம் தொழிலாளர்களின் சம்பளம் உயரும், வறுமை குறையும், வாழ்க்கைத் தரம் உயரும். சிறு குறு தொழில்களின் வருமானமும் லாபமும் கூடும். இவை எல்லாவற்றிற்கும் மேலாக நம் நாட்டில் வேலை இல்லாத் திண்டாட்டம் குறையும். இதன் மூலம் சமூகப்பிரச்சனைகள் குறையும்.

தற்போதைய நம் கல்வித் திட்டத்தில் உள்ள குறைபாடுகள், நம் இளைஞர்களை தொழிற்திறன் உள்ளவர்களாக ஆக்க முடியவில்லை. இதுவரை நாம் பட்டதாரிகளை உயர் கல்விச்சாலைகள் மூலம் உருவாக்கி வந்தோம். ஆனால் இன்று நமக்குத் தேவை பட்டதாரிகள் அல்ல, தொழிற்திறன் கூட்டப்பட்ட இளைஞர்கள். எனவே, நம் கல்விக்கூடங்களில் பட்டதாரிகளை உருவாக்கும் பணி என்பதை இனிமேலும் நீடிக்க அனுமதிக்க முடியாது. சென்ற அரசு இதற்கான ஆயத்தப் பணிகளைச் செய்தது. தொழிற்கல்விக்கான கொள்கை, நடைமுறைப்படுத்த கட்டமைப்பு என அனைத்து அடிப்படைத் தயாரிப்பையும் செய்து வைத்துள்ளது. இன்று உள்ள மத்திய அரசு அதை முனைப்போடு செயல்படுத்த முனைகிறது. ஆனால், அதற்குரிய பலன் எப்போது கிட்டும் என்றால், மாநில அரசு தொய்வில்லாமல் இயக்கம்போல் செயல்படும் போது தான் என்பதை உணர்ந்து மாநில அரசு செயல்பட வேண்டும். அதுதான் இன்றைய பிரதான தேவை.
gpalanithurai@gmail.com

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறதுவாசகர் கருத்து (3)

Maddy - bangalore,இந்தியா
25-மார்-201515:28:26 IST Report Abuse
Maddy திறமை உள்ள பட்டதாரிகள் ஜாதி என்னும் மாய போர்வையால் வான் ஊர்தி ஏறி வெளிநாடு செல்கிறார்கள். அவர்களின் அறிவுத்திறன் அந்நியர்களின் ஆளுமைக்கு கீழ் இனிதே நடைபெறுகிறது...
Rate this:
N.K - bochum,ஜெர்மனி
26-ஏப்-201504:54:43 IST Report Abuse
N.Kதிறமை உள்ளவர்கள், வாக்கு வங்கி அரசியல் காரணமாக , ஒதுக்கீடு முறையினால், வெளிநாடிகளுக்கு ஒதுக்கப்படுகிறார்கள்.> ஐ ஐ டி , என் ஐ டி , மற்ற அரசுத்தேர்வுகள் போன்றவற்றில் பொது பிரிவு மாணவன் , பிறரை முந்தி இடம் பிடிக்கத்தான் நினைக்கிறான் .. ஆனால் அதை விட சுலபமாக வெளிநாடுகளில் அவனுக்கு இடம் கிடைத்துவிடுகிறது.. அவன் திறமைக்கு மரியாதையும் , நல்ல அங்கீகாரமும் கிடைக்கிறது. . அதற்காக இட ஒதுக்கீடு வேண்டாம் என்று சொல்லவில்லை . ஜாதி அடிப்படையில் அது கூடாது. .( திறமையுள்ளவர்கள் எந்த ஜாதியாக இருந்தாலும் வெளி நாடுகளில் ஒரே மதிப்பு தான்.) . ஒரு மாணவனுக்கு , அவன் படிக்கும் இடத்தில் கிடைக்கும்/கிடைத்த வசதிகள், நகரத்தில் இருந்து தொலைவில் உள்ள கிராமங்கள் , தகவல் தொழில்நுட்பம் வளர்ச்சி அடையாத மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு தரலாம். . பொதுத்தேர்வுகளில் அனைவருக்கும் கட் ஆப் சமமாக இருக்க வேண்டும். . 10 பேர் தேவை படும் இடத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் இருந்து 2 பேர் இருந்தே ஆகா வேண்டும் என்பதற்காக , அதில் ஆர்வமோ , தகுதியோ இல்லாதவர்களை திணிப்பதனால் தரமும் கெடும், தகுதி உள்ளவர் வாய்ப்பும் பறி போகும். அனைவரும் கலந்து கொள்ளும் ஓட்டப்பந்தயத்தில் முதல் மூன்று இடங்களிலும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் வந்தால் , அதற்காக பிறருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது என்று அர்த்தமா, இல்லை மற்றவர்கள் வரக்கூடாது என்று அர்த்தமா.. . அதற்காக 7 ஆம் இடம் பிடித்த வேறு சமூகத்தை சேர்ந்தவருக்கு 3 ஆம் இடம் கொடுத்து, 3 ஆம் இடம் பிடித்தவனை கழற்றி விடுதல் ஏற்றுகொள்ளக்கூடியதா? பசித்தவனுக்கு மீன் பிடிக்க கற்று கொடுங்கள்... இட ஒதுக்கீடு அளித்து உணவுக்காக அவனை பிறரையே சார்ந்திருக்க வைக்காதீர்கள் ....
Rate this:
Cancel
Manian - Chennai,இந்தியா
22-மார்-201501:43:34 IST Report Abuse
Manian க. பழனித்துரை அவர்களது கருத்துக்கள் அரசாங்கமும் அறியும். ஆனால் ஜாதிகள் ஆதிக்கம், லஞ்சம், அறிஞ்சர்கள் என்று கூரிக்கொள்வோர் மனதில் தாழ்வு மனப்பன்மை போன்ற காரங்கள் உள்ளன. முதலில் அவற்ரை சிறந்த மேல் நாட்டில் வசிக்கும் இந்தியா முன்னேறவேண்டும் என்ற தபத்டோடு உள்ள இந்தியர்கள் மூலம் ஆராச்சி செய்ய வேண்டும். அதன் பின், முதுகெலும்புள்ள நேர்மையான அரசாங்கம் அதே செயல் படுத்த வேண்டும். மற்றும் பிரிடிஷ் கல்வி முறையும் மாறவேண்டும். ஐ ஐ டி களில் இந்த மாற்றங்கள் இருபதலேயே அவை இன்று பெருமெயொடு உள்ளன. மேல் மட்டம் வருமுன் , எல்லா குழந்தைகளுக்கும் ராம கிருஷன மடம், ஓய்வூதியம் பெரும் நீதிபதிகள், சமூக ஆர்வலர்கள் ஒன்று பட்டு அவற்றின் தலைமையில் பால பள்ளி முதல் 12ம் வகுப்பு வரை நேர்மை , திறமை, தன மேல் நம்பிக்கை , மாணவர்கள் மேல் அன்பு, சிறந்த கல்வி உடையவர்களே மேட்டுமே ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும். நிறாந்த உதியமும் கொடுக்க வேண்டும். பின்லாந்தில் இது இப்போது நடை முறைகள் உள்ளது. இதன் பயனால் மாணவர்களின் சிறப்பும் அதிகரித்துள்ளது. இது நடபெறவேண்டுமானல் எமர்ஜென்சியும் வரவேண்டும். இல்லையேல் திரு பழனி துறையின் எண்ணங்கள் வெறும் விருப்பமாகவே இருக்கும். ஆனால் அவர் தன மனதில் உள்ளதை சொல்ல அவருக்கு எல்லா உரிமைகளும் உள்ளன. பயன் உண்டா என்பது தான் கேள்வி? அதற்கும் அவர் விடை அளித்தால் நம் நாடு அவருக்கு தலை வணங்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X