கூடலூர் : கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள கட்டப்பனை அருகில் உப்புதுறை, மூலமட்டம் ஆகிய பகுதிகளில் நேற்று அதிகாலை 5.50 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 2.9 என இடுக்கி அணையில் பதிவாகியிருந்தது. இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. நிலநடுக்கம் ஏற்பட்ட நேரத்தில் சத்தம் அதிகமாக இருந்ததால் பொதுமக்கள் பயந்து வீட்டை விட்டு வெளியில் ஓடினர். கடந்த ஆண்டு இடுக்கி மாவட்டத்தில் 2.4 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது.