திருத்தணி : திருத்தணி அருகே பைக் மீது லாரி மோதியதில் இருவர் பலியானார்கள். சென்னை வெற்றிநகரை சேர்ந்தவர் கண்ணன் மகன் அன்னப்பன்(28). சென்னை அருகே உள்ள முனுசாமி நகரை சேர்ந்தவர் விஜயகுமார் மகன் கண்ணன்(24). இவரது உறவினர் ஆருகே பேட்டையை சேர்ந்தவர் சித்திக். அன்னப்பனும், கண்ணனும் சித்திக்கை பார்ப்பதற்காக சென்னையில் இருந்து திருத்தணி வழியாக ஆர் கே பேட்டைக்கு சென்றனர். அப்போது திருத்தணி அருகே வீரகுப்பம் என்ற இடத்தில் திருத்தணியிலிருந்து சோழிங்கநல்லூர் நோக்கி சென்ற லாரி பைக் மீது மோதியது. இந்த விபத்தில் காயமடைந்த அன்னப்பனும், கண்ணனும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு இருவரும் சிகிச்சை பலனின்றி பலியானார்கள். சம்பவம் குறித்து திருத்தணி போலீசார் விசாரித்து வருகின்றனர்.