ஆஸ்பத்திரியல்ல ...காந்திமதிநாதனின் ஆஸ்ரமம்...
உருக்கி நோய் நீக்கி நிலையம் என்றால் நிறைய பேருக்கு புரியாது காச நோய் ஆஸ்பத்திரி என்றால் சட்டென புரிந்துவிடும்.
தமிழகத்தின் முக முக்கியமான ஊர்களில் உள்ளது
மதுரை உள்பட ஒன்பது தென் மாவட்டங்களுக்கான காச நோய் ஆஸ்பத்திரி மதுரை தோப்பூரில் உள்ளது
காற்றில்
பரவக்கூடிய தொற்று நோய் என்பதால் மக்கள் நடமாட்டம் இல்லாத காட்டுக்குள்
இந்த ஆஸ்பத்திரி செயல்பட்டு வருவதால் காட்டாஸ்பத்திரி என்று அழைப்பவர்களும்
உண்டு.
மதுரை அரசு ஆஸ்பத்திரியின் காசநோய் பிரிவிற்கு
வரக்கூடிய நோயாளிகளில் தீவிர சிகிச்சை தேவைப்படுபவர்களை தோப்பூரில் உள்ள
இந்த ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைப்பார்கள்.
இந்த
ஆஸ்பத்திரிக்கு வந்த நோயாளிகளை உடனிருந்து கவனித்துக்கொள்ள உற்ற உறவினர்களே
முன்வராத சூழலில் நோய் தின்றது போக மீதி உடம்பை தனிமையும் வெறுமையும்
தின்று விரைவில் இறந்து போவார்கள்.
அரசாங்க பஸ்கூட
அவுட்டரில் இறக்கிவிட்டுவிட்டு சிட்டாக பறந்துவிடுமே தவிர ஸ்டாப்பிங்
இருந்தால் கூட ஆஸ்பத்திரிக்குள் வருவது கிடையாது.
ஆஸ்பத்திரியை
சுற்றி புதர் மண்டிக்கிடக்கும், கண்களில் மட்டும் உயிரை சுமந்து கொண்டு
எப்போது சாவோம் என்ற நோயாளிகள் நடைபிணமாக இருப்பார்கள்,ஊழியர்களும்
மருத்துவர்களும் வந்த வேகத்தில் வேறு இடம் மாறி சென்றுவிடுவர்.
இப்படி
பெயருக்கேற்றாற் போல காட்டாஸ்பத்திரியாக பெயருக்கு இயங்கிவந்த தோப்பூர்
காசநோய் ஆஸ்பத்திரிக்கு நிலைய மருத்துவ அலுவலர் மற்றும் கண்காணிப்பாளராக
காந்திமதிநாதன் நியமிக்கப்பட்டார்.
அதுவரை கதிர்இயக்க
சிகிச்சை நிபுணராக தலைமை மருத்துவமனைகளில் செயல்பட்டு வந்தவருக்கு தோப்பூர்
காசநோய் ஆஸ்பத்திரியில் நிலவிவந்த சூழல் பெரிதும் வேதனையை தந்தது.
ஒன்று
இதிலிருந்து நாம் மீளவேண்டும் அல்லது இந்த ஆஸ்பத்திரியை இதன் அவல நிலையில்
இருந்து மீட்டு எடுக்கவேண்டும்.முதல் விஷயத்தை யார் வேண்டுமானாலும்
செய்யலாம் பொதுவாக அதைத்தான் யாரும் செய்வார்கள் ஆனால் இரண்டாவது விஷயத்தை
யாரும் நினைத்துகூட பார்க்கமாட்டார்கள் அதை ஏன் நாம் எடுத்து செய்யக்கூடாது
என்று எண்ணினார்,களத்தில் இறங்கினார்.
முதலில் நோயாளிகளோடு நீண்ட
நேரம் பேசி அவர்களுடனே இருந்து உங்களின் மருத்துவன் மட்டுமல்ல உங்களின்
நண்பன் உங்களின் சகோதரன் என்பதை உணர்த்தினார்.சுத்தம் சுகாதாரமே முக்கியம்
என்பதை வலியுறுத்தினார்.
ஆஸ்பத்திரி கட்டிடத்தில் மண்டிக்கிடந்த
குப்பை கூளங்களை சுத்தம் செய்து இடிபாடுகளை சீரமைத்து ஆண்டுக்கணக்கில்
வெள்ளை அடிக்காமல் கிடந்த சுவர்களுக்கு வெள்ளை அடித்ததும் கட்டிடத்திற்கு
கம்பீரமும் நோயாளிகளுக்கு நம்பிக்கையும் வந்தது.
ஆஸ்பத்திரியை
சுற்றி இருந்த புதர்கள் செடி கொடிகளை வெட்டி அப்புறப்படுத்திவிட்டு சுமார்
2ஆயிரத்து500 மரக்கன்றுகளை நட்டு அதனை வளர்க்கும் பொறுப்பை நோயாளிகளிடம்
கொடுத்தார். இரண்டு வருடங்களில் இப்போது அந்த மரங்கள் எல்லாம் வளர்ந்து
இந்த இடத்தையே பசுஞ்சோலையாக்கியுள்ளது.
சுத்தமும் சுகாதராமும்
எவ்வளவு முக்கியம் என்பதை அனைவருக்கும் உணர்த்தியபிறகு நோயாளிகள் எந்த
இடத்தையும் அசுத்தப்படுத்துவது கிடையாது.மருந்து மாத்திரைகளைவிட
மனநிம்மதிதான் அவர்களை விரைவில் குணப்படுத்தும் என்பதால்
டி.வி.,எப்.எம்.ரேடியோ,கேரம் போர்டு,நுாலகம்,பெண்களுக்கு
தாயம்,பல்லாங்குழி என்று எல்லாவிதமான பொழுபோக்கு விஷயங்களும் ஏற்படுத்தி
கொடுத்துள்ளார்.இவர்களுக்கு முடிவெட்டிக்கொள்ள தனி சலுானும் இந்த
வளாகத்திற்கு உள்ளேயே ஏற்படுத்தப்பட்டு உள்ளது.குடிப்பதற்கு 24 மணிநேர
ஆர்வோ பிளாண்ட் போடப்பட்டு உள்ளது.
இந்த ஆஸ்பத்திரிக்கு இதை எல்லாம்
செய்து கொடுங்கள் என்று மேலே உள்ள அதிகாரிகளிடம் கேட்கும் போது தயங்காமல்
மட்டுமின்றி கூடுதலாகவும் நிதி ஒதுக்கி செய்து கொடுத்ததுடன் என்னை
தட்டியும் கொடுத்து உற்சாகப்படுத்திவருகின்றனர் சுகாதாரத்துறை செயலாளர்
ராதாகிருஷ்ணன் முதல் இப்போதைய டீன் ரேவதி கயிலைராஜன் அனைவருமே அந்தவகையில்
நன்றிக்கு உரியவர்கள்.
நாங்கள் இந்த காசநோய் ஆஸ்பத்திரியை
வைத்திருக்கும் நிலையை பார்த்துவிட்டு கப்பலுார் பென்குயின் அப்பாரல்ஸ்
போன்ற நிறுவனங்கள் நோயாளிகளுக்கு தேவையான போர்வை முதல் ஆர்வோ பிளான்ட் வரை
நன்கொடையாக கொடுத்து வருகின்றன.
முன்பெல்லாம் இங்கு சேரும்
நோயாளிகள் பெரும்பாலும் பிணமாகத்தான் வீடு திரும்புவார்கள் என்று
சொல்வார்கள் ஆனால் எங்களது அன்பு, அக்கறை, சுற்றுச்சுழல் மற்றும் நவீன
மருத்துவம் காரணமாக தற்போது நோய் குணமாகி பலர் நலமுடன் வீடுதிரும்பி
வருகின்றனர்.
குறைந்த பட்சமாக இவர்கள் இருக்கும் ஆறு மாதத்தில்
அவர்களுக்கு தேவையான மருந்து மாத்திரையுடன் நேரம் தவறாமல் சாப்பாடு தருவது,
கூட இருந்தே பார்த்துக்கொள்வது போன்ற விஷயங்களால் நான்கு மாதங்களிலேயே
குணமாகிவிடுகின்றனர்.
முன்பு கூட இருக்க மறுத்த நோயாளிகளின்
உறவினர்கள் பலர் இப்போது கூட இருந்து கவனித்துக்கொள்கின்றனர் நகர பஸ்கள்
உள்ளே வந்து போகிறது ஆண்டு விழா நடத்தி பிரபலங்களை அழைத்து
உற்சாகப்படுத்துகிறோம்.
இத்தனை விஷயங்கள் இங்கு நடக்கிறது என்றால்
அதற்கு இங்குள்ள மருத்துவர்களும்,செவிலியர்களும், ஊழியர்களும்தான் மிக
முக்கிய காரணம் அவர்களுக்குதான் நான் நன்றி சொல்ல நிறைய கடமைப்பட்டுள்ளேன்.
இன்னும்
ஷட்டில்காக் மைதானம், தியான மையம் அமைக்கவேண்டும். ஆண்கள் மற்றும் பெண்
நோயாளிகளுக்கு தெரிந்த கூடைமுடைதல் போன்ற கைவினைப்பொருட்களை
தயாரிக்கவைத்து அவர்களுக்கு வருமானம் பெற வழிவகுக்க வேண்டும்.
என்னைப்பொறுத்தவரை
இது ஆஸ்பத்திரி அல்ல ஆஸ்ரமம் இந்த ஆஸ்ரமம் வளர இன்னும் இன்னும்
உழைக்கவேண்டும் என்று சொல்லிய டாக்டர் காந்திமதிநாதனை வாழ்த்துவதோடு
நின்றுவிடாமல் கையெடுத்து வணங்கிவிட்டு விடைபெற்றேன்.
நீங்களும் வாழ்த்தவேண்டும் என்றால் தொடர்புகொள்ளவும்-9442091965.
-எல்.முருகராஜ்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE