சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குடிநீர் தொட்டியில் இறந்து கிடந்த குரங்கு: காஞ்சிபுரம் அருகே பரபரப்பு

Added : ஜூன் 04, 2010
Share
Advertisement

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அருகே குடிநீர் தொட்டியில் குரங்கு இறந்து கிடந்தது.காஞ்சிபுரத்திலிருந்து7 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது ஐயங்கார் குளம் ஊராட்சி.
ஐயங்கார்குளம் கிராம மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக, பல ஆண்டுகளுக்கு முன் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டி கட்டப்பட்டது.
காலனிப் பகுதிக்கு குடிநீர் வழங்க 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டி, ஜெ.ஜெ.நகர் பகுதிக்கு குடிநீர் வழங்க 20 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டி கட்டப்பட்டுள்ளது.ஐயங்கார்குளம் கிராமத் தில் உள்ள குடிநீர் தொட்டியிலிருந்து, பாலாற்று குடிநீர் வழங்கப்படுகிறது.இத்தொட்டியிலிருந்து வந்த குடிநீரில், நேற்றுமுன்தினம் துர்நாற்றம் வீசியது. இதைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.ஊராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். நேற்று காலை பம்ப் ஆப் ரேட்டர் குடிநீர் தொட்டி மீது ஏறி பிளீச்சிங் பவுடர் போட்டுள்ளார். பின், மக்க ளிடம் "தொட்டி நன் றாக உள்ளது. பிரச்னை இல்லை' எனக் கூறியுள்ளார்.குடிநீரில் துர்நாற்றம் அதிகரித்தது. எனவே ஊராட்சி துணைத் தலைவர் தேன்மொழிசுப்ரமணி, வார்டு உறுப்பினர்கள் தணிகாசலம், உமாபதி ஆகியோர் குடிநீர் தொட்டி மீது ஏறி பார்த்துள்ளனர்.அப்போது தண்ணீரில் குரங்கு இறந்து கிடப் பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத் தனர்.


அதன்பேரில் சுகாதார மேற்பார்வையாளர் இளங்கோவன், கீழ்பெரமநல்லூர் டாக்டர் பிரசன்னா ஆகியோர் தலைமையில் மருத்துவக் குழுவினர் விரைந்து வந்தனர்.
குடிநீர் தொட்டியில் இறந்து கிடந்த குரங்கின் உடலை பூமியில் குழி தோண்டி புதைத்தனர்.குடிநீர் தொட்டியிலிருந்த தண்ணீரை முழுமை யாக வெளியேற்றினர்.பின்னர் குடிநீர் தொட் டியை சுத்தம் செய்யும் பணியை துவக்கினர். மருத்துவக் குழுவினர் வீடு வீடாகச் சென்று குரங்கு இறந்து கிடந்த தண்ணீரை குடித்ததால், மக்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட் டுள்ளதா எனப் பரிசோதித் தனர். நோய் தடுப்பு மாத் திரைகளும் வழங்கினர்.சுகாதார மேற்பார்வையாளர் இளங்கோவன் கூறியதாவது:குடிநீர் தொட்டிக்கு வரும் குடிநீர் குழாய் இணைப்பை துண்டித்துள் ளோம். வீடுகளுக்கு நேரடியாக தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்யும்படி கூறியுள்ளோம். குடிநீர் தொட் டியை தொடர்ந்து மூன்று நாட்களுக்கு சுத்தம் செய் வோம். அதன்பின் தண்ணீர் ஏற்றுவோம்.அந்த தண்ணீரை பரிசோதனைக்கு அனுப்பி முடிவு வந்த பின்னரே குடிநீர் தொட்டியிலிருந்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.ஊராட்சி வார்டு உறுப் பினர் தணிகாசலம் கூறுகையில், "குடிநீர் தொட்டியைப் பராமரிக்க வேண்டும் என, ஊராட்சியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் தீர்மானம் போடப்பட்டது.ஆனால் பணிகள் நடைபெறவில்லை. மூடியில் லாததால் குரங்கு விழுந் துள்ளது. குடிநீர் தொட்டியை முறையாக பராமரிக்க வேண்டும்' என்றார்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X