புதுசா வாங்கலாம் காரு... லஞ்சத்துக்கு லோன் தர்றது யாரு?| Dinamalar

புதுசா வாங்கலாம் காரு... லஞ்சத்துக்கு 'லோன்' தர்றது யாரு?

Added : ஏப் 01, 2015
Share
கண்களை மூடி, ஆழ்நிலை தியானத்தில் இருந்தபோது, 'வாட்ஸ் ஆப்'பில் 'மெசேஜ்' வந்து விழும் சத்தம் சன்னமாய் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது. மொபைலை எடுத்து, 'மொபைல் டேட்டா'வை 'ஆப்' செய்து விட்டு, தியானத்தில் மூழ்கினாள் சித்ரா.மூச்சுப் பயிற்சியை முடித்து விட்டு, 'வாட்ஸ் ஆப்'பை திறந்து பார்த்தால்... மித்ராவிடமிருந்து, ஏழெட்டு 'மெசேஜ்'கள் வந்து விழுந்திருந்தன.
புதுசா வாங்கலாம் காரு... லஞ்சத்துக்கு 'லோன்' தர்றது யாரு?

கண்களை மூடி, ஆழ்நிலை தியானத்தில் இருந்தபோது, 'வாட்ஸ் ஆப்'பில் 'மெசேஜ்' வந்து விழும் சத்தம் சன்னமாய் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது. மொபைலை எடுத்து, 'மொபைல் டேட்டா'வை 'ஆப்' செய்து விட்டு, தியானத்தில் மூழ்கினாள் சித்ரா.மூச்சுப் பயிற்சியை முடித்து விட்டு, 'வாட்ஸ் ஆப்'பை திறந்து பார்த்தால்... மித்ராவிடமிருந்து, ஏழெட்டு 'மெசேஜ்'கள் வந்து விழுந்திருந்தன. எல்லாமே, பரபர செய்திகள். மண் பானைத் தண்ணீரை, ரசித்துக் குடித்துக் கொண்டிருந்தபோது, ஒலித்தது மொபைல். நினைத்தது போலவே... அழைத்தது மித்ரா.''என்னக்கா...மூச்சுப் பயிற்சி முடிச்சிட்டு, 'வாட்டர் தெரபி' பண்ணிட்டு இருக்கியா?''''ஹேய்...என்னடி...கார்ப்பரேஷன்ல 'வேவு' பாக்கிறதுக்கு ஆள் வச்சிருக்கிறது மாதிரி, என் வீட்லயும் ஏதாவது ஆளு வச்சு உளவு பாக்குறியா?'' என்றாள் சித்ரா.''நீ யாரைச் சொல்றேன்னு எனக்குத் தெரியுது...ஆனா, நீ நினைக்கிறது மாதிரி, அவுங்க இப்ப உளவு பாக்கிற வேலை மட்டும் பாக்கிறதில்லை. ஒழுங்கா வேலை பாக்கிற பல பேரை, கார்ப்பரேஷன்ல இருந்து துரத்துற வேலையத்தான் பாக்குறாங்க.''''என்ன மித்து சொல்ற...அவுங்களுக்கு என்ன 'அவ்ளோ' பவர் இருக்கா?''''இல்லாமலா...கார்ப்பரேஷன்ல இருந்த ஒரே ஒரு நல்ல ஏ.சி.,யையும், யார்ட்டயும் கேட்காம 'ரிலீவ்' பண்ணிருப்பாங்க?'' என்றாள் மித்ரா.''வரி பாக்கிக்காக, சிங்காநல்லுார்ல 4 ஸ்டார் ஓட்டல் முன்னாடி, குப்பைத்தொட்டி வச்சதை, எடுக்கக்கூடாதுன்னு இவுங்க சொன்னாங்களாம். மீறி எடுத்ததால, அவரை மாத்துனாங்கன்னு கேள்விப்பட்டேன்.'' என்றாள் சித்ரா.''மேட்டர் அது தான்...ஆனா, அதுல நடந்த அரசியல் வேற. பொள்ளாச்சி ஆளும்கட்சி வி.ஐ.பி., 'ரெகமண்ட்' பண்ணார்னு, அதை எடுக்கச் சொன்னதே மேயரு தான். இவுங்க, 'யாரைக் கேட்டு எடுத்தீங்க'ன்னு திட்டிருக்காங்க. ஏ.சி., கொதிச்சுப் போய், 'என்னிய 'ரிலீவ்' பண்ணிடுங்க'ன்னு சொல்லிருக்காரு.''''ஓ! அதான்... ஆள் வராமலே 'ரிலீவ்' பண்ணிட்டாங்களா?,''''அவரை மட்டுமா? ஆதார் அட்டைக்கு பொறுப்பா, ஒரு 'ரிட்டயர்டு' ஆபீசரைப் போட்ருந்தாங்க. நல்லா வேலை தெரிஞ்சவரு. அவர்ட்ட இவுங்க ஃபிரண்ட் ஒருத்தரை அறிமுகப்படுத்தி, 'இவருக்கு உடனே ஆதார் எடுத்துக் கொடுங்க'ன்னு சொல்லிருக்காங்க.''''அதெல்லாம் உடனே ஆகுற வேலையில்லையே!''''கரெக்ட்க்கா! கோயம்புத்துார் நார்த் தாலுகா ஆபீசுல, அதிகாரிகளுக்கு ஆதார் அட்டை எடுக்கிற சென்டர் ஒண்ணு போட்ருக்காங்க. அவுங்க ஃபிரண்டோட 'டீட்டெயில்'சை, அங்க பதிவு பண்ணுன பிறகு, 'போட்டோ எடுக்க, சில நாள் கழிச்சுக் கூப்பிடுறேன்'னு சொல்லிருக்காரு.'' என்றாள் மித்ரா.''அப்புறம் என்ன பிரச்னை?,'' என்றாள் சித்ரா.''ஆனா, உடனே கூப்பிடலைன்னு, அந்தம்மா, இந்தம்மாட்ட 'போட்டு'க் கொடுத்துட்டாங்க. உடனே, அந்த ரிட்டயர்டு ஆபீசரைக் கூப்பிட்டு, 'ஏன் இப்பிடி என் உயிரை வாங்குறீங்க'ன்னு மேடம் கேட்ருக்காங்க. அதுக்கு அவரு, 'நான் வேலை பாக்கத்தான் வந்திருக்கேன். உங்க உயிரை வாங்க வரலை'ன்னு பதில் சொல்லிருக்காரு. உடனே, 'என்னையவே எதிர்த்துப் பேசுறீங்களா'ன்னு கேட்டு அவரையும் வீட்டுக்கு அனுப்பிட்டாங்க.''''என்ன மித்து....! அவுங்களுக்கென்ன 'வானளாவிய' அதிகாரமா கொடுத்திருக்காங்க?''''தெரியலை. ஆனா, பெரிய ஆபீசரே, இவுங்களுக்குப் பயப்படுறாரு.'' என்றாள் மித்ரா.''மடியில கனமில்லைன்னா, வழியில பயமிருக்காது மித்து...சின்ன வயசுலயே, ஏன் இப்பிடி பேரைக் கெடுத்துக்கிறாங்கன்னு தெரியலை.'' என்றாள் சித்ரா.''ஆமாக்கா...நானும் கேள்விப்பட்ட சில விஷயங்கள், சரியாத் தெரியலை. லேடி ஏ.இ.இ., ஒருத்தவுங்க மூலமா கான்ட்ராக்ட் கமிஷனும், 'டவுன் பிளானிங்'ல முக்கிய ஆபீசர் மூலமா கட்டிட கலெக்ஷனும் மேல போகுதாம்.'' என்றாள் மித்ரா.''அவரைத்தான், 'ரிலீவ்' பண்ணிட்டாங்களே.''''ஆமாக்கா...அவர் தான், 'ரெசிடென்ஸி'யல் பில்டிங்னா, சதுர அடிக்கு 10 ரூபா, கமர்சியல் பில்டிங்னா 20 ரூபா வாங்கிட்டு இருந்தாரு. மேயர் 'வார்ன்' பண்ணி, கேக்கலைங்கிறதால, 'ரிலீவ்' பண்ணச் சொல்லிருக்காரு. ஆனா, மறுபடியும் 'விஐபி'யைப் பிடிச்சு, இங்கேயே இருக்க முயற்சி பண்றாராம்.'' என்றாள் மித்ரா.''மித்து...'சஸ்பென்ட்' ஆன சுமார் மூஞ்சி குமாரும், அதே விஐபி மூலமா, மறுபடி வரப்பாக்குறாராம். ஒழுங்கா 'ரிட்டயர்டு' ஆவுறதுக்கு, ரெண்டு கோடி ரூபா கேட்டு, பேரம் நடக்குதாம்.'' என்றாள் சித்ரா.''...க்கா! எனக்கு தலை சுத்துது. ரெண்டு கோடி ரூபா பேரமா?''''அவரும் 25 லட்சம் 'டோக்கன்' அட்வான்ஸ் கொடுத்துட்டு, மீதிக்கு பேரம் பேசிட்டு இருக்காராம். ஆனா, இன்னொரு இன்ஜினியர், 40 லட்சம் கொடுத்துட்டு, தன்னோட 'சஸ்பென்ட்' ரேகையை அழிச்சிட்டு வந்துட்டாரு. பல கோடி ரூபா சொத்து சேர்த்துட்டு, சமீபத்துல 'ரிட்டயர்டு' ஆனாரே, ஒரு இன்ஜினியர். அவரை ஏன் 'சஸ்பென்ட்' பண்ணாம விட்டாங்க தெரியுமா?''''என்ன...அவரும் ஏதாவது ஒரு பெரிய தொகையை, அன்புக்காணிக்கையா கொடுத்திருப்பாரு.'' என்றாள் மித்ரா.''அது கொடுத்ததெல்லாம் போக...அவர்ட்ட ஒரு 'ப்ளாங்க் செக்'ல கையெழுத்து வாங்கி வச்சிருக்காங்க. அவரோட 'ரிட்டயர்டுமென்ட் பெனிஃபிட்' எல்லாம், இவுங்களே எடுத்துக்கப் போறாங்க.'' என்றாள் சித்ரா.''சரி விடு....கார்ப்பரேஷன்னாலே குப்பை தான். அந்த நார்த் தாலுகா ஆபீஸ்ல, ஆபீசர்களுக்கான ஆதார் சென்டர்ல என்ன நடக்குது தெரியுமா? அங்க, வேற ஆளுங்களையும் கூப்பிட்டு வந்து, படமெடுக்கிறாங்க...!''''அது நல்ல விஷயம் தான...!''''ஆனா, சாதாரண ஆளுகளுக்கு அங்க எடுக்கிறதில்லை. காசிருக்கிறவுங்களைக் கூப்பிட்டு வந்து, போட்டோ எடுத்து, வலுவா 'பில்' போடுறாங்க.'' என்றாள் மித்ரா.''மித்து...'பில்'னு சொன்னியே. ஆர்.டி.ஓ., ஆபீஸ்ல, ஏப்ரல் 1லயிருந்து, 'பில்' ரேட் ஏறுதாம்.'' என்றாள் சித்ரா.''அப்பிடியெல்லாம் அறிவிப்பு வரலையே...!''''இது 'லஞ்ச ரேட்'டு. இதுவரைக்கும், புது கார் ரிஜிஸ்ட்ரேஷனுக்கு, ஆர்.டி.ஓ.,க்கு 300 ரூபா தான் லஞ்சம். ஆனா, வர்ற ஏப்ரல் 1லயிருந்து, கார் 'ரேட்'டுக்கேத்தது மாதிரி, 'லஞ்ச ரேட்' ஏறுதாம். பத்து லட்ச ரூபாய்க்குள்ள இருக்கிற காரா இருந்தா, ஆயிரம் ரூபா. அதுக்கு மேலன்னா...1,500 ரூபா.''''அய்யோ...ஒரு காருக்கு, 300 ரூபான்னு வச்சாலே, ஒரு நாளுக்கு 6 ஆயிரம் ரூபா கிடைக்கும். இப்போ, 1,000, 1,500ன்னா...எவ்ளோ வசூலு? டூவீலர் ரிஜிஸ்ட்ரேஷன் காசெல்லாம் சேர்த்தா...!'' என்று கண்களைச் செருகிக் காட்டினாள் மித்ரா.''அது மட்டுமில்ல மித்து! நம்ம ஊர்லயிருக்கிற 'எமிஷன் சென்டர்'கள்ல, மூணு மடங்கு அதிகமா வாங்குறாங்க. அதுவும், ஆர்.டி.ஓ.,க்களுக்கு தான் போகுது. இதெல்லாம் முடிவு பண்றது, ஏர்போர்ஸ் ஏரியால இருக்கிற ஒரு பிரேக் இன்ஸ்பெக்டர் தான். கரூர் வி.ஐ.பி.,க்கு சொந்தக்காரரான அவரு தான், இங்க 'ஆக்டிங் டீடிசி'யாம்.'' என்றாள் சித்ரா.''எல்லா டிபாட்மென்ட் வி.ஐ.பி.,க்கும், இங்க வசூலுக்கு ஆளு இருக்குக்கா. கேபிள் டிவிகாரங்க சரியா மாமூல் தர்றதில்லைன்னு, உடுமலை கேபிள் வி.ஐ.பி.,யோட பினாமி ஒருத்தரு, சிட்டிக்குள்ள நேரடியா இறங்கி, கேபிள் காசை வசூல் பண்ணிட்டு இருக்காராம்.''''நம்ம ஊர்ல நல்லது எதுவுமே நடக்கிறதில்லையா மித்து?''''...ம்ம்....நடக்குது...சிட்டியில நம்ம போலீஸ் ஸ்பெஷல் டீம், கஞ்சா, விபச்சாரம்னு பல கேஸ்களைப் பிடிக்குது. போன வாரத்துல மட்டும், நாலு இடத்துல விபச்சார கும்பலைப் பிடிச்சிருக்காங்க. ஆனா...!'' என்று இழுத்தாள் மித்ரா.''ஏன்டி இழுக்கிற...?'' என்றாள் சித்ரா.''அந்த 'டீம்'ல இருக்கிற நேர்மையான இன்ஸ்பெக்டரை, மாமூல் போலீசெல்லாம் வாய்க்கு வந்தபடி தாறுமாறா திட்றாங்க. ரேஸ்கோர்ஸ் போலீஸ் ஸ்டேஷன் வாசல்ல, ரெண்டு போலீஸ் திட்றதை நானே காதால கேட்டேன்.''''இவுங்க வீட்டுப் பொண்ணுங்க, பசங்க இந்த கும்பல்கள்ட்ட சிக்குனா, இவுங்க இப்பிடி பேசுவாங்களா?''''எல்லா இடத்துலயும் பணம் தான் பேசுது... ராமநாதபுரத்துல, ஸ்கூல் புள்ளைய, பல பேரு சேர்ந்து சீரழிச்சப்ப, ஊரே கொந்தளிச்சது. ஒருத்தரு வீட்டையே நொறுக்குனாங்க. இப்போ, எல்லாரும் தப்பிச்சிட்டாங்க. இதுக்காக, ஒரு 'சி' செலவழிச்சிருக்காங்களாம். தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டிய ரெண்டு பேரு, ஆளுக்கு 25 லட்சம் வாங்கிட்டதா பேச்சு. அதுல ஒருத்தவுங்க லேடி.'' என்றாள் மித்ரா.''ஆளுங்கட்சிக்காரங்களே, 'எங்க 'அம்மா' நல்லா இருந்தா, இப்பிடி நடக்குமா'ன்னு கொதிச்சுப்போயி, ஏகப்பட்ட பெட்டிஷன் தட்டி விட்ருக்காங்க.'' என்றாள் சித்ரா.''காலங்காத்தால நம்ம ஊரு கதையப் பேசுனா, டென்ஷன் தான் ஏறும். நீ 'ரிலாக்ஸ்' ஆகு...நான் அப்புறம் கூப்பிடுறேன்.'' என்று அலைபேசியைத் துண்டித்தாள் மித்ரா.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X