"அள்ள, அள்ள குளத்துல பணம்'

Added : ஏப் 01, 2015
Share
Advertisement
சித்ராவும், மித்ராவும் வீட்டை விட்டு நகராமல், "டிவி' முன் தவமிருந்தனர். நியூசிலாந்து "பேட்டிங்' ரொம்ப ரொம்ப சொதப்பலாக இருந்தது. ஆர்வம் குறைந்த சித்ரா, வார இதழ், நாளிதழ்களை புரட்ட ஆரம்பித்தாள்.வெயிலுக்கு இதமாக தர்பூசணி ஜூஸ் கொடுத்து உபசரித்த மித்ரா, ""நல்லதுக்கு அனுமதி கொடுத்தாலும்... சிக்கலாகவே முடியுது, பார்த்தீங்களா...'' என ஆரம்பித்தாள்.""ஏன்... என்னாச்சு...
"அள்ள, அள்ள குளத்துல பணம்'

சித்ராவும், மித்ராவும் வீட்டை விட்டு நகராமல், "டிவி' முன் தவமிருந்தனர். நியூசிலாந்து "பேட்டிங்' ரொம்ப ரொம்ப சொதப்பலாக இருந்தது. ஆர்வம் குறைந்த சித்ரா, வார இதழ், நாளிதழ்களை புரட்ட ஆரம்பித்தாள்.வெயிலுக்கு இதமாக தர்பூசணி ஜூஸ் கொடுத்து உபசரித்த மித்ரா, ""நல்லதுக்கு அனுமதி கொடுத்தாலும்... சிக்கலாகவே முடியுது, பார்த்தீங்களா...'' என ஆரம்பித்தாள்.""ஏன்... என்னாச்சு... '' என சித்ரா, புருவத்தை உயர்த்த, ""ஆண்டிபாளையம் குளத்தை மேம்படுத்தும் பணி துவங்கியிருக்கு. பூங்கா அமைக்கும் வேலைக்கு, வேட்டுவபாளையம் குளத்துல இருந்து 500 யூனிட் மண் எடுக்க கலெக்டர் அனுமதி கொடுத்தார். அங்க எடுக்கற மண்ணும் வியாபாரம் ஆகிட்டு இருந்தது. சிலருக்கு சந்தேகமா இருந்ததால, லாரிகளை பின்தொடர்ந்து போயி, அதிர்ச்சி ஆகிட்டாங்க. காலேஜ் ரோடு பக்கத்துல இருக்கற காமாட்சி நகரில், பெரிய "பில்டிங்' கட்டுறதுக்கு, மண்ணை கொட்டிட்டு, லாரி திரும்பி வந்திருக்கு. ஒரு லோடுக்கு 1,500 ரூபாய் சம்பாதிச்சிருக்காங்க. பொதுமக்கள் முற்றுகையிட்டு பிரச்னை செஞ்சதுக்கு அப்புறம், அத்தனை லாரியையும் பறிமுதல் செஞ்சிருக்காங்க. பொதுப்பணித்துறை அதிகாரிங்க, ஒழுங்கா வேலை பார்த்தா, இப்படி நடக்குமா?'' என்று புலம்பினாள் மித்ரா.""அனுமதி கொடுத்ததே, அதிகாரிகள் தானே! அவுங்க எப்படி நடவடிக்கை எடுப்பாங்க,'' என, விடாப்பிடியாக சித்ரா கேட்டாள்.""எவ்ளோ மண் எடுக்குறாங்கன்னு கண்காணிக்கறதுக்காக, நாலு லாரிகள் மட்டும் பயன்படுத்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் அனுமதி கொடுத்திருக்காங்க; அதுக்கப்புறம் என்ன நடந்துச்சுனு தெரியலை, கூடுதலா எட்டு லாரிகளுக்கு அனுமதி கொடுத்திருக்காங்க. வேட்டுவபாளையம் குளம் சுத்தமாகுதுனு, கலெக்டர் கண்டுக்காம இருந்துட்டார். இப்ப, நடவடிக்கை எடுக்க வச்சுட்டாங்க பொதுமக்கள்,'' என்றாள் மித்ரா.தர்பூசணி ஜூசை எடுத்து பருகிய சித்ரா, ""ஆளுங்கட்சிக்காரங்க... வீதி வீதியா நீர் மோர் பந்தல் திறக்க ஆரம்பிச்சிட்டாங்க பார்த்தீயா,'' என்றாள்.""ஆமாக்கா... ஒவ்வொரு வருஷமும் திறப்பாங்க. உள்ளூர் பிரமுகர்கள், தங்களோட செல்வாக்கை நிலைநிறுத்துவதற்காக, இப்படி செய்வாங்க மக்களுக்கு நல்லது செஞ்சா ஏத்துக்கணும்,'' என, "அட்வைஸ்' செய்தாள் மித்ரா.""அது சரிதான்... அவுங்க சொந்தக்காசுல செஞ்சா "ஓகே'. இதுக்கெல்லாம், கலெக்ஷன் போடுவாங்களே. தினமும் ரெண்டு பேரல் நீர்மோர் கொடுக்குறாங்க. ராக்கியாபாளையத்தில் நடந்த திறப்பு விழாவுக்கு, பழைய பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல ரோட்டோரமா இருந்த கடையில இருந்து தர்பூசணி, வெள்ளரிக்காய்களை, மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் ஒருத்தரு, மொத்தமா அள்ளிட்டு போயிட்டார். இதை யாரிடம் போயி சொல்றதுன்னு, ரோட்டோர வியாபாரிகள் புலம்பிக்கிட்டு இருக்காங்க,'' என்ற சித்ரா, வார இதழ் ஒன்றில் வந்திருந்த பாலியல் வன்முறை தொடர்பான செய்தியை படித்து, ரொம்பவும் வருத்தப்பட்டாள்.""இப்ப, பள்ளிக்கூடத்துக்கு குழந்தைகளை அனுப்பவே ரொம்ப பயமா இருக்கு. பொம்பள பிள்ளைகளுக்கு பாதுகாப்பே இல்லாம போச்சு,'' என்றாள் மித்ரா.""நம்மூர்ல ஏதேனும் பிரச்னையா...'' என, சித்ரா கேட்க, ""பிரச்னை வராம மூடி மறைச்சிட்டாங்க. அது, மூன்றெழுத்து பள்ளிக்கூடம். கம்ப்யூட்டர் வாத்தியார், ஒரு மாணவியை கையை பிடித்து இழுத்து, நீ ரொம்ப அழகா இருக்கே; என்னை பிடிச்சிருக்குன்னு சொல்லு என கட்டாயப்படுத்தியிருக்கார். காப்பாத்துறதுக்கு யாருமே இல்லாம, அந்தப்பொண்ணு தவியா தவிச்சுருக்கு. எதேச்சையா ஒரு மாணவன் வகுப்பறைக்கு வந்ததும், தன்னுடைய பிடியை வாத்தியார் தளர்த்தியிருக்கார். ஒடனே, அம்மாணவி தப்பிச்சு வந்து, வகுப்பாசிரியரிடம் விஷயத்தை சொன்னதும், பள்ளிக்கூடம் பரபரப்பாகிடுச்சு. அந்த வாத்தியார், தலைமறைவாகிட்டார். விஷயம் வெளியே தெரிஞ்சா, ஸ்கூலுக்கு அவப்பெயர்னு, மூடி மறைச்சிட்டாங்க,'' என மனம் நொந்தபடி, மித்ரா சொன்னாள்.""இனிமே, சபல வாத்தியார்களுக்கு, மன நல ஆலோசனை கொடுக்கணும் போலிருக்கு,'' என்றபடி, கிரிக்கெட் மேட்ச் பார்க்க ஆரம்பித்தாள் சித்ரா.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X