தமிழ்நாடு

பராமரிப்பின்றி விரகனூர் பூங்கா பரிதாபம்! பொதுப்பணித்துறை முன்வருமா?

Added : ஏப் 05, 2015
Advertisement
பராமரிப்பின்றி விரகனூர் பூங்கா பரிதாபம்! பொதுப்பணித்துறை முன்வருமா?

மதுரை : மதுரை விரகனுாரில் பராமரிப்பின்றி பொதுப்பணித் துறைக்கு சொந்தமான பூங்கா பாழாகி வருகிறது.

மதுரையில் குழந்தைகளுக்கான பூங்காக்கள் குறைவு. மாநகராட்சி வசமுள்ள ஈகோ பூங்கா மற்றும் ராஜாஜி பூங்கா இன்றும் முறையாக பராமரிக்கப்பட்டு, வருவாய் ஈட்டித் தருகின்றன. பொதுப் பணித்துறைக்கு சொந்தமான விரகனுார் பூங்கா உட்புறம் நிரந்தரமாக பூட்டப்பட்டுள்ளதால் பார்வையாளர்கள் இன்றி வெறிச்சோடி கிடக்கிறது.

அணை முகப்பில் செங்கற்களால் வடிவமைக்கப்பட்ட யானை சிலை பராமரிப்பின்றி நலிந்த நிலையில் காட்சியளிக்கிறது. ஆங்காங்கு புதர்களும், காய்ந்த செடிகளுமாக பயமுறுத்துகின்றன. அருகில் அணை இருந்தும் மரங்கள் பராமரிக்கப்படவில்லை. வைகை அணை பூங்கா பொதுப்பணித் துறையால் அழகாக பராமரிக்கப்படுகிறது. பூங்காவை சுத்தம் செய்து மரம், செடிகளுக்கு தண்ணீர் ஊற்றினால் தனியழகு பெறும்.

பூங்காவின் நிலை குறித்து அப்பகுதியை சேர்ந்த பாலாஜி கூறியதாவது: பூங்கா பின்பகுதியில் உள்ள படிக்கட்டை மண்ணை கொட்டி மூடி விட்டனர். எந்தப்பக்கம் திரும்பினாலும் காடாக இருப்பதால் குடும்பத்துடன் வர மக்கள் பயப்படுகின்றனர். பூங்கா, அணைக்கு நடுவில் உள்ள மண் ரோட்டை சிலர் 'பார்' ஆக மாற்றி விட்டனர். போலீசாரை நியமித்து சமூக விரோதச் செயல்களை தடுத்தால் பொதுமக்கள் வந்து செல்வர் என்றார். பூங்காவை புதுப்பிக்க பொதுப்பணித்துறை முன்வருமா.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X