வெற்றி கொடி கட்டு.....| Dinamalar

வெற்றி கொடி கட்டு.....

Added : ஏப் 05, 2015 | கருத்துகள் (1)
வெற்றி கொடி கட்டு.....

பெண்கள் முதலில் தன்னை தானே அறிந்து கொள்ள வேண்டும். உலகில் நிறைய சந்தர்ப்பங்கள் கொட்டி கிடக்கின்றன. தன்னிடமுள்ள திறமையை உணர்ந்து அதை வளர்த்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
முதலிடத்தை நோக்கி முன்னேறிக் கொண்டுள்ள பெண் தொழில் முனைவோரில் இவருக்கும் ஓர் இடமுண்டு. நான்கு தையல் மெஷின்களுடன் துவங்கிய நிறுவனம், இவர் பொறுப்பு ஏற்றதற்கு பின் முன்னணி இடத்தை பிடித்ததற்கு இவரது பின்னணியும் காரணம். புதிய தொழில்முனைவோர்களை உருவாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வரும் மதுரை 'மைக்ரோ பைன் குளோத்திங்' இணை நிர்வாக இயக்குனர் சுபா பேசுகிறார்* மதுரை தான் சொந்த ஊரா?நான் பிறந்தது நெல்லை. அங்கு தான் எம்.ஏ., ஆங்கில இலக்கியம் முடித்தேன். என் கணவர் பிரபாகரன் மதுரைக்காரர்.* படித்தது ஆங்கிலம்... பார்ப்பது நிர்வாகமா?குழந்தைகள் வளர்ந்த பிறகு வீட்டில் சும்மா இருப்பதைவிட, ஏதாவது செய்யலாம் என கணவரிடம் தெரிவித்த போது, சிறிய அளவில் ரெடிமேட் யூனிட் துவக்க முடிவானது. ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு நான்கு தையல் மெஷின்களை வைத்து ஆண்களுக்கான பிரத்யேகமாக சர்ட் தயாரிப்பை துவக்கினோம். புதிய மாடல்களில் வெளியான தயாரிப்புகளுக்கு வரவேற்பு கிட்டியது. சிறிது சிறிதாக விரிவுபடுத்த இந்தளவு வளர்ச்சியை எட்டினோம்.* பெரிய நிறுவன தயாரிப்புகளை எப்படி சமாளிக்கிறீர்கள்?தரம் மற்றும் குறிப்பிட்ட நேரத்திற்குள் டெலிவரிக்கு முன்னுரிமை கொடுக்கிறோம். பெரிய நிறுவனங்களுக்கு சில ஆண்டுகளுக்கு முன் வரை சர்ட் தயாரித்து கொடுத்தோம். அவர்களிடமிருந்து தரத்தை கற்று கொண்டேன். தற்போது எங்கள் தயாரிப்புகள் அவர்களுக்கு இணையாக எல்லா இடங்களிலும் கிடைக்கிறது.* மதுரையில் பணியாட்கள் கிடைக்கிறார்களா?என்னை பொறுத்தவரையில் பெண்கள் வேலைக்கு வருகின்றனர். முதலில் அவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தி, சொந்தக்காலில் நிற்கும் எண்ணத்தை உருவாக்கி விடுவேன். நிறுவனத்தில் தொழிலாளியாக யாரையும் கருதுவதில்லை. இங்கு வந்தவர்கள் சந்தோஷமாக தொழில் கற்று பணிபுரிகின்றனர்.* தமிழ்நாடு சேம்பர் பவுண்டேஷனின் 'சார்ப்' தலைவராகவும் இருக்கிறீர்களாமே?மாணவ, மாணவியரிடமுள்ள மென் ஆற்றலை வெளிக்கொண்டு வந்து, எதிர்காலத்தில் சிறந்த தலைமை பண்புமிக்கவர்களாக மாற்றும் பணியில் 'சார்ப்' ஈடுபட்டுள்ளது. இதை விட மனநிறைவை தரும் பெரிய சேவை வேறு இருக்காது.* சொல்ல விரும்புவது?பெண்கள் முதலில் தன்னை தானே அறிந்து கொள்ள வேண்டும். உலகில் நிறைய சந்தர்ப்பங்கள் கொட்டி கிடக்கின்றன. தன்னிடமுள்ள திறமையை உணர்ந்து அதை வளர்த்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உதாரணமாக இசையில் ஆர்வம் இருந்தால் சினிமா பாடகராக முடியாத போதும் கூட, அத்துறை சார்ந்த இசை உபகரணங்களை கையாளலாம், அதை உற்பத்தி செய்யலாம், வாங்கி விற்கலாம்.* சமைக்கத் தெரியுமா?எனக்கு நன்றாக சமைக்க தெரியும்.* குடும்பத்தினர் ஒத்துழைப்பு தருகிறார்களா?நான் இந்தளவுக்கு சாதிக்க கணவர் பிரபாகரன் தரும் ஒத்துழைப்பு தான் காரணம். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னால் பெண் இருப்பதாக சொல்வர். ஆனால் என் வெற்றிக்கு பின்னால் என் கணவரும் குடும்பத்தினரும் உள்ளனர்.வாழ்த்த shubamicro@gmail.com

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X