திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லூரில் பெண்ணை கடத்தியதாக வாலிபர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். திருவெண்ணெய்நல்லூரைச் சேர்ந்த விநாயகம் மகள் கண்மணி,(25). இவர் இங்குள்ள தனியார் கம்ப்யூட்டர் பயிற்சி மையத்தில் பணி புரிந்து வந்தார். இவர் கடந்த 23ம் தேதி மாலை 5:00 மணிக்கு வீட்டிற்கு போன் செய்து வேலை விஷயமாக மூன்று நாள் வெளியூர் சென்று வருவதாக கூறிச் சென்றவர், வீடு திரும்பவில்லை. இந்நிலையில் கன்னாரம்பட்டைச் சேர்ந்த குப்புசாமி மகன் ராஜ்,(19), என்பவர் தனது மகளை கடத்திச் சென்றதாக, கண்மணியின் தாய் மலர்கொடி போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் அகிலன் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.