பொது செய்தி

தமிழ்நாடு

குடிநீர் பகிர்மான குழாயில் கழிவுநீர் கலக்கும் அவலம்

Added : ஏப் 08, 2015
Share
Advertisement
கம்பம்: குடிநீர் செல்லும் மெயின் பகிர்மான குழாயில் சாக்கடை கழிவு நீர் கலக்கிறது. பகிர்மான குழாய் <உடைப்பை சரிசெய்து சாக்கடை கலப்பதை தடுக்க குடிநீர் வடிகால் வாரியம் முன்வர வேண்டும்.லோயர்கேம்பில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பம்பிங் ஸ்டேஷனில் இருந்து கம்பம், கூடலூர், புதுப்பட்டி, காமயகவுண்டன்பட்டி, அனுமந்தன்பட்டி, உத்தமபாளையம், கோம்பை, பண்ணைப்புரம்

கம்பம்: குடிநீர் செல்லும் மெயின் பகிர்மான குழாயில் சாக்கடை கழிவு நீர் கலக்கிறது. பகிர்மான குழாய் <உடைப்பை சரிசெய்து சாக்கடை கலப்பதை தடுக்க குடிநீர் வடிகால் வாரியம் முன்வர வேண்டும்.
லோயர்கேம்பில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பம்பிங் ஸ்டேஷனில் இருந்து கம்பம், கூடலூர், புதுப்பட்டி, காமயகவுண்டன்பட்டி, அனுமந்தன்பட்டி, உத்தமபாளையம், கோம்பை, பண்ணைப்புரம் மற்றும் தேவாரம் ஆகிய ஊர்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
இதில் கோம்பை, பண்ணைப்புரம், தேவாரம் ஊர்களுக்கு தனி பைப்லைன் பதிக்கப்பட்டு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.
கம்பம் மெயின்ரோட்டில் பத்திரப்பதிவு அலுவலகம் அருகில் மெயின் பகிர்மான குழாய் உடைந்து குடிநீருடன் கலக்கிறது. இந்த இடத்தில் மழை காலங்களில் சாக்கடை கழிவு நீர் ரோட்டிற்கு வந்து விடும். சாக்கடை மறிக்கப்பட்டிருப்பதாலும், மெயின்ரோட்டில் சாக்கடை வசதி இல்லாததாலும் சாக்கடை சங்கமமாகும். எனவே மெயின்பகிர்மான குழாயில் சாக்கடை கழிவு நீர் கலந்து கோம்பை பகுதி மக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இப்பகுதியில் வசிப்பவர்கள் கூறியதாவது: சாக்கடை கழிவு நீர் கடந்த ஒரு மாதமாக கலந்து செல்கிறது. இது தொடர்பாக நாங்கள் பலமுறை கூறியும் நடவடிக்கை இல்லை. பாவம் கோம்பை பகுதி மக்கள் சாக்கடை கலந்த குடிநீரை பருகி வருகின்றனர், என்றனர்.
குடிநீர் வடிகால்வாரியத்தினர் கூறுகையில், "அந்த இடத்தில் சாக்கடை நீர் தேங்கி நிற்கிறது. அடிக்கடி குழாய் பழுதாகி பிரச்னை ஏற்படுகிறது. கடந்த வாரம் கூட பராமரிப்பு பணி மேற்கொண்டோம். கழிவு நீர் கலக்கவில்லை. தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X