TN AP war over on Encounter | தமிழர்கள் சுட்டுக்கொலை; வழக்கு பதிய ஆந்திர ஐகோர்ட் உத்தரவு| Dinamalar

தமிழர்கள் சுட்டுக்கொலை; வழக்கு பதிய ஆந்திர ஐகோர்ட் உத்தரவு

Added : ஏப் 10, 2015 | கருத்துகள் (32)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
வன பகுதியில் தமிழர்கள் சுட்டுக்கொலை ; வழக்கு பதிவு செய்ய ஆந்திர ஐகோர்ட் உத்தரவு

ஐதராபாத்: ஆந்திர எல்லையில் தமிழர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்ய ஆந்திர ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனை தொடர்ந்து இது தொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணைக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார்.
சித்தூர் வன பகுதியில் செம்மரக்கடத்தலில் ஈடுபட்ட தமிழர்கள் 20 பேர் கடந்த 7ம் தேதி சுட்டு கொல்லப்படனர். இது தொடர்பாக தமிழகத்தில் கடும் கண்டனம் எழுந்தது. இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும் என ஆந்திர ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மனுவை விசாரித்த ஐகோர்ட், ஆந்திர அரசை கண்டித்தது. இது தொடர்பாக ஏன் கொலை வழக்கு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யவில்லை என்று கேள்வி எழுப்பியது. இந்த சம்பவத்தை கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

கொதிக்கிறார் ஆந்திர அமைச்சர் ; இதற்கிடையில், சித்தூரில் கொல்லப்பட்டவர்கள் தொழிலாளர்கள் அல்ல., அவர்கள் மரக்கடத்தல்காரர்கள் என ஆந்திர வனத்துறை அமைச்சர் பி.ஜி., ரெட்டி கூறியுள்ளார். ஆந்திர வளத்தை கொள்ளையடித்தவர்கள் மரக்கடத்தல்காரர்கள். இறந்தவர்களுக்கு நிவாரணம் கேட்பது சரியல்ல. அப்படியானால் வீரப்பன் குடும்பத்தினருக்கும் நிவாரணம் வழங்க முடியுமா? இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். மத்திய அரசு கண்டிக்க வேண்டும் என்றும் ம.தி.மு.க., பொதுசெயலர் வைகோ கோரியுள்ளார்.

வேலூரில் வைகோ கைது ; ஆந்திராவில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து சித்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட போவதாக ம.தி.மு.க., பொதுசெயலர் வைகோ அறிவித்திருந்தார். இன்று வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினார். தொடர்ந்து அவர் தொண்டர்களுடன் ஊர்வலமாக புறப்பட்டு சென்றார். வேலூர் காந்திசிலை அருகே வைகோவை தமிழக போலீசார் கைது செய்தனர். இதற்கிடையில் வைகோவுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. லேசான மயக்கம் அடைந்த அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

Advertisement
வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
aru - chennai,இந்தியா
11-ஏப்-201512:32:34 IST Report Abuse
aru this is a planned murder by AP Govt with the knowledge of CM and Home Minister. No law will spare who breaks the law. But severity of punishment is on basis of crime. If they smuggled the rose wood, yes , punishment should be given and not their lives. We are still discussing total pnishment should be stopped. Encounter of a single person should get prior approval of CM and Home minister. How this mass encounter happened without the knowledge of them. they are liers. Bring them also in the FIR and make them also offenders. Judicial forum take this issue very seriously and punish the culprits involved with maximum punishment. what will happend if all states take similar attitude. People are still faith in judisiory and it should be uphold by it.
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
11-ஏப்-201512:03:40 IST Report Abuse
Nallavan Nallavan அன்புமணியின் சகோதரி சம்பந்தி செம்மரக்கட்டை கடத்தல் வழக்கில் கைதானாரே அது என்னவாயிற்று ?
Rate this:
Share this comment
Cancel
Thamizhan - Tamizhnadu,இந்தியா
11-ஏப்-201512:01:00 IST Report Abuse
Thamizhan நிச்சயமாக இதில் பல அமைச்சர்கள் மற்றும் பெரிய பணக்கார முதலைகள் அதிலும் ரெட்டி இனத்தை சேர்ந்த காட்டுவாசிகள் இருப்பதனால் ,உளவு அமைப்புகள் வேவு பார்பதரிந்து ,இந்த தொழிலாளிகளை விட்டால் அவர்களை காட்டிகொடுத்துவிடுவார்கள் என்று சுட்டு கொன்றிருக்கலாம் ,இந்திய அரசு வேடிக்கை பார்ப்பது மிகவும் வேதனையாக இருக்கிறது ,ஆப்ரிக்க காட்டுவாசிகள் ஆந்திராவை ஆட்டிபடைப்பதை இந்திய அரசு கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் வேடிக்கைதான் பார்க்கின்றது ,சாவது தமிழர்களோ அல்லது ஏழை மக்கலோதானே என்ற எண்ணம் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X