ஈடு இணையில்லா குளத்து பாசனம்| Dinamalar

ஈடு இணையில்லா குளத்து பாசனம்

Added : ஏப் 14, 2015 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
ஈடு இணையில்லா குளத்து பாசனம்

பூமியின் பரப்பில் 71 சதவீதம் கடலும், 29 சதவீதம் நிலமும் உள்ளன. பூமியில் உள்ள நீரின் கொள்ளளவில் 97 சதவீதம் தொண்டை கரிக்கும் உப்பு நீர், கடலில் தான் உள்ளது. மீதமுள்ள 3 சதவீதம் தான் சுவையான குடிநீர். இதில் 76 சதவீதம் பனி ஓடைகளிலும், 23 சதவீதம் பூமிக்கடியிலும், 0.34 சதவீதம் ஆறுகள், குளங்களிலும், மீதமுள்ளவை மேகங்களிலும் நீராவி வடிவத்தில் உள்ளன.தூய நீர், நல்ல நீர், உப்பு கரிக்கும் நீர் என மூன்று வகை நீர் உண்டு. தூய நீர் ருசியற்றது. குடிக்க உபயோகப்படாது மற்றும் இது இயற்கையில் கிடைப்பதல்ல. நல்ல நீர் கனிம பொருட்கள் கலந்தது. பருகுவதற்கு தகுதியானது. கடல் நீர் முழுவதும் உப்பு நீர். புவியின் நீரில் 133.8 கோடி கன கிலோ மீட்டர் அளவு கடல் நீர் ஆகும். கடல் நீர் 96.5 சதவீதம் தூய நீரும், 37 வகை உப்பும் கலந்த மூலப்பொருட்களும் சேர்ந்தது. பூமத்திய ரேகைக்கு வடபகுதியில் நிலப்பரப்பு அதிகம். அணைக்கட்டுகளும், நீர் தேக்கங்களும் அதிகம் வடபகுதியில் தான் அமைந்துள்ளன. இதன் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் குறைகிறது. ஆகவே கடல் மட்டம் கடந்த 40 ஆண்டில் 3 செ.மீ., கீழ் நோக்கி சென்று விட்டது. இதனால் நில நடுக்கம், எரிமலைகள், சுனாமி, நிலச்சரிவுகள் ஏற்பட காரணமாகிறது.


கடல் மட்டம் குறையாது:

கடல் நீர் பனி காலத்தில் உறையும். கடல்நீர் ஆவியாக மாறும் போது அதிலுள்ள தூய நீர் மட்டும் ஆவியாக மாறும். உப்பு பாகம் கடலில் தங்கி விடும். ஆவியாகும் நீர் மேகமாக மாறி மழையாக கடலுக்கு திரும்பும். கடல் இழந்த நீருக்கு, மழை நீர் மட்டும் ஈடு செய்யாது. ஈடு செய்ய நதி நீர் இருக்கிறது. வெயில் காலத்தில் பனிக்கட்டி ஆறுகள் உருகி கடலுக்கு நீர் அனுப்பி கடல் மட்டம் குறையாமல் பார்த்து கொள்ளும். உலகம் முழுவதும் அமைக்கப்படும் அணைக்கட்டுகள் நதிநீர் முழுவதும் கடலுக்கு செல்லாமல் தடுக்கின்றன. பூமியின் புவியீர்ப்பு, சுழல் சக்தியும் சமமாக இருந்தால் கடல் நீர் மட்டம் ஒரே சீராக இருக்கும். கடல் நீர் உறையும் போது அதிலுள்ள தூய நீர் மட்டும் உறையும். உப்பு கலவை கீழே நின்று விடும். 15 சதவீத கடல் நீர் பனிக்கட்டிகள் நிறைந்தது. நதியின் நீர் வெப்பமாக உள்ளதால் கடலில் கலந்து பனிக்கட்டிகளை கரைக்கும்.

நதி கடற்கரையை நெருங்கியவுடன் அது கொண்டு வரும் கற்கள், மணல், வண்டல், களிமண் ஆகியவற்றை கடற்கரையில் தள்ளி விட்டு நல்ல நீர் மட்டும் கடலில் கலக்கும். கடல் அலை கரைக்கு வந்து, நதி கொண்டு வந்த அனைத்து பொருட்களையும் கடலுக்குள் கொண்டு செல்லும். கடல் வாழ் உயிரினங்கள் கூடு கட்டவும், கடல் தாவரங்கள் வளர்வதற்கும் வண்டலும், களியும் தான் தேவை. மற்ற கடின பொருட்களை கடல் அலை மீண்டும் கரையில் கொண்டு வந்து கொட்டி செல்லும். இவற்றில் பல தாது பொருட்கள் கலந்திருக்கும். சில நதிகள் கொண்டு வரும் களியில் தார் கலந்திருக்கும். இதற்கு ஷேல் என பெயர். இதை கடல் அதன் கரைக்கு கொண்டு சென்று ஆயிரக்கணக்கான மீட்டர் ஆழத்திற்கு பல லட்சம் ஆண்டுகளாக அழுத்தி வைத்திருக்கும். அதில் தான் தற்போது ஆழ்கடல் எண்ணெய்யும், எரிவாயுவும் எடுக்கிறார்கள். ஆகவே கடற்கரையில் கிடக்கும் கல்லும், மணலும் கடலுக்குள் கிடக்கும் சில பொருட்களும் நதிகளால் வந்தவை. கடல் ஓர் சேகரிப்பு இடம்.


கடலின் உப்பு சக்தி:

நதிகள் தற்போது 35 ஆயிரம் கன கி.மீ., அளவு நல்ல நீரையும் 200 கோடி டன் வண்டலையும் ஒரு வருடத்தில் கடலுக்கு அளிக்கிறது. கடல் வாழ் உயிரினங்களில் 90 சதவீதத்திற்கு மேல் மாமிச பட்சனிகள் அவை தனக்கு வேண்டிய நீரை அவை உண்ணும் சிறுபிராணிகளின் ஊனிலுள்ள நீர் மூலம் எடுத்து கொள்ளும். தேவைப்பட்டால் கடல் நீரை குடிக்கும். கடல் பிராணிகளின் சிறுநீரகம் சக்தி வாய்ந்தது. கல் உப்பை சிறுநீர் வழியாக ?வளியே தள்ளிவிடும். நதிநீர் கடலில் சேராவிட்டால் கடலின் உப்பு சக்தி அதிகமாகி கடல்வாழ் உயிரினங்கள் அழிய ஆரம்பிக்கும். பாதரசம் காற்றிலும், பூமியிலும் தாவரங்களிலும் நதிகளிலும் கலந்து கிடக்கிறது. மேலும் எரிமலைகளும் காடுகளை அழைப்பதாலும் பாதரசம் பல தூரம் காற்று மூலம் பரவி, நீர் தேக்கங்களிலும் வனங்களிலும் பரவிக்கிடக்கின்றன. அணைகளிலும் மற்ற நீர் தேக்கங்களிலும் உள்ள மீன் முதலிய உயிரினங்கள் பாதரசம் கலந்த நீரை குடிக்கும். அம்மீன்களை நாம் சாப்பிட்டால் மூளையை பாதிக்கும். நாம் மீன்களை சோதிப்பதில்லை. மீன்களிலும் மீன் சேர்ந்த உணவுகளிலும் ஒரு கிலோவிற்கு அரை மில்லி கிராம் எடைக்கு மேல் பாதரசம் இருந்தால் அதை சாப்பிடக்கூடாது. நம் மூளை, இதயம், கிட்னி, நுரையீரல், நரம்பு மண்டலம் முதியவற்றை பாதிப்பதுடன் நம் சந்ததியையும் பாதிக்கும். இதை நன்கு அறிந்த நமது மூதறிஞர்கள் குளங்களில் கருவேல மரங்களை வைத்து வளர்த்தார்கள். இவை பாதரசம் படியாமல் தடுக்கும் தன்மை வாய்ந்தவை.

நம் நாட்டில் தேயிலை பயிரிட சுமார் 24 லட்சம் ஏக்கர் பரப்பிலுள்ள மரங்கள், அடர்ந்த காடுகளை ஆங்கிலேயர்கள் அழித்துள்ளனர். ஒடிசாவிலிருந்து ராமநாதபுரம் வரை 1500 கி.மீ., தூரம் கிழக்கு கடற்கரையோரம் இருந்த அடர்ந்த காடுகளை, ஆங்கிலேய அரசை பாதுகாக்க அழித்துள்ளனர். ஆந்திரா, தமிழகத்தில் குளத்து பாசனம் அதிகம். தமிழகத்தில் மட்டும் 24 ஆயிரம் குளங்கள் இருந்தன. அவை தற்போது தென்னந்தோப்புகளாகவும், நஞ்சை நிலங்களாகவும் மாறி விட்டன. அணைகள் ஆற்றின் 20 சதவீத நீரை மட்டும் பிடித்து வைக்குமாறு அமைக்க வேண்டும். குளங்களை பாதுகாத்து, மரங்களை அழிக்காமல் இருந்தாலே போதும். நீர் பஞ்சமே இருக்காது. அணைக்கட்டுகளால் விவசாயத்திற்கு போதிய நீர் கிடைக்கும். வெள்ளச்சேதத்தை தடுக்கலாம். போதிய மின்சாரம் உற்பத்தி செய்யலாம். சுற்றுலா பயணிகளை கவரலாம். ஆனால் அதே அணைக்கட்டுகளால் சில தீமைகளும் உள்ளன. கடல்நீரின் உப்பை ஆற்றுநீர் சென்று சரி நிலையில் வைப்பதை அணைகளில் நீரை தேக்கி வைப்பது கெடுக்கிறது. கீழுள்ளநிலங்களுக்கு உரம் கலந்த வண்டல் மண் கிடப்பதை தடுக்கிறது. மீன்கள் வளர்வதை தடுக்கிறது. நீர் தேக்கங்கள் சுற்றியிருக்கும் பாறைகளை அழுத்துவதால் நில நடுக்கத்திற்கு வாய்ப்புள்ளன. அணைக்காக மரங்களை அழிக்க நேரிடும். குடியிருப்புகளை காலி செய்ய நேரிடும். எனவே மின் உற்பத்திக்காக ஆற்றில் ஓர் அளவு உயரத்திற்கு தான் அணை கட்ட வேண்டும். 500, 1000 அடி உயரத்திற்கு அணை கட்டி தண்ணீர் தேக்க கூடாது. பாண்டிய மன்னர் காலத்து குளத்து பாசன முறைக்கு இணை ஏதும் கிடையாது. இதை நம் நாட்டிற்கு சேவை செய்ய வந்த ஆங்கிலேய பொறியாளர் சர் ஆர்தர் காட்டன் தெரிவித்துள்ளார். எனவே குளத்து பாசன முறையை நாம் குறையில்லாமல் செயல்படுத்த வேண்டும்.

- எஸ்.ராமநாதன், முன்னாள் பொறியாளர், நெடுஞ்சாலைத்துறை, 94440 20990.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venkat Iyer - nagai,இந்தியா
18-ஏப்-201507:09:06 IST Report Abuse
venkat Iyer நாக்கை மாவட்டத்தில் கடல் நீர் உள்ளெ புகுந்து நிலத்து நீர் உப்பின் தன்மை அதிகரித்து வருகின்றது.குளங்களை பராமரித்து மழை நீரை சேகரிக்கும் போது,உப்பின் தன்மையை மாற்ற முடியும். அந்த வகையில்,இந்த மாவட்டத்தில் சில லட்சங்களை செலவித்து ஆகக்குறை சேர்ந்த நடராஜன் என்பவர் குளத்தினை வெட்டினார்.நிலத்தினை விவசாயம் செய்ய வேண்டி,மழை நீரை குளத்தில்,மேட்டூர் அணை போல ஏற்றினார்,விவசாய பம்ப்செட்டின் மூலம், உப்பு நீரை குளத்தில் மேலும் ஏற்றி பல ஹெக்டேர் நிலங்களை சாகுபடி செய்யும் நிலைக்கு கொண்டு வந்தார். இன்று மின்சார வாரியம் அவருக்கு ஐந்து லட்சம் அபராதம் போட்டு, நிலங்களை சுடுகாடுகளாக மாற்றி விட்டது. அவர்,இதனை அறிந்து மன அதிர்ச்சி ஏற்பட்டு உயிர் இழந்து விட்டார்.அவரும் நிலங்களை போல சுடுகாடுகளுக்கு சென்று விட்டார்.சமுதாயத்தில்,விவசாயிகளுக்கு மரியாதை கொடுக்காத எவரும் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை.விவசாயிகளை மதிக்க கற்று கொள்ளுங்கள்.கருணாநிதியின் உயிர் சில நேரங்களில் அவர் விவசாயிகளுக்கு செய்த உதவிதான்.
Rate this:
Share this comment
Cancel
Shekar Raghavan - muscat,ஓமன்
15-ஏப்-201506:58:18 IST Report Abuse
Shekar Raghavan ஏழையின் வாக்கு அம்பலம் ஏறது - காசு பணம் துட்டு என ஆளும் நம்மவருக்கு
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X